Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
காரசாரமான.. ஆந்திரா சிக்கன்.. எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே செஞ்சு பாருங்க..
Spicy Andhra Chicken Recipe In Tamil: எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் சிக்கன் செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை சிக்கனை வாங்கினால் காரசாரமான ஆந்திரா சிக்கனை செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் நன்கு காரசாரமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.
முக்கியமாக இது சட்டென்று 20 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த சுவையில் சிக்கனை செய்து சாப்பிட்டால், பின் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள். விடுமுறை நாளில் ரசம் வைத்து, இந்த ஆந்திரா சிக்கனை செய்தாலே போதும்.

உங்களுக்கு காரசாரமான ஆந்திரா சிக்கனை எடபபடி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* காஷ்மீரி வரமிளகாய் - 5
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
ப்ரை செய்வதற்கு..
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1
* தக்காளி - 1
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, மிளகு,
சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், காஷ்மீரி வரமிளகாய் மற்றும்
துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு பொடித்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்து, அத்துடன் அரைத்து
வைத்துள்ள பொடி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய்யை
ஊற்றி உருகியதும், ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் நீரை ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து மூடி வைத்து,
10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* சிக்கன் 10 நிமிடம் வெந்த பின், மூடியைத் திறந்து, அதில் அரைத்து
வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து கிளறி, மிதமான தீயில்
வைத்து 15 நிமிடம் நன்கு ட்ரையாகும் வரை வேக வைத்து, கொத்தமல்லியைத்
தூவி கிளறி இறக்கினால், காரசாரமான ஆந்திரா சிக்கன் தயார்.



Click it and Unblock the Notifications











