இந்த வாரம் சிக்கன் வெச்சு.. ஒருடைம் சிக்கன் கொண்டாட்டம் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்களேன்..

Posted By:

Chicken Kondattam Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? சிக்கனைக் கொண்டு சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட ரெசிபியை ட்ரை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிக்கன் கொண்டாட்டம் ரெசிபியை ட்ரை செய்யுங்கள்.

உங்களின் விடுமுறை நாளை சிறப்பாக கொண்டாட நிச்சயம் இந்த சிக்கன் கொண்டாட்டம் ஏற்ற ரெசிபியாக இருக்கும். இந்த சிக்கன் கொண்டாட்டம் சப்பாத்தி, பூரி, சாதம், பரோட்டா என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

Chicken Kondattam How To Make a Chicken Kondattam Recipe

உங்களுக்கு சிக்கன் கொண்டாட்டம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கொண்டாட்டம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு...

* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

கிரேவிக்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* தண்ணீர் - சிறிது
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்து, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து பொரித்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து குறைவான தீயில் வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சர்க்கரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சிக்கன் கொண்டாட்டம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, October 27, 2024, 14:16 [IST]
Desktop Bottom Promotion