For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் சாப்பிடும் மீன் மாத்திரைக்கு இவ்ளோ நன்மையா

மனித உடல்களில் ஒமேகா 3 இருப்பதில்லை. எனவே இவற்றை நாம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளுவது நல்லது. மேலும் ஒமேகா 3 யில் இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ அமிலங்கள் உள்ளன. இவை இரண்டும் தனக்கான தனி தனி பயன்களை கொண்டுள்ள

|

அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுவது என்வென்றால் கர்ப்பகாலத்தின் போது அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு தேவைப்படுகிறது. ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாக ஒமேகா 3 நிறைந்த மீன் மாத்திரைகள் உள்ளன. இவை குழந்தையின் உடலத்திற்கும் தாயின் உடல் நலத்திற்கும் உதவுகிறது. ஒமேகா 3 யில் ஒரு நீண்ட பாலியன்சேச்சுரேட் நிறைந்த கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

Is It Safe To Eat Omega-3 Fish Oil During Pregnancy

மனித உடல்களில் ஒமேகா 3 இருப்பதில்லை. எனவே இவற்றை நாம் உணவுகளில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் ஒமேகா 3 யில் இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ அமிலங்கள் உள்ளன. இவை இரண்டும் தனக்கான தனித்தனி பயன்களை கொண்டுள்ளது. இ.பி.ஏ என்பது இதய பாதுகாப்பு, நோயெதிர்ப்பு மண்டல அமைப்பு மற்றும் தோல் அழற்சி ஆகியவற்றிலும் டி.ஹச்.ஏ என்பது மூளை, கண்கள் பாதுகாப்பு மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. எனவே தான் ஒமேகா 3 மாத்திரைகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முக்கியதுவம்

முக்கியதுவம்

ஒமேகா 3 ஏன் கர்ப்பிணி பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணமாக புரோஸ்ட்டக்ளாண்டின்கள் உள்ளன. அதாவது புரோஸ்ட்டக்ளாண்டின்கள் எனப்படும் இவை ஹார்மோன்களின் உற்பத்தியை சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு ஒமேகா 3 தேவைப்படுகிறது. அதாவது நம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு அமிலங்களின் வகையை பொறுத்தது தான் இந்த புரோஸ்ட்டக்ளாண்டின்கள். சில வகையான புரோஸ்டாக்ளாண்டின்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படலாம், மற்றவை உற்பத்தி செய்யப்படாமல் போகலாம். இவற்றின் ஏற்றத்தாழ்வு சில நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே புரோஸ்ட்டக்ளாண்டின்களின் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்க்கு ஒமேகா 3 உதவுகிறது. மேலும், இந்த புரோஸ்ட்டக்ளாண்டின்கள் உயர் இரத்த அழுத்தம், இரத்த உறைதல், நரம்பு தளர்ச்சி, தோல் அழற்சி மற்றும் ஒவ்வாமை, சிறுநீரகங்கள் மற்றும் இரைப்பைக் குழாயின் செயல்பாடுகள் மற்றும் பிற ஹார்மோன்களின் சமந்தமான பல முக்கியமான உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

MOST READ: உங்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக இருக்க வேண்டிய முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா?

மகப்பேறு

மகப்பேறு

ஒமேகா 3 மாத்திரைகள் மகப்பேரிலும் பயன்களை கொண்டுள்ளது. அதாவது ஒமேகா 3 எடுத்துக்கொள்வதால் குறைப்பிரசவம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும் குழந்தைகளின் எடை அதிகரிக்க ஒமேகா 3 உதவுகிறது. ஒமேகா -3 குறைபாடு கர்ப்பிணி பெண்களின் மனச்சோர்வின் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.

தாய்ப்பால்

தாய்ப்பால்

கர்ப்பகாலம் முடிந்த பிறகும் உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஒமேகா 3 மீன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். மகப்பேறுக்கு பின்பு தாய்மார்களின் உணவில் இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ அமிலங்கள் சேர்த்துக் கொள்வதால் குழந்தைகளின் அறிவாற்றல் அதிகரிக்கச் செய்யலாம். மேலும் ஒமேகா 3 எடுத்துக் கொள்வதால் குழந்தைகளின் ஒவ்வாமைகளை குறைக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒமேகா 3 உணவுகள்

ஒமேகா 3 உணவுகள்

ஒமேகா 3 மாத்திரைகள் சாப்பிட முடியாதவர்கள் ஒமேகா 3 நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். அதாவது இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ நிறைந்த சால்மன், டுனா, மத்தி, ஆன்கோவிஸ் மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன்களை சாப்பிடலாம். ஆனால் சிலர் மீன்களில் உள்ள பாதரசம் மற்றும் நச்சுக்கள் காரணமாக கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும் செய்கிறார்கள். அப்படி தவிர்ப்பவர்கள் சுத்தமான மீன் எண்ணையில் இருந்து பெறப்பட்ட இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ நிறைந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். மற்றும் சில பேர்கள் ஆளிவிதை எண்ணெய்களும் ஒமேகா 3 கொண்டுள்ளதாக கருதுகிறார்கள். ஆனால் ஆளிவிதை எண்ணெய்கள் இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ கொண்டிருக்கவில்லை. மீன் எண்ணெய்களில் மட்டுமே அதிக இ.பி.ஏ மற்றும் டி.ஹச்.ஏ உள்ளன. இவை உடலுக்கும் குழந்தைக்கும் தேவையான பல நன்மைகளை வழங்குகிறது.

மீன் மாத்திரைகள்

மீன் மாத்திரைகள்

நல்ல மீன் மாத்திரைகளை உண்பது நல்லது. இயற்கையாக கிடைக்கும் மீன்களில் கூட சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக பாதரசம் மற்றும் நச்சுப் பொருட்கள் கலந்து இருக்கலாம். ஆனால் மீன் மாத்திரைகளை தயாரிக்கும் போது அதில் உள்ள நச்சுக்கள் அகற்றப்பட்டு சுத்தமான மீன் எண்ணெய்கள் மட்டும் எடுக்கப்படுகிறது. ஆனால் மாத்திரைகளை வாங்கும் போது அதன் தரத்தை சரிபார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

வாசனை

வாசனை

நீங்கள் மீன் மாத்திரைகளை வாங்கும் போது அதில் வாசனை வருகிறதா என்பதை சோதித்து வாங்குங்கள். மீன் மாத்திரைகள் கெட்டுப்போனால் மட்டுமே வாசனை வர வாய்ப்புள்ளது. ஒரு நல்ல தயாரிப்புகளில் இருந்து பெறப்பட்ட மாத்திரைகள் எப்போதும் வாசனை வர வாய்ப்பில்லை.

MOST READ: கர்ப்ப காலத்தின் போது பெண்கள் உலர்ந்த திராட்சைகளை சாப்பிடலாமா ?

டேஸ்ட்

டேஸ்ட்

எப்போதும் ஒரு நல்ல மீன் மாத்திரைகள் டேஸ்ட்டாக இருப்பதில்லை. நீங்கள் வாங்கும் மீன் மாத்திரைகளில் ஏதேனும் கூடுதல் சுவை அல்லது மீன் வாசனை வந்தால் அதை வாங்க வேண்டாம். அந்த கூடுதல் சுவைகள் மீன் எண்ணையின் வாசனையை மறைப்பதற்க்காக சேர்க்கப்பட்ட ஒன்றாகும். சுத்தமான மீன் மாத்திரைகள் ஒருபோதும் வாசனையோ அல்லது டேஸ்ட்டோ கொண்டிருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is It Safe To Eat Omega-3 Fish Oil During Pregnancy

Omega-3s are a family of long-chain polyunsaturated fatty acids that are essential nutrients for health and development. Unfortunately, these are not synthesized by the human body and therefore must be obtained from diet or supplementation.
Story first published: Thursday, August 22, 2019, 15:12 [IST]
Desktop Bottom Promotion