Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு பிரட்டல் செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
Chicken Pirattal Recipe In Tamil: உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கினால் எப்போதும் ஒரே மாதிரி சிக்கன் 65 தான் செய்வீர்களா? இப்படி சிக்கன் 65 செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாகவும், சிம்பிளாகவும் ஒரு சிக்கன் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் அதிகம் மெனக்கெடாமல் சிம்பிளாக சிக்கன் சைடு டிஷ் செய்ய வேண்டுமா?
அப்படியானால் சிக்கன் பிரட்டலை செய்யுங்கள். இந்த சிக்கன் பிரட்டல் செய்ய மசாலா ஒன்று அரைத்து, சிக்கனுடன் சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்தால் போதும், பின் 10 நிமிடத்தில் சூப்பரான சிக்கன் சைடு டிஷ் தயாராகிவிடும். இந்த சிக்கன் பிரட்டல் பேச்சுலர்களும் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் பிரட்டலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் பிரட்டல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பட்டை - 1
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* புளித்த தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம், சோம்பு, கிராம்பு, ஏலக்காய்,
பட்டை, காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட்,
புளித்த தயிர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்து, அத்துடன் அரைத்த
மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, முடி
வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட்டு,
மிதமான தீயில் வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்து, நீர் வற்றியதும், அதில் கொத்தமல்லி மற்றும்
கறிவேப்பிலையை தூவி கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் பிரட்டல்
தயார்.



Click it and Unblock the Notifications











