Latest Updates
-
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்..
தன் மாதவிலக்கு ரத்தத்தை முகம் முழுக்க பூசிக்கொண்டு திரியும் பெண். என்ன ஆச்சு இவருக்கு?
ஒரு பெண் தன்னுடைய மாதவிலக்கு ரத்தத்தை முகம் மற்றும் உடம்பு முழுக்க பூசிக்கொண்டு அதை பெருமையாக கருதுவது பற்றிய கதை ஒன்றை இங்கே பார்க்கலாம். இந்த விசித்திரமான செயல் பற்றிய தொகுப்பு தான் இது.
நீங்கள் ரோட்டில் நடந்து செல்கிறீர்கள், ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு முகம் முழுக்க இரத்தம் என்னவாகும் கண்டிப்பாக அதை பார்த்த உடனே நமக்கு மயக்கமே வர ஆரம்பித்து விடும் அல்லவா. ஆனால் தற்போது இணையதளத்தில் தங்களை வைரலாக்கும் வேளையில் சிலர் வேடிக்கையான வித்தியாசமான விஷயங்களை செய்து வருகிறார்கள். மக்களும் அந்த மாதிரியான விஷயங்களில் தான் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த பெண் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள்.

மாதவிடாய் இரத்த போக்கு
டெமட்ரா நைக்ஸ் என்ற இந்த பெண் தன்னுடைய மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இரத்த போக்கை உடம்பு முழுவதும் பூசிய வண்ணம் உள்ள புகைப்படங்களை போட்டு அதை ட்ரெண்டாக்கி உள்ளார். முகம் முழுவதும் மென்ஸஸ் இரத்தத்தை பூசி பூக்களுடன் ஒரு வித்தியாசமான க்ளிக் செய்துள்ளார்.

மாதவிடாயை கவனித்தல்
தன்னுடைய மாதவிடாய் காலங்களை கவனித்து வந்த இந்த பெண்ணுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. அதன்படி மாதவிடாய் இரத்த போக்கை சேகரித்து அதை உடம்பு முழுவதும் பூச ஆர்வம் செலுத்தி உள்ளார்.

இது தீட்டு இல்லை
ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறும் காரணம் இது தான். " பெண்கள் என்றாலே இந்த சமுதாயம் ஒதுக்குகிறது. அதிலும் பெண்களின் மாதவிடாய் பற்றிய புரிதல் இங்கு யாருக்கும் கிடையாது. உடம்பில் ஏற்படும் இந்த மாற்றத்தை பெண்களாகிய நாமே தீட்டு என்று ஒதுக்கி வைக்கிறோம். நம் சமுதாயமும் இந்த காரணத்தால் நம்மை புறந்தள்ளுகிறது. மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் முக்கியமான மாற்றம். அது அருவருக்கத்தக்கவோ அல்லது தீட்டு என்று ஒதுக்கும் விஷயமோ அல்ல. வெளிப்படையாக தெரிய வேண்டிய விஷயம். பொதுவாக மாதவிடாய் என்பதை பெண்களின் மாபெரும் சக்தி காலம் என்றே கூறலாம். இந்த சக்தி இல்லாமல் இந்த உலகமே ஜனித்து இருக்க முடியாது. ஒவ்வொரு ஜீவராசிகளும் இதிலிருந்து தான் உருப்பெற முடிந்திருக்கும். அப்புறம் ஏன் இந்த அருவருக்கத்தக்க பார்வை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பெண்கள்
இந்த மாதிரி மென்ஸஸ் இரத்தத்துடன் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராமில் போட்டு பெண்களையும் மாதவிடாய் காலங்களையும் இணைத்துள்ளார். மாதவிடாய் இரத்தம் கால்களின் வழியாக வழிந்தோடிவதை போட்டு இது நம் உடலில் ஒரு அங்கம் என்று காட்டியுள்ளார்.

செக்ஸ் கோச்
இந்த பெண் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் செக்ஸ் கோச் ஆக வேலை பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கருத்தடை சாதனமான ஐ. யு. டி பொருத்திய பிறகு தன்னுடைய மாதவிடாய் மிகவும் வலி மிகுந்ததாக உணர்ந்துள்ளார் . எனவே கருத்தடை சாதனத்தை நீக்கி விட்டு இயற்கையான மாதவிடாயை ரசிக்க தொடங்கி விட்டேன் என்கிறார் இவர்.

நெட்டி சனங்களின் கருத்து
இன்ஸ்ட்டாகிராமில் இவரது புகைப்படங்களை பார்ப்பவர்கள் பாசிடிவ் நெகடிவ் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.
சிலர் வேற வேலையே இல்லையா இந்த பெண்ணுக்கு முகத்தில கண்டது கழுதைலாம் பூசிவாங்களா என்று திட்டவும் செய்கின்றனர்.
பலர் இந்த பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்து ஆதரித்தும் தங்களுடைய லைக்ஸ்களை அள்ளித் தருகின்றனர்.
எது எப்படி இருப்பினும் நாம் புரிந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கின்றன அனைத்தும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள்.



Click it and Unblock the Notifications