For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவர்காலு சாறு செய்வது எப்படி எனத் தெரியுமா

Posted By: R. SUGANTHI Rajalingam
|
அவர்காலு சாறு ரெசிபி | மொச்சி பீன்ஸ் சாறு ரெசிபி | Avarekalu Saru Recipe | Boldsky

வார விடுமுறை என்றாலே உணவுப் பிரியர்கள் விதவிதமான உணவுகளை விரும்புவார்கள். உணவு எவ்வளவு முக்கியமே அதே போல் அதன் சுவையும் நமது பசிக்கு விருந்து கொடுக்கும். நிறைய விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நமக்கு நேரம் தான் பத்தாது. அதனால் தான் வீட்டிலேயே எளிதாக செய்யக் கூடிய டிஸ்யை பற்றி இங்கே நாங்கள் கூறயுள்ளோம்.

அப்படிப்பட்ட ஒரு ஈஸி டேஸ்டியான ரெசிபி தான் இந்த அவர்காலு சாறு. இது கர்நாடகவில் மிகவும் புகழ் பெற்ற ரெசிபி. இதன் சுவையும் தனி தான். மொச்சை பீன்ஸை சமைத்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த கறி பார்ப்பதற்கு க்ரீமியாக அருமையான சுவையுடன் இருக்கும்.

இந்த மொச்சி பீன்ஸ்யை கொண்டு நிறைய ரெசிபிகள் இருந்தாலும் இங்கே ஒரு ஈஸியான ரெசிபியின் மூலம் உங்கள் விடுமுறை நாளை சுவையாக்க போகிறோம். சரி வாங்க இந்த மொச்சி பீன்ஸ் சாறு எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

ஈஸி அவர்காலு சாறு ரெசிபி,
ஈஸி அவர்காலு சாறு ரெசிபி /ஹோம்மேடு அவர்காலு சாறு ரெசிபி /மொச்சி பீன்ஸ் செய்முறை விளக்கம் /மொச்சி பீன்ஸ் சாறு வீடியோ ரெசிபி
ஈஸி அவர்காலு சாறு ரெசிபி /ஹோம்மேடு அவர்காலு சாறு ரெசிபி /மொச்சி பீன்ஸ் செய்முறை விளக்கம் /மொச்சி பீன்ஸ் சாறு வீடியோ ரெசிபி
Prep Time
20 Mins
Cook Time
25M
Total Time
45 Mins

Recipe By: காவ்யா ஸ்ரீ

Recipe Type: முதன்மை உணவு

Serves: 2

Ingredients
  • மொச்சி காய் - 1/2 பெளல்

    தண்ணீர் - 1 கப்

    புளிக் கரைசல் - 1/4 கப்

    கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு கைப்பிடியளவு

    ரசம் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் (சமைப்பதற்கு) - 1+1/2 டீ ஸ்பூன்

    தேங்காய் (துருவியது) - 1/2 கப்

    கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்

    பெருங்காயம் - சிறுதளவு

    மஞ்சள் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்

    வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி - 1/2 அங்குலம்

    உப்பு - தேவைக்கேற்ப

    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு

Red Rice Kanda Poha
How to Prepare
  • 1.ஒரு ப்ரஷ்ஷர் குக்கரை எடுத்து கொள்ளுங்கள்

    2.அதில் மொச்சி காயை சேருங்கள்

    3.அதனுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்

    4.இப்பொழுது மூடியை மூடி விடவும்

    5.இப்பொழுது 3-4 விசில் வரும் வரை 10-15 நிமிடங்கள் வேக விடவும்

    6.பிறகு தண்ணீரை வடிகட்டி வேக வைத்த மொச்சி பீன்ஸ்யை மட்டும் தனியாக ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்

    7.10-15 நிமிடங்கள் ஆற விடவும்

    8.ஒரு மிக்ஸி சாரை எடுத்து கொள்ளுங்கள்

    9.அதில் தேங்காய், ரசம் பவுடர், புளிக்கரைசல், இஞ்சி, வெல்லம், மஞ்சள் தூள், வேக வைத்த மொச்சி காய் இவற்றை சேருங்கள்

    10.1/2 தண்ணீர் அதனுடன் சேருங்கள்

    11.நன்றாக அரைத்து கொள்ளவும்

    12.ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள்

    13.அதில் எண்ணெய்யை ஊற்றுங்கள்.

    14.பிறகு சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் கறி வேப்பிலை சேருங்கள்

    15.பிறகு அரைத்து வைத்து விழுதையும் அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்

    16.மிதமான தீயில் 5 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

    17.அதனுடன் உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்க வேண்டும்

    18.நன்றாக கிளறி ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

    19.பிறகு சூடாக பரிமாறவும்

    20.சுவையான மொச்சி பீன்ஸ் சாறு ரெடி

Instructions
  • 1.நீங்கள் கிரேவி கட்டியாக இருக்க வேண்டாம் என்று நினைத்தால் கூட கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.
  • 2.மொச்சி காய் அதிகமாக வெந்து விடாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 பெளல்
  • கலோரிகள் - 352.5 கலோரிகள்
  • புரோட்டீன் - 14.46 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 35.9 கிராம்

படத்துடன் செய்முறை விளக்கம் : மொச்சி பீன்ஸ் சாறு ரெசிபி

1. ஒரு ப்ரஷ்ஷர் குக்கரை எடுத்து கொள்ளுங்கள்

2. அதில் மொச்சி காயை சேருங்கள்

3. அதனுடன் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்

4. இப்பொழுது மூடியை மூடி விடவும்

5. இப்பொழுது 3-4 விசில் வரும் வரை 10-15 நிமிடங்கள் வேக விடவும்

6. பிறகு தண்ணீரை வடிகட்டி வேக வைத்த மொச்சி பீன்ஸ்யை மட்டும் தனியாக ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்

7. 10-15 நிமிடங்கள் ஆற விடவும்

8. ஒரு மிக்ஸி சாரை எடுத்து கொள்ளுங்கள்

9. அதில் தேங்காய், ரசம் பவுடர், புளிக்கரைசல், இஞ்சி, வெல்லம், மஞ்சள் தூள், வேக வைத்த மொச்சி காய் இவற்றை சேருங்கள்

10. 1/2 தண்ணீர் அதனுடன் சேருங்கள்

11. நன்றாக அரைத்து கொள்ளவும்

12. ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள்

13. அதில் எண்ணெய்யை ஊற்றுங்கள்.

14. பிறகு சூடானதும் கடுகு போட்டு வெடித்ததும் கறி வேப்பிலை சேருங்கள்

15. பிறகு அரைத்து வைத்து விழுதையும் அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்

16. மிதமான தீயில் 5 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

17. அதனுடன் உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்க வேண்டும்

18. நன்றாக கிளறி ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

19. பிறகு சூடாக பரிமாறவும்

20. சுவையான மொச்சி பீன்ஸ் சாறு ரெடி

[ 5 of 5 - 48 Users]
Read more about: ரெசிபி
English summary

அவர்காலு சாறு ரெசிபி

we are sharing the recipe of avarekalu saru, which is very close to our heart as a traditional recipe of Karnataka and a happy memory of childhood days. Avarekalu saru or avarekalu sagu is essentially a home-made curry, loaded with avarekai beans and other vegetables, filled with a simple yet rustic flavour along with the goodness of a creamy, lush curry.
Story first published: Thursday, March 1, 2018, 14:34 [IST]
Desktop Bottom Promotion