Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
1 கப் கோதுமை மாவும், 4 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணிப் பாருங்க.. செமயா இருக்கும்..
Banana Sweet Poli Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சத்தானதாகவும், அதே சமயம் சுவையானதாகவும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவும், வாழைப்பழமும் உள்ளதா?
அப்படியானால் அவற்றைக் கொண்டு ருசியான ஸ்வீட் போளியை செய்து கொடுங்கள். இந்த வாழைப்பழ போளி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். அதுவும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு வாழைப்பழ போளியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* வெல்லம்/நாட்டுச் சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் அல்லது நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
உள்ளே வைப்பதற்கு...
* பழுத்த வாழைப்பழம் - 4
* வெல்லம்/நாட்டுச் சர்க்கரை - 1/2 கப்
* ரவை - 1/4 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவை எடுத்து, அத்துடன்
1/2 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் பொடித்த வெல்லம் அல்லது நாட்டுச்
சர்க்கரையை சேர்த்து கைகளால் பிசைந்து விட வேண்டும்.
* பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கைகளால் நன்கு பிசைந்து
விட வேண்டும்.
* அதன் பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக 1/2 கப் நீரை ஊற்றி நன்கு
மென்மையாக பிசைந்து, மேலே எண்ணெய் தடவி, 15 நிமிடம் மூடி வைத்து ஊற
வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து கைகளால்
நன்கு கட்டிகளின்றி பிசைந்து விட வேண்டும்.
* பின் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, அத்துடன் பொடித்த வெல்லம்
அல்லது நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கரையும் வரை நன்கு கிளறி விட
வேண்டும்.
* வெல்லம் நன்கு கரைந்ததும், அதில் 1/4 கப் ரவை மற்றும் 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* கலவையானது கேசரி பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி விட்டு
இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின் அந்த கலவையை சிறு சிறு
உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்
* பின்பு ஊற வைத்துள்ள மாவை கைகளால் நன்கு பிசைந்து விட்டு, அவற்றை
உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கவர் அல்லது வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் தடவி,
முதலில் கோதுமை மாவை எடுத்து, கையில் எண்ணெயை தடவி, தட்டையாக தட்டிக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அதன் நடுவே ஒரு வாழைப்பழ உருண்டையை வைத்து, மடித்து உருட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின் அந்த உருண்டையை மீண்டும் தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் தட்டி வைத்துள்ள
போளிகளைப் போட்டு, மிதமான தீயில் வைத்து, முன்னும் பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான வாழைப்பழ போளி தயார்.



Click it and Unblock the Notifications








