Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பூரிக்கு ஒருடைம் ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சிக்கன் கிரேவியை செஞ்சு சாப்பிடுங்க.. செமயா இருக்கும்..
Restaurant Style Chicken Gravy Recipe In Tamil: விடுமுறை நாட்களில் பெரும்பாலானோரின் வீடுகளில் மூன்று வேளையும் ஸ்பெஷலாக அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடும் வழக்கம் இருக்கும். உங்கள் வீட்டிலும் அப்படி தானா?
அதுவும் இன்று உங்கள் வீட்டில் பூரி செய்கிறீர்கள் என்றால், அதற்கு வழக்கமாக செய்யும் சிக்கன் கிரேவியை செய்யாமல், ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சிக்கன் கிரேவியை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் கிரேவி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசி இன்னும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 5-6
* முந்திரி - 10
* தக்காளி - 2
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய் மற்றும்
முந்திரியை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு சிக்கனின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, எண்ணெய் பிரியும்
வரை நன்கு கிளறி, கரம் மசாலாவை சேர்த்து கிளறி 1 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* அடுத்து அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி
வைத்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் சிறிது கொத்தமல்லியைத்
தூவி இறக்கினால், சுவையான ரெஸ்டாராண்ட் ஸ்டைல் சிக்கன் கிரேவி
தயார்.
Image Courtesy: Spice Eats



Click it and Unblock the Notifications











