For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் சம்மணங்கால் போட்டு உட்காரலாமா? கூடாதா?

கர்ப்பிணி பெண்கள் மிகவும் பத்திரமாக இருக்க வேண்டிய காலம் கர்ப்ப காலம்; கர்ப்ப காலத்தில் சம்மணங்கால் போட்டு உட்காருவது கருவிற்கு ஆபத்தா என்று இங்கு படிக்கலாம்!

|

கர்ப்ப காலம் என்றாலே மிகவும் பாதுகாப்பாக மற்றும் பத்திரமாக இருக்க வேண்டிய காலகட்டம்! இந்த பத்திரம் மற்றும் பாதுகாப்பு என்பது எல்லாம்,கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் அல்ல, அவர்களை பார்த்துக் கொள்ளும் கணவன்மார்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஈர்த்து தான்! எனவே இந்த கால கட்டத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களுக்குள் வளரும் குழந்தையை எண்ணி கவனமாக இருக்க வேண்டும்.

sitting cross legged during pregnancy

அதே போல், கர்ப்பிணி பெண்களின் குடும்பத்தார் தங்கள் வீட்டு பெண்ணையும் அவளுக்குலொரு உயிர் வளர்கிறது என்ற கருத்தை எப்பொழுதும் நினைவில் கொண்டு, குடும்பத்தின் கர்ப்பிணிகளை இமைக்குள் வைத்து காக்க வேண்டும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பிணி பெண்கள்!

கர்ப்பிணி பெண்கள்!

ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்து விட்டாலே, ஆள் ஆளுக்கு அறிவுரை சொல்ல, தங்கள் அனுபவங்களை கூற பலர் கிளம்பி வருவது உண்டு. கர்ப்பிணி பெண்களுக்கு உண்ணுவது, உறங்குவது, உடல் ரீதியாக உறவு கொள்வது வரை அறிவுரை கொடுக்கப்பட்டாலும், உட்காருவது குறித்து எந்த ஒரு அறிவுரையும் வழங்கப் படுவது இல்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை! உட்காருவதால் எந்த ஒரு பிரச்சனையும் வரவே வராது என்று நினைத்து விட்டோமோ!?

அறிவுரை தப்பியது!

அறிவுரை தப்பியது!

உறவு கொள்வதில், உறங்குவதில்லை என பல நிலைகளை கூறி, எது சரியானது என்று கர்ப்பிணி பெண்களுக்கு கருத தரும் நாம், ஏன் உட்காருவதில் உள்ள பல நிலைகளை பற்றியும், அதன் சாதக பாதகங்களை பற்றியும் கற்றுத் தர மறந்து விட்டோம்! சொல்லப்போனால், உறங்கும், உறவு கொள்ளும் நிலைகளை விட உட்காருவதில் பற்பல நிலைகள் உள்ளன, இந்த பதிப்பில் நம் நாட்டு முறைப்படி கர்ப்பிணி பெண்கள் சம்மணங்கால் போட்டு உட்காரலாமா? கூடாதா? என்று படித்து அறியலாம்!

பொதுவான பயன்கள்!

பொதுவான பயன்கள்!

சம்மணங்கால் போட்டு உட்காரும் பொழுது, நம் உடல் முதுகு தண்டு சீராக இருக்கிறது; மேலும் சாப்பிடும் பொழுது இந்த முறையில் தான் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்று இந்திய கலாச்சாரத்தில், முக்கியமாக தமிழர்களின் கலாச்சாரத்தில் தலைமுறை தலைமுறையாக அறிவுறுத்தப்பட்டு வரப்படுகிறது.

சம்மணங்கால் போட்டு சாப்பிடுவதுவதால், உணவுக்குழாயில் நேராக உணவு குழலுக்கு செல்கிறது மற்றும் வயிற்றில் கால்களை மடக்கி இருக்கும் பொழுது தரப்படும் அழுத்தம் உணவு செரிமானம் அடைந்து, அந்தந்த இடங்களுக்கு செல்ல உதவுகிறது.

ஆரோக்கியத்தின் அறிகுறி!

ஆரோக்கியத்தின் அறிகுறி!

ஒரு மனிதன் ஆரோக்கியமான உடல் அமைப்பை மற்றும் உடல் நலத்தை கொண்டு இருக்கிறான் என்றால், அவனால் எளிதில் சம்மணங்கால் போட்டு அமரவும், அமர்ந்து எழும் பொழுது, எதை பிடித்தும் எழாமல் தானாகவே எழுந்து தனது மேற்படி வேலைகளை கவனிக்க முடியும் என்றும் சமிபத்திய ஆய்வு நிகழ்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒரு சாதாரண மனித உடலுக்கு சம்மணங்கால் தரும் நன்மைகள் எக்கச்சக்கம்!

ஆனால்,தனக்குள் இன்னொரு உயிரை சுமந்து இருக்கும் கர்ப்பிணி பெண்கள் சம்மணங்கால் போட்டு உட்காரலாமா, கூடாதா என்பதை இப்பொழுது பார்க்கலாம்!

கர்ப்பிணிகள் உட்காரலாமா?

கர்ப்பிணிகள் உட்காரலாமா?

கால்களை ஒன்றுக்கு குறுக்கு மற்ற ஒன்றாக மடக்கி உட்காருவதை தான், சம்மணங்கால் போட்டு உட்காருதல் என்கிறோம். இந்த முறையில் இவ்வாறு கால்களை மடக்கி உட்காருவது வயிற்றில் கண்டிப்பாக அழுத்தத்தை கொடுக்கும். அதை சாதாரண நிலையில் உணர்வது கடின,; கர்ப்பமாக இருக்கும் பொழுது ஏற்படும் பல உணர்வுகளில், இந்த உணர்வை அடையாளம் காணுவதும் கடினம். கர்ப்பிணி பெண்கள் இந்த மாதிரியான சம்மணங்கால் முறையில் உட்கார கூடாது; அது நல்லது அல்ல.

ஏன்? என்ன காரணம்?

ஏன்? என்ன காரணம்?

ஏன் கர்ப்பிணி பெண்கள் நாம் பின்பற்றி வரும் சம்மணங்கால் ம்முறையில் உட்கார கூடாது என்றால், சம்மணங்கால் போடும் பொழுது, கால்களை குறுக்குவதால் வயிற்றில் உண்டாகும் அழுத்தம் அதாவது கருவறையில் உண்டாகும் அழுத்தம், பெண்களின் வயிற்றில் உருவாகி வந்து கொண்டு இருக்கும் குழந்தையின் மீது பட்டு, ஒன்று குழந்தையை கலைந்து போகச் செய்யும்; அல்லது குழந்தை முழுமையான வளர்ச்சியை பெற்று விட்டால், குழந்தையை வெளிக்கொணர செய்யும்.

மருத்துவ ஆலோசனை!

மருத்துவ ஆலோசனை!

அதாவது கர்ப்பத்தின் முதன்மை காலங்களில் சம்மணங்கால் போட்டு உட்காருவது கருவை கலைந்து போக செய்யலாம்; ஆனால், கர்ப்பத்தின் இறுதி காலங்களில் சம்மணங்கால் போட்டு உட்காருவது கருவை வெளி உலகிற்கு கொண்டு வர உய்யலாம்; எனவே, சம்மணங்கால் போட்டு உட்காருவதை தவிர்க்க வேண்டும். குழந்தையை வெளியேற்ற இம்முறையை செய்வதாய் இருந்தால், உரிய மருத்துவ ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sitting Cross Legged During Pregnancy

Sitting Cross Legged During Pregnancy
Story first published: Monday, September 10, 2018, 15:53 [IST]
Desktop Bottom Promotion