Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு பொரியல்
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு முட்டைக்கோஸ் பிடிக்காதா? எப்படி செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் இன்று முட்டைக்கோஸை பாசிப்பருப்புடன் சேர்த்து பொரியல் செய்து கொடுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு முட்டைக்கோஸ் பிடிக்காதா? எப்படி செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் இன்று முட்டைக்கோஸை பாசிப்பருப்புடன் சேர்த்து பொரியல் செய்து கொடுங்கள். இந்த முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு பொரியல் மிகவும் ருசியாக இருக்கும் மற்றும் முட்டைக்கோஸ் சாப்பிடாதவர்கள் கூட இந்த பொரியலை விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு இதை செய்வதும் மிகவும் சுலபம்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு பொரியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டைக்கோஸ் - 1 கப் (நறுக்கியது)
* பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - சிறிது
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நீரில் 5 நிமிடம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் முட்டைக்கோஸ் மற்றும் பாசிப்பருப்பை போட்டு, சிறிது நீரைத் தெளித்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாயை இரண்டாக கீறி போட்டு வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் வேக வைத்துள்ள முட்டைக்கோஸ் மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு ஒருசேர விட வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications












