For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணி பெண்கள் இந்தியன் டாய்லெட் பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா?

கர்ப்ப காலம் என்பது மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய காலம்; இந்த பதிப்பில் கர்ப்பிணி பெண்கள் இந்தியன் டாய்லெட் பயன்படுத்துவது கருவிற்கு ஆபத்தா என்பது பற்றியும் கர்ப்பிணி பெண்கள் இந்தியன் டாய்லெட்

|

கர்ப்ப காலம் என்பது மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய கால கட்டம்; கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். பெண்கள் முதல் முறையாக கர்ப்பம் அடையும் பொழுது, நின்றால், நடந்தால், ஏதேனும் பொருளை குனிந்து நிமிர்ந்து எடுத்தால் கரு கலைந்து விடுமோ என்று பயந்து பயந்து தான் வேலை பார்ப்பர்.

இவ்வாறு பயம் கொள்ளும் பெண்கள், மலம் கழிக்க இந்தியன் முறையான குத்துக்காலிட்டு மலம் கழிப்பதை மேற்கொண்டால் கரு கலைந்து விடுமோ என்று பயம் கொள்வதில் தவறு இல்லை; ஆனால் அந்த பயத்தை ஏற்படுத்தும் விஷயம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கர்ப்பிணிகள் முயலுதல் வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு இந்தியன் முறை டாய்லெட் பயன்படுத்துவது குறித்த பயத்தை போக்க உதவும் தகவல்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

Using Indian Style - Squat Toilet During Pregnancy

இந்த பதிப்பில் கர்ப்பிணி பெண்கள் இந்தியன் டாய்லெட் பயன்படுத்துவது கருவிற்கு ஆபத்தா என்பது பற்றியும் கர்ப்பிணி பெண்கள் இந்தியன் டாய்லெட் பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா? என்பது பற்றியும் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்தியன் முறை டாய்லெட்!

இந்தியன் முறை டாய்லெட்!

பொதுவாகவே மற்ற நாட்டவர்கள் வெஸ்டர்ன் டாய்லெட் முறையை பயன்படுத்தி, மலம் கழித்து உடலின் ஆரோக்கியத்தை கெடுத்து கொண்டு இருக்க, நம் நாட்டவர்கள் மட்டும் நமக்கே உரித்தான முறையில் அதாவது இந்தியன் கழிவறை முறையான குத்துக்கால் முறையில் மலம் கழித்து கொண்டு இருக்கிறோம். உண்மையில் மேற்கத்திய நாட்டு முறையை விட மிகவும் நல்ல மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய முறை ஆகும்.

எது சிறந்தது?

எது சிறந்தது?

வெஸ்டர்ன் முறையில் மலம் கழிக்க முயலுகையில் நமது உடல் உறுப்புகள் எந்த ஒரு அழுத்தத்தையும், மாற்றத்தையும் சந்திக்காமல் நேராக நிமிர்ந்த நிலையில், உட்கார்ந்தவாறே மலம் கழித்து விடலாம். ஆனால் இந்தியன் முறையில் நமது உடல் குறுக்கப்பட்டு, வயிறு மற்றும் குடல் பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டு மலம் வெளியேற்றப்படுகிறது.

உடலின் பாகங்களுக்கு வேலை கொடுக்கப்பட்டால் தான் அவை தொடர்ந்து இயக்க நிலையில் இருக்கும் என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டியது அவசியம்.

என்ன நன்மை?!

என்ன நன்மை?!

இந்தியன் முறையில் குத்துக்கால் இட்டு உட்கார, உடலின் தசைகள் மற்றும் குடல் பகுதிகள் நன்கு அழுத்தம் பெறுகின்றன. இந்த அழுத்தத்தால் குடல்களில் தேங்கியுள்ள கழிவுகள் முழுவதுமாக வெளியேறி உடல் தூய்மை அடைகிறது.

இந்த இரண்டு முறைகளில் நமது இந்தியன் முறையில் தான் உடலில் சரியான இடங்களில் அழுத்தம் தானாகவே கொடுக்கப்பட்டு உடல் கழிவுகள் நீக்கப்படுகின்றன. இது மிகச்சிறந்த முறையாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

கர்ப்ப காலம்!

கர்ப்ப காலம்!

கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்கள் மட்டும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; ஏனெனில் அது தான் கரு உருவாகி வளரும் கால கட்டம் ஆகும். இந்த காலத்தில் பெண்கள் குனிந்து நிமிரும் பொழுது, மலம் கழிக்க அமரும் பொழுதும் கூட அதிக கவனமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

கர்ப்பிணிகள் கவனக்குறைவாக நடக்க நேர்ந்தால் கருவிற்கு ஆபத்து ஏற்படலாம்; ஆனால் கர்ப்பிணிகள் பயம் கொள்ளாமல் இந்தியன் முறை கழிவறையிலேயே மெதுவாக அமர்ந்து, மலம் கழித்து விட்டு மெதுவாக எழலாம்.

மேலும் படிக்க: குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை கைகளை மூடிக்கொண்டு இருப்பதேன்?

கர்ப்பிணிக்கு ஆபத்தா?

கர்ப்பிணிக்கு ஆபத்தா?

கர்ப்பிணிகள் கவனமாக நடந்து கொண்டால் எதனாலும் அவர்களின் உடலுக்கு, உடல் நலனுக்கு மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. கர்ப்பிணிகள் தாராளமாக இந்தியன் முறை கழிவறையை பயன்படுத்தலாம். இது எந்த வகையிலும் கர்ப்பிணிகளின் உடல் நலத்தை பாதிக்காது என்று கூறப்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள் முதல் 3 மாதங்கள் அதீத ஜாக்கிரதையோடும், அடுத்ததடுத்த மாதங்கள் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

கர்ப்பிணி பயன்படுத்தலாமா?

கர்ப்பிணி பயன்படுத்தலாமா?

கர்ப்பிணி பெண்கள் எந்த ஒரு கழிவறை முறையையும் பயன்படுத்தலாம். அவரவர்களின் வசதிக்கு ஏற்ற முறையை மேற்கொண்டு பயன்படுத்தலாம். ஆனால், வெஸ்டர்ன் முறையோடு ஒப்பிடும் பொழுது இந்தியன் முறை கழிவறை சிறந்தது என்று கூறப்படுவதால், முடிந்த அளவு கர்ப்பிணி பெண்கள் இந்த முறையை பயன்படுத்தலாம்.

இந்தியன் முறை கழிவறையில், உட்கார உடல் பாகங்கள் அழுத்தத்தை சந்திப்பதால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

கருவிற்கு ஆபத்தா?

கருவிற்கு ஆபத்தா?

கர்ப்பிணிகளின் உடலுக்கு இந்தியன் டாய்லெட் முறை எந்த ஒரு பாதிப்பையும் நல்காதது போல, கர்ப்பிணி பெண்ணின் வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கும் எந்த ஒரு பிரச்சனையையும் இந்த கழிப்பறை முறை ஏற்படுத்தாது. கர்ப்பிணி பெண்கள் இந்தியன் முறை டாய்லெட் பற்றி இருக்கும் தங்களது பயத்தை, சந்தேகத்தை விட்டு ஒழித்து தாராளமாக இந்த முறையை பின்பற்றலாம்; இது தாய்க்கும் சேய்க்கும் மிகவும் பாதுகாப்பை வழங்கும் முறை ஆகும்.

மேலும் படிக்க: ஒரே மாதத்தில் 10 கிலோ வரை குறைக்க உதவும் மேக்ரோ டயட்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Using Indian Style - Squat Toilet During Pregnancy

Using Indian Style - Squat Toilet During Pregnancy
Story first published: Monday, October 15, 2018, 16:54 [IST]
Desktop Bottom Promotion