Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
அவரைக்காய் வாங்குனா மறக்காம ஒருடைம் இப்படி பொரியல் செய்யுங்க.. சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...
Avarakkai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் காய்கறியை அதிகம் விரும்பி சாப்பிடமாட்டார்களா? அவர்களை காய்கறி சாப்பிட வைக்க வேண்டுமானால், காய்கறிகளை அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறான சுவையில் பொரியல் செய்து கொடுங்கள்.
அதுவும் உங்கள் வீட்டில் அவரைக்காய் இருந்தால், அதை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் பொரியல் செய்தால், அவரைக்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். இப்படி பொரியல் செய்யும் போது, அது அனைத்து விதமான சாதத்துடன் சாப்பிட பொருத்தமாக இருப்பதோடு, வெறுமனே கூட சாப்பிடலாம்.

உங்களுக்கு அவரைக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவரைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* அவரைக்காய் - 350 கிராம் (நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் அவரைக்காயின் முனைப்பகுதியை நீக்கிவிட்டு, அவற்றை
நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, சீரகம்,
வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய் மற்றும் வறுத்த வேர்க்கடலை சேர்த்து
சிறிது நேரம் நன்கு வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில்
போட்டு நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் நறுக்கி வைத்துள்ள அவரைக்காயை
சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் அவரைக்காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மிதமான தீயில்
வைத்து, மூடி வைத்து அவரைக்காயை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறக்கும் போது, அவரைக்காயில் உள்ள
நீர் வற்றிவிட்டால், அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான அவரைக்காய் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











