மட்டன் வாங்குனா ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க.. வீட்டுல இருக்குறவங்க அடிக்கடி கேப்பாங்க..

Posted By:

Chettinad Mutton Uppu Kari Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியுள்ளீர்களா? பொதுவாக விடுமுறை நாட்களில் வித்தியாசமான அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு உள்ளது. உங்களுக்கும் அப்படியொரு பழக்கம் உள்ளதா? அப்படியானால் இன்று மட்டன் வாங்கினால், அந்த மட்டனைக் கொண்டு செட்டிநாடு மட்டன் உப்புக்கறியை செய்யுங்கள்.

இந்த ரெசிபியை செய்வதற்கு அதிக நேரம் சமையலறையில் இருக்க வேண்டி இருக்காது. ஏனெனில் அந்த அளவில் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Chettinad Mutton Uppu Kari How To Make a Chettinad Mutton Uppu Kari Recipe

உங்களுக்கு செட்டிநாடு மட்டன் உப்புக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்நாடு மட்டன் உப்புக்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மட்டன் - 350 கிராம்
* சோம்பு -1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 1 கையளவு + 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 10
* பூண்டு - 4-5 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் கழுவிய மட்டனை போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் சோம்பு, 1 கையளவு சின்ன வெங்காயம், 1 தக்காளி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி கிளறி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3-4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, 1/2 கப் சின்ன வெங்காயம், 1 கொத்து கறிவேப்பிலை, 10 வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வெங்காயம் வதங்கும் வரை வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், குக்கரில் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து, மட்டன் ட்ரை ஆகும் வரை, குறைந்தது 10 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு மட்டன் உப்புக்கறி தயார்.

குறிப்பு:

* உப்புக்கறியின் சிறந்த சுவையைப் பெற நினைத்தால், சின்ன வெங்காயத்தை மட்டும் பயன்படுத்துங்கள். ஆனால் பெரிய வெங்காயமும் பயன்படுத்தலாம்.
* மறந்தும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் அல்லது வேறு எந்த மசாலா பொடிகளையும் சேர்த்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் உப்புக்கறியின் சுவையே மாறிவிடும்.

Image Courtesy: HomeCookingShow

[ of 5 - Users]
Story first published: Sunday, March 24, 2024, 8:32 [IST]
Desktop Bottom Promotion