Latest Updates
-
April 2026 Monthly Horoscope: ஏப்ரல் மாதத்தில் மகாராஜா மாதிரி வாழப்போற 4 ராசிகள் இவங்கதான்...! -
ராகி பன் தோசையும்.. வேர்க்கடலை சட்னியும்..- எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமும், அதிர்ஷ்டமும் வீட்டை தேடிவருமாம்...! -
1 வருடம் கழித்து மீன ராசிக்கு செல்லும் புதன்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது... -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல்வாதிகள் ஏன் நீர்மோரை விரும்புகிறார்கள்? -
1 கப் கோதுமை மாவு, 1 ஆப்பிள், 1 வாழைப்பழம் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. -
மங்களாதித்ய ராஜயோகத்தால் ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது... -
கொளுத்தும் வெயிலுக்கு இப்படி தக்காளி ரசம் வெச்சு சாப்பிடுங்க.. ருசியாவும், இதமாவும் இருக்கும்... -
April Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
World Tuberculosis Day 2026: உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப காசநோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
அடுத்தமுறை சிக்கனை வாங்குனா இப்படி மசாலா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்..
Pakistani Style Chicken Masala Recipe In Tamil: விடுமுறை நாட்களில் வீட்டில் காலையில் இட்லி-கறிக்குழம்பு அல்லது பூரி-சிக்கன் மசாலா செய்து சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் சிக்கனை கொண்டு செய்யக்கூடிய மசாலாவை ஒரே விதத்தில் தான் செய்வீர்களா? இதனால் சில சமயங்களில் போரடித்துவிடுகிறதா?
அப்படியானால் அடுத்தமுறை பூரி அல்லது சப்பாத்திக்கு சிக்கன் மசாலா செய்வதாக இருந்தால், பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலாவை செய்யுங்கள். இந்த சிக்கன் மசாலா நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவில் மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 1/2 கிலோ
* எண்ணெய் - 1 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (துண்டுகளாக்கப்பட்டது)
* மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 250 கிராம்
* வெள்ளை மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 150 மிலி
* வெண்ணெய் - 50-100 கிராம்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக குறைவான
தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து 3-4
நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து பச்சை மிளகாயை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு, சீரகத்
தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 4-5
நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பிறகு சிறிது 3 நிமிடம் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.
பின் அடுப்பை அணைத்துவிட்டு, 2 நிமிடம் கழித்து, தயிரை சேர்த்து நன்கு
கிளறி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் வெள்ளை மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு,
பின் பிரஷ் க்ரீம்மை சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்னர் வெண்ணெயை சேர்த்து கிளறி, கிரேவி சற்று கெட்டியாகும் வரை
கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான
பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலா தயார்.
Image Courtesy: The Kitchen



Click it and Unblock the Notifications











