Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
1 கப் அவல் இருந்தா... காலையில டக்கு-ன்னு இப்படி பணியாரம் செய்யுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்...
Aval Kuzhi Paniyaram Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று சுவையான அதே சமயம் வேகமாக செய்யக்கூடிய ஒரு காலை உணவை செய்ய நினைக்கிறீர்களா? வீட்டில் அவல் உள்ளதா? அப்படியானால் அந்த அவலைக் கொண்டு அட்டகாசமான சுவையில் குழிப் பணியாரம் செய்யுங்கள்.
இந்த இனிப்பு குழிப் பணியாரம் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். இந்த பணியாரத்தை காலை உணவாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.

உங்களுக்கு அவல் குழி பணியாரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் குழி பணியாரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெல்லம் - 3/4 கப்
* தண்ணீர் - 3/4 கப்
* நெய் - 1டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* துருவிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன்
* அவல் - 1 கப்
* ஏலக்காய் - 3
* கோதுமை மாவு - 1/4 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* காய்ச்சிய பால் - 1/4 கப்
* சோடா உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் நீரை ஊற்றி அடுப்பில்
வைத்து, வெல்லத்தை கரைய வைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
துருவிய தேங்காய் மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து, கேரட்டின் பச்சை
வாசனை போக வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அவலை சேர்த்து,
மொறுமொறுவென்று வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த அவல், ஏலக்காயை சேர்த்து நன்கு பொடி
செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த அவல் பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1/2
கப் கோதுமை மாவு, 1 சிட்டிகை உப்பு சேர்த்து, காய்ச்சி வைத்துள்ள
வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி நன்கு கலந்து விட வேண்டும்.
* பின் அதில் வதக்கி வைத்துள்ள தேங்காய் மற்றும் கேரட்டை சேர்த்து,
பாலை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் சோடா உப்பு சேர்த்து,
மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், தேவையான அளவு நீரை ஊற்றி, இட்லி
மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
குழிகளில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி,
மிதமான தீயில் வைத்து, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து
எடுத்தால், சுவையான அவல் குழி பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications