இட்லி, தோசைக்கு 1 நிமிடத்தில் டக்குன்னு சட்னி செய்யணுமா? அப்ப இந்த சட்னி பொடியை செஞ்சு வெச்சுக்கோங்க..

Posted By:

1 Minute Instant Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் காலை வேளையில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? அதற்கு தினமும் என்ன சட்னி செய்வதென்று யோசிப்பீர்களா? சில சமயங்களில் உங்களுக்கு காலையில் சட்னி செய்வதற்கு கூட நேரம் இருக்காதா?

அப்படியானால் அப்படிப்பட்ட தருணங்களில் சட்னி பொடியை செய்து கொண்டால், 1 நிமிடத்தில் சட்னியை செய்யலாம். என்னது சட்னி பொடியா? என்று நீங்கள் கேட்கலாம். இப்படி சட்னி பொடியை செய்து கொண்டால் 1 மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். இந்த சட்னி பொடி வேலைக்கு செல்பவர்களுக்கு, பேச்சுலர்களுக்கு ஏற்றது.

1 Minute Instant Chutney How To Make a Instant Chutney Powder Recipe

உங்களுக்கு சட்னி பொடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சட்னி பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுஙகள்.

தேவையான பொருட்கள்:

* வறுத்த வேர்க்கடலை - 200 கிராம்
* பொட்டுக்கடலை - 150 கிராம்
* தேங்காய் - 100 கிராம்
* வரமிளகாய் - 10
* கறிவேப்பிலை - 1 கையளவு
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கல் உப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 6 பல்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து 2 நிமிடம் வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் பொட்டுக்கடலையை சேர்த்து, அதையும் 2 நிமிடம் வறுத்து அதையும் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் தேங்காயை சேர்த்து, ஈரப்பதம் போகும் வரை வறுத்து, அதையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த வாணலியில் கறிவேப்பிலையை சேர்த்து, மொறுமொறுவென்றாகும் வரை வறுத்து, பின் வரமிளகாய், சீரகம் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்ததாக அந்த வாணலியில் புளி, பெருங்காயத் தூள் மற்றும் பூண்டு சேர்த்து அதை ஈரப்பதம் போகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதேப் போல் கல் உப்பையும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து, அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொண்டால், சட்னி பொடி தயார்.
* இந்த சட்னி பொடியை தேவையான போது, சிறிது கிண்ணத்தில் எடுத்து, லேசாக வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* வேண்டுமானால், தாளித்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், சட்னி தயார்.

Image Courtesy: SIMPLY SAMAYAL

[ of 5 - Users]
Story first published: Monday, August 19, 2024, 7:00 [IST]
Desktop Bottom Promotion