கர்ப்பகாலத்தில் அதிமதுரமா வேணவே வேணாம் ? கருச்சிதைவுக்கு நீங்களே காரணம் ஆகாதீர்கள்

கர்ப்பகாலத்தில் அதிமதுரத்தின் வேர்களை உண்ணலாமா என்ற கேள்வி எல்லாருக்கும் எழும். ஆனால் கர்ப்பகாலத்தில் நிச்சயமாக அதிமதுரம் எடுத்துக் கொள்ளக்கூடாது அதையும் மீறி எடுத்துக் கொள்வேன் என்றால் உங்கள் கருவை ந

அதிமதுரம் இந்த வார்த்தையை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா,. ஆமாம் டீ விளம்பரத்தில பயன்படுத்திற வார்த்தை தான். அதிமதுரம் போன்ற இயற்கையான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என இன்றைய காலத்தினர் நினைக்கின்றனர். ஆனால் நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய இயற்கை மருந்துகள் நீங்கள் நினைப்பதைவிட ஆபத்தை விளைவிக்கின்றன. அப்படியான்னு நீங்கள் நிச்சயம் கேள்வி எழுப்பலாம் அப்ப இந்தக் கட்டுரை உங்களுக்குத் தான்

Is Licorice Root Safe For Consumption During Pregnancy

குழந்தைப் பேறு என்பது பெண்கள் தங்களது பெண்மையை உணரும் தருணம். அந்தக் காலக் கட்டத்தில் மிகவும் பாதுகாப்பாகம், கவனமாகவும் இருப்பார்கள்.அப்படிப்பட்ட காலங்களில் நீங்கள் பயன்படுத்தும் இயற்கை மூலிகையே உங்கள் கரு கலைந்து போவதற்கு காரணமாக இருந்தால் அதை உண்பீர்களா? இயற்கை உணவாக இருந்தாலும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் உண்டால் என்ன ஆகும் என்பதைப் பற்றி விளக்குகிறது இந்தக் கட்டுரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்

நமது பாட்டிகள் வாழ்ந்த காலத்தில் இருந்த உடல் உழைப்பும், உணவுப் பழக்கமும் வேறு. ஆனால் அதே உணவுப்பழக்கத்தை இன்றைய காலத்திலும் நடைமுறைப்படுத்துவது என்பது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். பண்டைய காலத்தில் உணவே மருந்து என்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் இங்கு நச்சாகும் உணவுகளைத் தான் அதிகமாக உண்கிறார்கள். எனவே பாட்டி சொல்கிற மூலிகை வைத்தியங்களை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டாம்

அதிமதுரம்

அதிமதுரம்

அதிமதுரம் என்பது கிளைசிரிசா காப்ரா என்ற மரத்தினுடைய வேராகும். இந்த வேர் மிகவும் சுவையானதாக இருப்பதோடு மன அழுத்தத்திற்கு எதிராகவும் வேலை செய்கிறது.

அதிமதுரத்தின் பயன்கள்

அதிமதுரத்தின் வேர்கள் எண்ணிலடங்கா மருத்துவப் பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் இது நெஞ்சு எரிச்சல், உடல் துர்நாற்றம், ஆஸ்துமா, பூஞ்சை தொற்று, வைரஸ் தொற்று ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகள்

வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சினைகள்

அல்சர், கல்லீரல் பிரச்சினைகள், காசநோய், ஈஸ்ட் தொற்றுகள், இருமல், நாள்பட்ட சோர்வு, புற்றுநோய் புண்கள், கீழ்வாதம், வழுக்கை, மனச்சோர்வு, மற்றும் எச்.ஐ.வி போன்ற நோய்களின் சிகிச்சையின் ஒரு பகுதியாக அதிமதுரம் இருக்கிறது.

சிறந்த மன அழுத்த நிவாரணி

சிறந்த மன அழுத்த நிவாரணி

அதிமதுரம் ம்ன அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த நிவாரணியாக இருக்கிறது. மேலும் இது மன அழுத்தத்தை ஏற்படுத்து ஹார்மோன்களை சீர்படுத்தி உங்கள் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது.

மாதவிடாய்

மாதவிடாய்

  • இதயம் சார்ந்த நோய்கள்,
  • மாதவிடாய் அறிகுறிகள்,
  • தோல் பாதிப்புகள்
  • மாதவிடாய் பிடிப்புகள்
  • குளிர் நடுக்கம்
  • செரிமான பிரச்சினைகள்
  • எடை குறைதல்
  • அழற்சி போன்ற நோய்த் தாக்குதல்களில் இருந்தும் உங்களை தற்காத்துக் கொள்வதற்காக அதிமதுரம் பயன்படுகிறது.
    கர்ப்பகாலத்தில் பெண்கள் அதிமதுரத்தை எடுத்துக் கொள்ளலாமா

    கர்ப்பகாலத்தில் பெண்கள் அதிமதுரத்தை எடுத்துக் கொள்ளலாமா

    கர்ப்பகாலத்தில் அதிமதுரத்தின் வேர்களை உண்ணலாமா என்ற கேள்வி எல்லாருக்கும் எழும். ஆனால் கர்ப்பகாலத்தில் நிச்சயமாக அதிமதுரம் எடுத்துக் கொள்ளக்கூடாது அதையும் மீறி எடுத்துக் கொள்வேன் என்றால் விளைவுகளைச் சந்திக்க ஆயத்தமாகுங்கள்

    மாரடைப்பு

    மாரடைப்பு

    அதிமதுரம் எண்ணிடலங்கா மருத்துவ பலன்களைப் பெற்றிருந்தாலும் கர்ப்ப காலத்தில் நிச்சயம் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதிலுள்ள க்ளைசரிஷின் பலவிதமான உடல் உபாதைகளை உருவாக்குகிறது. தலை வலி, சோர்வு, உயர் இரத்த அழுத்தம், ஏன் மாரடைப்புக் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    மறுத்துப் போதல்

    மறுத்துப் போதல்

    அளவாக எடுத்துக் கொண்டால் தொந்தரவு இருக்காதே என்ற கேள்வி உங்களுக்குள் எழும். அந்த கேள்விக்கு பதிலாக குறைந்த் அளவில் எடுத்துக் கொள்ளும் போதும் கூட நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளிலிருந்து வேண்டுமானாலும் தப்பலாம் ஆனால் உணர்வின்மை, கை கால்களில் வலி உள்ளிட்ட பக்க விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.

    அதிமதுரத்தின் பக்க விளைவுகள்

    அதிமதுரத்தின் பக்க விளைவுகள்

    கருச்சிதைவு அல்லது குறை பிரசவம்

    அதிக அளவு அதிமதுரத்தை கர்ப்பகாலத்தில் எடுத்துக் கொள்ளும் போது கருச்சிதைவோ அல்லது குறைப் பிரசவம் ஏற்படும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் இது பத்து மாதத்திற்கு முன்பே பிறப்பதற்குரிய ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது.

    குழந்தையின் மூளை வளர்ச்சி

    குழந்தையின் மூளை வளர்ச்சி

    கர்ப்பகாலத்தில் அதிமதுரத்தை எடுத்துக்கொள்ளும் போது தாயின் மன அழுத்த ஹார்மோன்களை அது பாதிக்கிறது. மேலும் அது குழந்தைக்கும் கடத்தப்படுகிறது. இதனால் கருவின் மூளை வளர்ச்சி கனிசமாக பாதிக்கப்படுகிறது. இதனால் குழந்தை பிறந்ததற்கு பிறகான அவர்களின் நடத்தைகளில் பெரிய மாற்றத்தைக் காண முடியும்.

    ஹைப்பர் ஆக்டிவ்

    ஹைப்பர் ஆக்டிவ்

    அதிமதுரம் உங்கள் குழந்தைகளின் அறிவுத்திறனை வெகுவாக பாதிக்கிறது. மேலும் நீங்கள் அருந்திய அதிமதுரத்தால் ஹைப்பர் ஆக்டிவ் கோளாறுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்.

    தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு

    தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு

    கர்ப்பகாலத்திலும் சரி தாய்ப்பாலூட்டும் போதும் சரி மூலிகைகளை மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ளவே கூடாது. ஏனெனில் அது உங்களை மட்டுமல்ல. உங்கள் குழந்தைகளையும் பாதிப்பதால் கொஞ்சம் அதிக கவனம் செலுத்துங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, July 31, 2019, 16:31 [IST]
Desktop Bottom Promotion