Just In
- 2 hrs ago
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- 10 hrs ago
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- 10 hrs ago
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 10 hrs ago
உங்க வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வீட்டுல வையுங்க...
Don't Miss
- News
கருணாநிதி பேனா.. நினைவிடங்கள் அறிவிக்கப்பட்ட இடுகாடு..தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசு சொன்ன பதில்
- Technology
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- Movies
தளபதி 67 டைட்டில் லியோ... வெல்கம் ட்வீட் செய்த CSK.. விஜய் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்?
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வீட்டிலேயே சுவையான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
இன்று இரவு உங்கள் வீட்டில் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருப்போர் இன்று ஸ்பெஷலாக ஏதாவது செய்து தர கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சில்லி பரோட்டாவை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் இன்று அந்த சில்லி பரோட்டாவை வீட்டில் செய்து கொடுத்து அவர்களை அசத்துங்கள். உங்களுக்கு பரோட்டா செய்யத் தெரியாவிட்டால் பரவாயில்லை. தற்போது கடைகளில் இன்ஸ்டன்ட் பரோட்டா விற்கப்படுகிறது. அவற்றை வாங்கி வந்து தோசைக் கல்லில் போட்டு சூடேற்றினால் பரோட்டா தயார். பின் அதைக் கொண்டு சில்லி பரோட்டாவை செய்யுங்கள்.
உங்களுக்கு சில்லி பரோட்டா எப்படி செய்வது என்று தெரியாதா? கீழே சில்லி பரோட்டாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
* பரோட்டா - 2
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
* க்ரீன் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பரோட்டாக்களை எடுத்து அவற்றை கத்தி பயன்படுத்தி சிறு சதுரத் துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், துண்டுகளாக்கப்பட்ட பரோட்டாக்களைப் போடு 2 நிமிடம் பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி லேசாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் 1/2 டீஸ்பூன் சோயா சாஸ் மற்றும் 1 டீஸ்பூன் க்ரீன் சில்லி சாஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.
* இப்போது அதில் 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி கிளற வேண்டும். கலவை சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் வதக்கி வைத்துள்ள பரோட்டாக்களை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி மீண்டும் கிளறி இறக்கினால், சுவையான சில்லி பரோட்டா தயார்.
குறிப்பு:
* உங்களுக்கு கொத்தமல்லி சேர்க்க பிடிக்காவிட்டால், ஸ்பிரிங் ஆனியனை மட்டும் சேர்க்கலாம்.
* வேண்டுமானால், இறுதியாக சிறிது மிளகுத் தூளை மேலே தூவிக் கொள்ளலாம்.
* விருப்பமுள்ளவர்கள் பரிமாறும் போது மேலே சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்து பரிமாறலாம். இதனால் சுவை இன்னும் அலாதியாக இருக்கும்.
* சாதாரண மிளகாய் தூளுக்கு பதிலாக காஷ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்தினால், சில்லி பரோட்டா ரெஸ்டாரண்ட்டுகளில் கொடுப்பது போன்று சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும்.
* விருப்பமுள்ளவர்கள் பரோட்டா துண்டுகளை எண்ணெயில் பொரித்து பின் பயன்படுத்தலாம்.
* தற்போது இன்ஸ்டன்ட் பரோட்டாக்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி, அதை தோசைக் கல்லில் போட்டு வேக வைத்து எடுத்த பின், அவற்றை துண்டுகளாக்கி பயன்படுத்தலாம்.
Image Courtesy: sharmispassions