Latest Updates
-
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...!
Brahmin Style Veg Kurma Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு வழக்கமான உருளைக்கிழங்கு குருமா செய்யமா ஒரு வித்தியாசமான சைடிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பிராமின் ஸ்டைல் காய்கறி குருமாவை முயற்சி செய்து பாருங்கள். இந்த ஸ்டைல் குருமாவிற்கு வெங்காயம், பூண்டு என்று எதுவுமே தேவையில்லை, காய்கறிகள் இருந்தாலே போதுமானது.
பெரும்பாலான உயர்தர சைவ உணவகங்களில் இந்த குருமாதான் சப்பாத்தி, பூரிக்கு பரிமாறப்படும். இந்த சூப்பரான குருமாவை சாப்பிட இனி நீங்கள் ஹோட்டலுக்குத்தான் போக வேண்டுமென்ற அவசியமில்லை, இதை வீட்டிலேயே செய்து விடலாம். இந்த ஸ்டைல் குருமாவை செய்வது உண்மையில் மிகவும் சுலபம். குறிப்பாக வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த ரெசிபி செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இந்த குருமா சுவையானதாக இருப்பது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட.

உங்களுக்கு பிராமின் ஸ்டைல் வெஜிடேபிள் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிராமின் ஸ்டைல் வெஜிடேபிள் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 நறுக்கிய கேரட்
- 15 பீன்ஸ் நறுக்கியது
- 2 உருளைக்கிழங்குகள் (வேகவைத்து நறுக்கியது)
- 1 பச்சை மிளகாய் (கீறியது)
- 1 ஸ்பூன் கடுகு
-1 இன்ச் இலவங்கப்பட்டை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
அரைக்க:
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
- 1 ஸ்பூன் கருஞ்சீரகம்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 பச்சை மிளகாய்
- 1 இன்ச் இஞ்சி
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 10 கிராம் புளி
செய்முறை:
- இந்த அட்டகாசமான வெஜ் குருமாவை செய்வதற்கு முதலில் அனைத்து காய்கறிகளையும் நன்றாக கழுவி, நறுக்கித் தயாராக வைத்துக்கொள்ளவும்.
- பின்னர் மிக்சி ஜாரில் தேங்காய், கடலைப்பருப்பு, கொத்தமல்லி இலைகள், கருஞ்சீரகம், சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள் மற்றும் புளி ஆகிய அரைப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேர்க்கவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து, அவற்றை மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் 2 எண்ணெயைச் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கிராம்பு மற்றும் பட்டை ஆகியவற்றைச் சேர்த்து, அவை சில நொடிகள் வதக்கவும்.
- பின்னர் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றைச் சேர்த்து, அவை மென்மையாகும் வரை வதக்கவும்.
- காய்கறிகள் பாதி வெந்த நிலையில், அரைத்து வைத்துள்ள விழுதை அதில் சேர்க்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, சுமார் 'ஒரு விசில்' வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவிடவும்.
- குக்கரின் அழுத்தம் தானாகவே தணியும் வரை காத்திருந்து, மூடியைத் திறந்து, ஒருமுறை கிளறினால் சூப்பரான பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெடி.
- இதை சூடான இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications











