சிக்கன் தொக்கு

நீங்கள் அடிக்கடி சிக்கன் வாங்கி சாப்பிடுபவரா? இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் சிக்கனைக் கொண்டு தொக்கு செய்து சாப்பிடுங்கள்.

Posted By:

நீங்கள் அடிக்கடி சிக்கன் வாங்கி சாப்பிடுபவரா? இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் சிக்கனைக் கொண்டு தொக்கு செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் தொக்கு சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதம் மற்றும் புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த சிக்கன் தொக்கு பேச்சுலர்களும் செய்ய ஏற்றது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறு சுவையாக இருக்கும்.

Chicken Thokku Recipe In Tamil

உங்களுக்கு சிக்கன் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் - 3/4 கிலோ

* வெங்காயம் - 2 (நறுக்கியது)

* தக்காளி - 1 (அரைத்தது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் - 2

* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

* சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

* சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* கறிவேப்பிலை - சிறிது

* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் கழுவிய சிக்கனில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு வதக்கி மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி கிளற வேண்டும்.

* பிறகு அதில் மசாலா பொடிகளை சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* அதன் பின் அதில் வறுத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து எண்ணெய் பிரிய வேக வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான சிக்கன் தொக்கு தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 14, 2022, 18:20 [IST]
Desktop Bottom Promotion