For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் பெண்கள் பூண்டு சாப்பிடுவது அவர்களுக்கு என்னென்ன சிக்கல்களை ஏற்படுத்தும் தெரியுமா?

பூண்டு இயற்கை மருந்தை அதிகரிக்கும் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி என்றாலும், நீங்கள் உட்கொள்ளும் அளவை கவனத்தில கொள்ள வேண்டும்.

|

கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உண்டாகும் சிறப்பு தருணம். இந்த தருணத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாறுபடுவார்கள். பெண்கள் கர்ப்பம் தரிக்கும் தருணத்தில் அவர்களின் உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். ஏனெனில், அவர்களின் ஆரோக்கியத்திற்கும், அவர்களுக்குள் வளரும் சிறிய குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முன்னெச்சரிக்கைகள் மற்றும் ஆரோக்கிய உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது.

Health Benefits Of Eating Garlic During Pregnancy

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் சாப்பிடக்கூடாதாவை என்றும், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என ஒரு நீண்ட பட்டியலே இங்கு இருக்கிறது. இந்த விவாதத்தில் பூண்டும் உள்ளது. இது உங்கள் உடல்நலத்திற்கு மகத்தான நன்மைகளைத் தரும் வைரஸ் எதிர்ப்பு உணவாக இருந்தாலும், பூண்டு முழுவதுமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பவர்கள் சிலர். இது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா? இல்லையா? என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டு உங்களுக்கு நல்லதா?

பூண்டு உங்களுக்கு நல்லதா?

பூண்டு உங்கள் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இது இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மருந்தாகவும் உள்ளது. இது உடலின் இரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது மற்றும் ஹார்மோன் செயல்பாட்டை சமப்படுத்துகிறது. பூண்டு தவறாமல் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளும் தற்போதைய காலங்களில் இது வைரஸ் எதிர்ப்பு உணவாக இருப்பதால் உறுதி செய்யப்படுகின்றன. இது அல்லிசினைக் கொண்டுள்ளது. ஆதலால், இது வழித்தடங்களில் இருந்து வெவ்வேறு கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதில் திறம்பட செயல்படுகிறது.

MOST READ: தக்காளி சாப்பிடுவதால் சொரியாஸிஸ் ஏற்படுமா? உண்மை என்னானு தெரிஞ்சிக்கோங்க...!

கர்ப்பிணிப் பெண்களுக்கு பூண்டு பாதுகாப்பானதா?

கர்ப்பிணிப் பெண்களுக்கு பூண்டு பாதுகாப்பானதா?

கர்ப்ப காலத்தில் மிகவும் நன்மை பயக்கும் சில உணவுகள் உள்ளன. அதேபோல் அவர்களின் உடல்நிலையை மோசமாக்கும் சில உணவுகளும் உள்ளன. இதில், சில தீங்கு விளைவிக்கும் காஃபின் போன்றவையும் உள்ளது. இந்த வகைகளில் பூண்டு உடலுக்கு நன்மையே அளிக்கும்.

கர்ப்ப காலத்தில் பூண்டு உட்கொள்ளும்போது என்ன நடக்கும்?

கர்ப்ப காலத்தில் பூண்டு உட்கொள்ளும்போது என்ன நடக்கும்?

பூண்டு இயற்கை மருந்தை அதிகரிக்கும் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி என்றாலும், நீங்கள் உட்கொள்ளும் அளவை கவனத்தில கொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல, எந்த உணவு பொருட்களையும் அளவாக உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம்.

எப்போது பாதுகாப்பானது?

எப்போது பாதுகாப்பானது?

முதல் மூன்று மாதங்களில் பூண்டு சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது என்றாலும், கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பத்தின் பிற்கால கட்டங்களில், குறிப்பாக இறுதி மாதங்களில் தங்களின் அளவு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் மூல பூண்டை சாப்பிடுவது நிறைய பெண்கள் தவிர்க்க விரும்பும் ஒன்று.

MOST READ: என்றும் நீங்க இளமையா இருக்கணுமா? அப்பனா இந்த டீக்களை அடிக்கடி குடிங்க...!

முன்னெச்சரிக்கைகள் ஏன் அறிவுறுத்தப்படுகின்றன?

முன்னெச்சரிக்கைகள் ஏன் அறிவுறுத்தப்படுகின்றன?

மிதமான அளவில் இருந்தால் பூண்டு முற்றிலும் பாதுகாப்பானது. இருப்பினும், இது இரத்த அழுத்தத்தை பாதிக்கும் இரத்தத்தை மெலிக்கும் பண்புகளையும் கொண்டிருப்பதால், பூண்டை அதிகமாக சாப்பிடுவது கொஞ்சம் பயமாக இருக்கும்.

வாந்தி மற்றும் குமட்டல்

வாந்தி மற்றும் குமட்டல்

சிலர் மூலிகையை முற்றிலுமாகத் தவிர்ப்பதற்கு மற்றொரு காரணம் அதன் சுவை மற்றும் வாசனை. இது மிகவும் கடுமையானது என்பதால், இது மிகவும் விரும்பத்தகாதது மற்றும் சில பெண்களுக்கு பார்வையில் குமட்டல் ஏற்படுத்தும். இது கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும்.

MOST READ: இரத்த கலரில் இருக்கும் இந்த பழச்சாறு உங்க உடல் எடையை வெகுவிரைவாக குறைக்குமாம்...!

 மருத்துவரிடம் ஆலோசனை

மருத்துவரிடம் ஆலோசனை

பூண்டின் சுவை உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தினால், பூண்டு சாறு அல்லது இதுபோன்ற கூடுதல் பொருட்களையும் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளலாம். வேண்டுமானால், இது தொடர்பாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். முதலில் ஒரு மருத்துவரை அணுகுவதற்கு முன் எதையும் செய்வதையோ அல்லது உங்கள் உணவில் சேர்த்தல் அல்லது நீக்குவதையோ கருத்தில் கொள்ள வேண்டாம்.

முடிவுரை

முடிவுரை

கர்ப்ப காலத்தில் பூண்டு சாப்பிடுவதுடன் வரும் நிறைய ஆலோசனைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் இருந்தாலும், அது பாதுகாப்பற்றது அல்ல. நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், அதை முற்றிலும் தவிர்ப்பதற்கு பதிலாக மிதமாக எடுத்து கொள்ளவேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Eating Garlic During Pregnancy

Here we are talking about the benefits of eating garlic during pregnancy.
Desktop Bottom Promotion