Just In
- 16 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 17 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 22 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 23 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- News
தகுதிநீக்க நோட்டீஸால் பதறிய சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள்! உச்சநீதிமன்றத்தில் மனு! இன்று விசாரணை!
- Movies
பிசினஸ் வுமனாக மாறிய ராஷ்மிகா.. திடீரென முதலீடு செய்ய என்ன காரணம்?
- Automobiles
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
- Sports
ஆரம்பமே இப்படியா??.. கடுப்பான மைதான ஊழியர்கள்.. இந்தியா - அயர்லாந்து முதல் டி20 போட்டியில் சோதனை!
- Finance
ரஷ்யாவின் தங்கத்தை இறக்குமதி செய்வதை நிறுத்தும் ஜி7 நாடுகள்.. என்ன ஆகும்?
- Technology
WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Cashew Vegetable Kurma Recipe : முந்திரி வெஜிடேபிள் குருமா
சப்பாத்திக்கு குருமா தான் சரியான சைடு டிஷ். அதுவும் சப்பாத்திக்கு பலரும் உருளைக்கிழங்கு குருமாவை தான் செய்வார்கள். ஆனால் ஒருசில காய்கறிகள் மற்றும் பன்னீரைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய முந்திரி வெஜிடேபிள் குருமா செய்தால், 2 சப்பாத்தி சாப்பிடுபவர்கள் 4 சப்பாத்தியை சாப்பிடுவார்கள். ஏனெனில் அந்த அளவில் இந்த குருமா ருசியாக இருக்கும். முக்கியமாக நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதால், இது ஒரு ஆரோக்கியமான ரெசிபியும் கூட.
உங்களுக்கு முந்திரி வெஜிடேபிள் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முந்திரி வெஜிடேபிள் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெஜிடேபிள் - 3 கப் (பீட்ரூட், ப்ராக்கோலி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, கேரட்)
* பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலாவிற்கு...
* முந்திரி - 10
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் அனைத்து காய்கறிகளையும் நறுக்கி குக்கரில் போட்டு, சிறிது நீரைத் தெளித்து அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, முந்திரி மற்றும் சிறிது நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, பாத்திரத்தை மூடி 10 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வெங்காயம், தக்காளி, முந்திரியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து சிறிது நீரை ஊற்றி, கெட்டியாகி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள காய்கறிகளை நீருடன் சேர்த்து கிளறி, 8-10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் பன்னீர் துண்டுகளை சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதன் மேல் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், முந்திரி வெஜிடேபிள் குருமா தயார்.
Image Courtesy: yummytummyaarthi