Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பக்ரீத் ஸ்பெஷல் கொங்குநாட்டு மட்டன் குழம்பு - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
Bakrid Special Kongunattu Mutton Kuzhambu Recipe In Tamil: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உங்கள் வீட்டில் பிரியாணி செய்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக ஏதாவது ஸ்பெஷலாக செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் மட்டன் குழம்பை செய்வீர்களா? அப்படியானால் வீட்டில் உள்ளோருக்கு அந்த குழம்பை ஸ்பெஷலாக செய்து கொடுங்கள். அதுவும் கொங்குநாட்டு ஸ்டைலில் மட்டன் குழம்பை செய்து கொடுங்கள்.
இந்த மட்டன் குழம்பை செய்தால், வீட்டில் உள்ளோர் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடுவதோடு, வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தால், அவர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். இந்த குழம்பின் ஸ்பெஷலே அதற்கு அரைக்கும் மசாலா தான். இப்படி ஒருமுறை மட்டன் குழம்பை செய்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு கொங்குநாட்டு மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாட்டு மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு..
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 200 கிராம்
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 2 இன்ச்
* துருவிய தேங்காய் - 1 கப்
வறுத்து பொடி செய்வதற்கு...
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 10
குழம்பிற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 8 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மட்டன் - 1 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, மல்லி மற்றும் வரமிளகாய் சேர்த்து
நல்ல மணம் வரும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் அதே வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன
வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அத்துடன் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, மட்டனை நீரில் கழுவி
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, குழம்பிற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, 7-8 விசில் விட்டு
இறக்கினால், சுவையான கொங்குநாட்டு மட்டன் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











