வெண்டைக்காய் சட்னி

வெண்டைக்காயைக் கொண்டு சட்னி செய்யலாம் என்பது தெரியுமா? ஆம் வெண்டைக்காய் கொண்டு சட்னி செய்தால், அது இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Posted By:

இதுவரை நீங்கள் வெண்டைக்காய் கொண்டு பொரியல், புளிக்குழம்பு செய்திருக்கலாம். ஆனால் வெண்டைக்காயைக் கொண்டு சட்னி செய்யலாம் என்பது தெரியுமா? ஆம் வெண்டைக்காய் கொண்டு சட்னி செய்தால், அது இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது வெண்டைக்காய் சாப்பிடாதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

Bhindi Chutney Recipe In Tamil

உங்களுக்கு வெண்டைக்காய் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மசாலா பவுடருக்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

* கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

* மல்லி விதை - 1 டீஸ்பூன்

* சீரகம் - 1/2 டீஸ்பூன்

* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

* வரமிளகாய் - 5

வதக்குவதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* பூண்டு - 5 பல்

* வெண்டைக்காய் - 2 கப் (நறுக்கியது)

* தக்காளி - 1 (நறுக்கியது)

* புளி - ஒரு சிறிய துண்டு

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* உப்பு - 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய் - 2

* கறிவேப்பிலை - சிறிது

* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மல்லி விதை, சீரகம், வெந்தயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெண்டைக்காயை சேர்த்து நன்கு பிசுபிசுப்பு போகும் வரை வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தக்காளி, புளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அரைத்து வைத்துள்ள மசாலா பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் சட்னி தயார்.

Image Courtesy: hebbarskitchen

[ of 5 - Users]
Story first published: Monday, August 22, 2022, 19:44 [IST]
Desktop Bottom Promotion