For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமாக இருக்கும்போது கத்திரிக்காய் சாப்பிடவே கூடாது... ஏன் என்கிற காரணம் தெரியுமா?

கர்ப்பமாக இருக்கும்போது என்னென்ன செய்யக் கூடாது என்பது பற்றி மிக விளக்கமாக இந்த பகுதியில் பார்க்கலாம். அது பற்றிய மிக விரிவான விளக்கங்கள் கொண்ட தொகுப்பாகத் தான் இது இருக்கிறது.

|

பெண்களுக்கு கர்ப்பகால அனுபவம் உணர்சிகள் மிகுந்தது. ஒவ்வொரு நிமிட உணர்ச்சியையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. மனதளவிலும் உடலளவிலும் பல வித அனுபவங்களை பெண்கள் கர்ப்பகாலத்தில் பெறுவார்கள். அதே சமயம் உடலளவில் பல சவால்களை சந்திக்க வேண்டிய சூழலும் உருவாகும். இந்த அனுபவம் முற்றிலும் மாயம் நிறைந்ததாக தோன்றும். இந்த உடலியல் மாற்றம் பெண்களுக்கு ஒரு தனி அழகைக் கொடுக்கும்.

Things You Should Not Be Doing During Your Pregnancy

பல பெண்கள் இந்த 9 மாத காலங்களை மிகப் பெரிய சிக்கல்களுடன் கழிப்பதில்லை என்றாலும், ஒரு சில வாழ்வியல் மாற்றம் செய்து கொள்வதால் இந்த கர்ப்பகாலம் இன்னும் சிறப்பான முறையில் கழியலாம். கர்ப்பகாலத்தில் நீங்கள் செய்யக்கூடாத சில செயல்களை நாம் இங்கு பட்டியலிட்டு கூறியிருக்கிறோம், இந்த பட்டியலை நீங்கள் அறிந்து கொள்வதால், ஒரு சிறப்பான தாய்மைப் பருவத்தை நீங்கள் அடையலாம் மேலும் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக இந்த உலகிற்கு வரவேற்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மது அருந்துதல்

மது அருந்துதல்

தாய்மை அடையும் நிலையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் மது அருந்துவது வயிற்றில் உள்ள கருவிற்கு முழுக்க முழுக்க தீமையைத் தரும் . ஆகவே இதனைத் தவிர்ப்பது சிறந்தது. பெண்கள் ஒயின் அருந்துவதில் எந்த ஒரு தவறும் இல்லை என்று சிலர் கூறுவார்கள். ஆனால் இந்த 9 மாதங்களில் ஒயின் பருகுவதைத் தவிர்ப்பது கூட நல்லது. மது அருந்தும் தாய்மார்களின் கல்லீரல் ஆரோக்கியமாகவும் நல்ல செயல்பாட்டு நிலையிலும் இருக்கலாம்.

ஆனால் கருவில் உள்ள குழந்தையின் கல்லீரால் மதுவையும் அதன் ரசாயனத்தையும் கையாளும் வகையின் வளர்ச்சி பெறாமல் இருக்கும். தாய் அருந்தும் மது நஞ்சுக்கொடி வழியாக கருவை அடைவதால் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பும், குறைபாடும் உண்டாகலாம். குழந்தை இறந்து பிறப்பது, மூளைச் சேதம், பிறப்பு குறைபாடு, கருச்சிதைவு போன்ற பாதிப்புகள் தாய்மார்கள் மது அருந்துவதால் ஏற்படலாம். உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக எந்த விதத்தில் மது அருந்துவதையும் தவிர்க்கவும்.

MOST READ: உங்க வீட்டு பெண்ணுக்கும் PCOD பிரச்சினை இருக்கா? உங்க கேள்விக்கு நிபுணர்கள் பதில் இதோ...

காபி

காபி

பெட் காபி அல்லது காலை நேர காபிக்கு அடிமையாக இருப்பவர்களுக்கு இது ஒரு கெட்ட செய்தியாகும். கர்ப்பமாக இருக்கும்போது அதிக அளவு கபைன் எடுத்துக் கொள்வதால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. 200 மிகி அளவிற்கு குறைவாக கபைன் எடுத்துக் கொள்வது உங்கள் உடல்நலத்திற்கு நல்லது. ஆனால் அவ்வப்போது தேநீர், சாக்லேட் பார் அல்லது கோக் கூட பருகலாம். இவற்றையும் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே எடுத்துக் கொள்வது நல்லது. காலையில் எழுந்தவுடன் நீங்கள் பருகும் காபி அல்லது தேநீருக்கு மாற்றாக மூலிகை தேநீர், எலுமிச்சை மற்றும் வெந்நீர், அல்லது மற்ற மூலிகைக் கலவை ஆகியவற்றை பருகலாம். கபைன் பருகுவதை இவற்றின் மூலம் தவிர்க்கலாம்.

நீண்ட நேரம் சூரிய குளியல்

நீண்ட நேரம் சூரிய குளியல்

சூரிய குளியல் எடுத்துக் கொள்வதால் உடலில் நல்ல நெகிழ்ச்சி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கருவுற்றிருக்கும் பெண்கள் நீண்ட நேரம் சூரிய குளியல் எடுப்பது நல்லதல்ல. நீண்ட நேரம் சூரிய குளியல் எடுப்பதால் சூரியனின் வெப்பம் உங்கள் உடலில் தாக்கும் வாய்ப்பு உண்டாகும் மேலும் இதனால் கட்டிகள் அல்லது புண்கள் உண்டாகலாம். மிகவும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு வேனிர்கட்டி ஏற்படலாம். மேலும் அதிக வெயில் கருவில் உள்ள குழந்தையை பாதிக்கலாம்.

அதிக அளவு சூரிய குளியல் எடுத்துக் கொள்ளும் கர்ப்பிணிகளின் குழந்தைகள் பிறந்தவுடன், அவர்களின் IQ அளவு குறைவாக இருப்பதாகவும், அவர்கள் குறைந்த எடையுடன் பிறப்பதாகவும் சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வெயிலில் வெளியில் செல்லும்போது கர்ப்பிணிகள் அதிக கவனத்துடன் செல்வது முக்கியம். தலையில் தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து வயிற்றை நன்றாக மூடி மறைத்துக் கொண்டு செல்லவும். உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்.

வெந்நீர் குளியல்

வெந்நீர் குளியல்

கர்ப்ப காலத்தில் உடலில் பல வித வலிகள் ஏற்படலாம். இதற்கு சூடான நீரில் குளிப்பதை சிலர் ஒரு தீர்வாக நினைக்கலாம். ஆனால் இது தவறு. சூடாக இருக்கும் நீரில் குளிப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தாலும் உங்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். குழந்தைக்கு பிறப்பு குறைபாடு மற்றும் முறையற்ற வளர்ச்சி ஆகியவை உண்டாகலாம்.

ஆகவே இவற்றைத் தடுக்கும் பொருட்டு, சூடான நீருக்கு மாற்றாக வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். உங்கள் உடல் வலி மற்றும் கால் வலியைக் குறைக்க வெதுவெதுப்பான நீர் அல்லது ஐஸ் பேக் கொண்டு உடலுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். இது ஒரு பாதுகாப்பான வலி நிவாரண முறையாக இருக்கலாம். மேலும் இதன் பலனும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

MOST READ: பித்தப்பை கல் பெண்களுக்கும் வருமா? உங்க கணையம் பத்தி உங்களுக்கே தெரியாத 5 விஷயம் இதோ

பயணம் செய்வதைத் தவிர்க்கவும்

பயணம் செய்வதைத் தவிர்க்கவும்

கர்ப்பிணிகள் தன்னை வீட்டுக்குள்ளேயே அடைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. தேவை ஏற்பட்டால் மட்டும் அதிகம் பயணம் செய்யலாம். மற்றபடி பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளலாம். இதன் காரணம் மிக எளிது. பயணத்திற்கான ஏற்பாடுகளை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினரின் பெட்டி படுக்கைகளை பேக் செய்ய வேண்டும். இவை எல்லாவற்றையும் முடித்து விட்டு, பயணிக்க தொடங்க வேடும். உங்களுக்கு அடுத்த சில மணி நேரங்கள் ட்ரைன் அல்லது கார் அலல்து ப்ளேனில் அசௌகரியமான சூழலில் அமர்ந்து கொண்டு செல்ல நேரலாம்.

டயட்

டயட்

கர்ப்பகாலம் என்பது மனஅழுத்தம் நிறைந்த ஒரு காலம். இதுவரை உடலை கனகச்சிதமாக நிர்வகித்த இளம் பெண்களுக்கு, அதிகரித்த உடல் எடை, உப்பிய வயிறு, இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் கோடுகள் தென்படுவது, வீங்கிய மார்பு ஆகியவை சற்று மன உளைச்சலை உண்டாக்கலாம். குறிப்பாக எந்த நேரமும் டயட், வொர்க் அவுட் என்று பிட்னஸ் மீது ஈர்ப்புடன் இருக்கும் பெண்களுக்கு இந்த காலம் ஒரு வித அச்சுறுத்தலைக் கொடுக்கும்.

ஆனால் உங்கள் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துகள் கிடைப்பதை உறுதி செய்வது உங்கள் அதிகரித்த உடல் எடை என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாய் சாப்பிடும் உணவின் மூலமாக மட்டுமே வயிற்றில் வளரும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை கிடைக்கும். ஆகவே இந்த உணவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும், அது சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்று தேவையற்ற யோசனைகளைத் தவிர்த்து,

இந்த உணவுகளைத் தவிர்க்கவும்

இந்த உணவுகளைத் தவிர்க்கவும்

முதன்முறையாக கருவுறும் பெண்களுக்கு எந்த உணவை சாப்பிட வேண்டும், எந்த உணவைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த கவலைகள் இருக்கும். குறிப்பாக கருவுற்ற முதல் 3 மாதங்களில் கருவின் அளவு மிகச் சிறியதாக இருக்கும் நேரத்தில் தாயின் உணவில் கவனம் மிகவும் அவசியம். கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவின் பட்டியல் இதோ உங்களுக்காக...

. கடல் உணவுகள் மற்றும் சமைக்கப்படாத இறைச்சி

. பப்பாளி

. எள்ளு

. கத்திரிக்காய்

. வெந்தயம்

. பைனாப்பிள்

. மீன்

. பதப்படுத்தப்படாத பால் பொருட்கள்

MOST READ: தன் மாதவிலக்கு ரத்தத்தை முகம் முழுக்க பூசிக்கொண்டு திரியும் பெண். என்ன ஆச்சு இவருக்கு?

ஹீல்ஸ் அணிய வேண்டாம்

ஹீல்ஸ் அணிய வேண்டாம்

அடிக்கடி மாறும் உடல் எடையும், வயிற்றின் பாரமும் காரணமாக சௌகரியமான காலணிகளை அணிவது கர்ப்பிணிகளுக்கு நன்மை தரும். உங்கள் உடலின் மைய எடை மாறும் காரணத்தினால், ஹீல்ஸ் அதிகம் உள்ள காலணிகளை அணிவதால் சீராக நடப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் உடல் வடிவத்தில் மாறுபாடுகளைத் தவிர்க்கவும், ஹீல்ஸ் அணிவதால் உண்டாகும் விபத்துகளைக் குறைக்கவும் இந்த 9 மாதத்திற்காவது ஹீல்ஸ் அணிவதைத் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Should Not Be Doing During Your Pregnancy

There aren’t many hard and fast rules about what not to do during your pregnancy, beyond abstaining from alcohol and drugs, of course. For the most part, you can continue with most of your prepregnancy life. But because the health and safety of your growing baby is essential, here’s a list of 11 things not to do while pregnant.
Story first published: Friday, March 15, 2019, 16:49 [IST]
Desktop Bottom Promotion