Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
பீன்ஸை இந்த மாதிரி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
Beans Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் பீன்ஸ் என்றாலே தலைத்தெறிக்க ஓடுவார்களா? அத்தகையவர்களை பீன்ஸ் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் ஒருமுறை அவர்களுக்கு இந்த பக்குவத்தில் பொரியல் செய்து கொடுங்கள்.
இப்படி பொரியலை செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பொரியலின் ஸ்பெஷலே, அதில் தனியாக அரைத்து சேர்க்கும் மசாலா தான். இது தான் அந்த பொரியலின் சுவையை கூட்டுகிறது. முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பீன்ஸ் மசாலா பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீன்ஸ் மசாலா பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 2
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பீன்ஸ் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் பீன்ஸை கழுவி, பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், உளுத்தம்
பருப்பு, மிளகு, மல்லி விதை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்து பொருட்களை சேர்த்து, அத்துடன்
காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய பீன்ஸை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி, மஞ்சள் தூள் சேர்த்து, 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி
வைத்து, மிதமான தீயில் வைத்து, பீன்ஸை நன்கு வேக வைக்க வேண்டும்.
* பீன்ஸ் நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து
கிளறி, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பீன்ஸ் மசாலா
பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











