Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும்
Besan Bread Toast Recipe in Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அந்த பிரட் கொண்டு ஒரு அட்டகாசமான டோஸ்ட் செய்து கொடுங்கள். அதுவும் இந்த டோஸ்ட்டில் காய்கறிகளை சேர்த்து செய்யும் போது, இது ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இதை மாலை நேர சிற்றுண்டியாக மட்டுமின்றி காலை உணவாகவும் செய்து கொடுக்கலாம்.

பொதுவாக பிரெட்டை வைத்து பிரட் ஆம்லெட்தான் செய்வார்கள். ஆனால் முட்டைக்குப் பதில் கடலைமாவை சேர்த்து ஒரு அட்டகாசமான மற்றும் ஆரோக்கியமான காலை உணவை செய்யலாம். இந்த சைவ பிரெட் ஆம்லெட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும், மேலும் இதை செய்வதும் மிகவும் சுலபமானதாகும்.
உங்களுக்கு சுவையான சைவ பிரட் டோஸ்ட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சைவ பிரட் டோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 துண்டு பிரட் (முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ளவும்)
- 1 ஸ்பூன் நெய்
- 5 ஸ்பூன் கடலை மாவு
- ½ ஸ்பூன் ஓமம்
- 2 சிட்டிகை மஞ்சள் தூள்
- கால் ஸ்பூன் மிளகாய் தூள்
- ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள்
- தேவையான அளவு உப்பு
- ¼ ஸ்பூன் துருவிய இஞ்சி
- 1 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது)
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 2 ஸ்பூன் தக்காளி (பொடியாக நறுக்கியது)
- 1 ஸ்பூன்கொத்தமல்லி இலைகள் (பொடியாக நறுக்கியது)
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
- கடலை மாவு, வெங்காயம், தக்காளி, ஓமம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலைகள், மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கெட்டியான மாவாகக் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு ஸ்பூனை வைத்து இந்த கலவையை நன்றாக கலக்கவும், தேவைபட்டால் கூடுதல் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- ஒரு தோசைக்கல்லில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
- தோசைக்கல் போதுமான அளவு சூடானதும், ஒவ்வொரு பிரட் துண்டின் ஒரு பக்கத்தை மட்டும் மாவுக்கலவையில் நனைத்து, சூடான கல்லின் மீது வைக்கவும்.
- குறைவான அல்லது மிதமான தீயில் வைத்து, பிரட் நன்கு வெந்து பொன்னிறமாக மாறும் வரை வேக வைக்கவும்.
பிரெட்டை திருப்பிப் போடுவதற்கு முன்பு, அதன் மேல்புறத்தில் சிறிது மாவுக்கலவையை ஊற்றவும், பின்னர் திருப்பி போட்டு மறுபுறமும் வேகவைக்கவும்.
- மாவுக்கலவை முழுமையாக வேகும் வரை, குறைந்த தீயில் இருபுறமும் திருப்பிப் போட்டுச் சுட்டெடுக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான கடலை மாவு பிரட் டோஸ்ட் ரெடி!



Click it and Unblock the Notifications
