Latest Updates
-
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...!
எப்பவும் வாழைப்பூவை வெச்சு பொரியல் செய்யாம.. ஒருமுறை சட்னி செஞ்சு சாப்பிடுங்க..
Banana Flower Chutney Recipe In Tamil: இதுவரை நீங்கள் வாழைப்பூவை வைத்து பொரியல், வடை என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த வாழைப்பூவைக் கொண்டு சட்னி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? என்னது வாழைப்பூவில் சட்னியா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், வாழைப்பூவைக் கொண்டு அருமையான சுவையில் சட்னியை செய்யலாம். இந்த சட்னி சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு வாழைப்பூ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பூ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைது எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* வாழைப்பூ - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* புளி - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 பௌல்
* தயிர் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கப்
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் வாழைப்பூவை எடுத்து, அதன் வெளிப்புறத் தோலை
நீக்கிவிட்டு, வாழைப்பூவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் தயிரை சேர்த்து கலந்து
கொள்ள வேண்டும்.
* பின்பு வாழைப்பூவின் நடுவில் உள்ள வெள்ளை நிற தண்டை நீக்கிவிட்டு,
வாழைப்பூவை பொடியாக நறுக்க ஆரம்பிக்க வேண்டும். பின் நறுக்கியதை அந்த
தயிர் கலந்த நீரில் போட வேண்டும். இதனால் அதன் நிறம் மாறாமல்
இருக்கும்.
* பின் நறுக்கிய வாழைப்பூவை நன்கு தயிர் கலந்த நீரில் அலசி, நீரை
முற்றிலும் வடிகட்டி விட்டு, தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒ வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கி கழுவி வைத்துள்ள
வாழைப்பூவை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள்,
சீரகம், புளி மற்றும் 1 கப் நீரை ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்.
* வாழைப்பூ நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வேக வைத்த வாழைப்பூ, துருவிய தேங்காய், சிறிது
நீரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை அதில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான வாழைப்பூ சட்னி தயார்.
Image Courtesy: Veg recipes of Karnataka



Click it and Unblock the Notifications











