வீட்டில் கத்திரிக்காய் இருந்தா... இப்படி செட்டிநாடு ஸ்டைலில் கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு நல்லா இருக்கும்

Posted By:

Chettinad Style Kathirikkai Gravy Recipe In Tamil: இன்று இரவு வீட்டில் சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? சிம்பிளாக, அதே சமயம் ஈஸியாக செய்யக்கூடிய வகையில் ஒரு கிரேவி செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காயைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் கிரேவி செய்யுங்கள். இந்த செட்டிநாடு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் ருசியாக இருக்கும்.

Chettinad Style Kathirikkai Gravy Recipe

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* துருவிய தேங்காய் - 1/4 கப்
* முந்திரி - 6
* கசகசா - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* ஏலக்காய் - 2

பிற பொருட்கள்..

* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கத்திரிக்காய் - 4
* பெரிய உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், முந்திரி, சீரகம், கசகசா, சோம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி கிளறி, காய்கறிகளை சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வைத்து மூடி வைத்து, காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லியைத் தூவினால், செட்டிநாடு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி தயார்.

Image Courtesy: kannammacooks

[ of 5 - Users]
Story first published: Tuesday, January 23, 2024, 17:50 [IST]
Desktop Bottom Promotion