Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
ப்ராக்கோலியை வாங்கி ஒருமுறை இப்படி வறுவல் செய்யுங்க.. குழந்தைகளும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
Broccoli Pepper Fry Recipe In Tamil: உங்கள் வீட்டில் இருப்போருக்கு ப்ராக்கோலியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? ஆனால் எப்படி செய்வதென்று தெரியவில்லையா? வீட்டில் இருப்போர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறான சுவையில் ப்ராக்கோலி செய்ய வேண்டுமா? அப்படியானால் ப்ராக்கோலி மிளகு வறுவலை செய்யுங்கள்.
இப்படி செய்யும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். ப்ராக்கோலியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அடிக்கடி இதை உணவில் சேர்க்கும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும். இதன் மூலம் நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயம் குறையும்.

உங்களுக்கு ப்ராக்கோலி மிளகு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி மிளகு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ப்ராக்கோலி - 1
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* வெள்ளை எள்ளு - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ப்ராக்கோலியை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில்
மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நீர் கொதிக்க ஆரம்பித்ததும்,
ப்ராக்கோலியை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளை
சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகுத் தூள், சோம்புத்
தூள், சீரகத் தூள் சேர்த்து, குறைவான தீயில் வைத்து வறுத்து ஒரு
தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ப்ராக்கோலியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வறுத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, மூடி
வைத்து, 5 நிமிடம் வேக வைத்து, எள்ளு விதைகளைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான ப்ராக்கோலி மிளகு வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications











