Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
வீடே மணக்கும் வகையில் செட்டிநாடு மட்டன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
Chettinad Mutton Gravy Recipe In Tamil: விடுமுறை நாட்களில் அனைவரும் தங்கள் வீடுகளில் பலவிதமான அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவது வழக்கம். இன்று உங்கள் வீட்டில் மட்டன் எடுத்துள்ளீர்களா?
அந்த மட்டனைக் கொண்டு ஒரு சுவையான ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு மட்டன் கிரேவியை செய்யுங்கள். இந்த செட்டிநாடு மட்டன் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என்று அனைத்துடனும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு மட்டன் கிரேவி ரெபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மட்டன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மட்டன் - 500 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
செட்டிநாடு மசாலா பொடி...
* வரமிளகாய் - 6
* மல்லி விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 2
* அன்னாசிப்பூ - 1
தேங்காய் விழுதிற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* சோம்பு - 1
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்
மட்டனை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் செட்டிநாடு மசாலாவிற்கு
கொடுத்துள்ள மசாலா பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து
இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* அடுத்து இஞ்சி பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்
தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்னர் அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலாவை சேர்த்து நன்கு
கிளறி, கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி
5- விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில்
அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி
மீண்டும் அடுப்பில் வைத்து, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து மூடி
வைத்து கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான
செட்டிநாடு மட்டன் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











