Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு
வீட்டில் உள்ளோருக்கு ஒரு சத்தான மற்றும் சுவையான ரெசிபியை செய்து அசத்த நினைக்கிறீர்களா? அப்படியனால் அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு செய்யுங்கள். இந்த வத்தக் குழம்பை சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட்டால் சும்மா அல்லும்.
தினமும் சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு சத்தான மற்றும் சுவையான ரெசிபியை செய்து அசத்த நினைக்கிறீர்களா? அப்படியனால் அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு செய்யுங்கள். உங்கள் வீட்டில் வெங்காயம், தக்காளி இல்லாவிட்டால் கவலைப்படாதீர்கள். ஏனெனில் இந்த வத்தக் குழம்பிற்கு வெங்காயம், தக்காளி என்று எதுவுமே தேவையில்லை. இந்த வத்தக் குழம்பை சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட்டால் சும்மா அல்லும். முக்கியமாக இந்த வத்தக் குழம்பு பேச்சுலர்களும் செய்யும் வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* முருங்கைக்காய் - 2
* சுண்டக்காய் வத்தல் - ஒரு கையளவு
* கறிவேப்பிலை - சிறிது
* கடுகு - 1 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* அரிசி - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முருங்கைக்காயை 2 இன்ச் துண்டுகளாக வெட்டி நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், மிளகு, அரிசி, வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு 2 கப் நீரை வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அந்நீரில் புளியைப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் கையால் பிசைந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சுண்டக்காய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். அப்படி வதக்கும் போது குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும். இல்லாவிட்டால் கருத்துவிடும்.
* பின் வறுத்த சுண்டைக்காயை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயில் கடுகு, துவரம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய முருங்கைக்காயைப் போட்டு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் கறிவேப்பிலையைப் போட்டு, குறைவான தீயில் வைத்து குழம்பை 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் சிறிது நீரில் அரைத்த பொடியை கரைத்துக் கொண்டு, கொதிக்கும் குழம்பில் சேர்த்து, மீண்டும் 7-8 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதிக்கும் போது குழம்பானது சற்று கெட்டியாவதை காண்பீர்கள்.
* இறுதியாக வெல்லம் மற்றும் வறுத்த சுண்டைக்காயை குழம்பில் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு தயார்.
Image Courtesy: mycookingjourney



Click it and Unblock the Notifications












