டெலிவரிக்கு முன்பே தாய்ப்பால் சுரந்தால் குறை பிரசவத்திற்கான அறிகுறியா?

Posted By:
Subscribe to Boldsky

ஒரு பெண் கர்ப்பமாகிறாள் என்றால் அவளின் உடலில் ஏராளமான ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். ஒரு குழந்தையை கருவில் சுமந்து ஒன்பது மாதங்கள் அதனை உருவாக்கி பெற்றெடுப்பது என்பது சாதரண விஷயம் கிடையாது. குழந்தையை கருவில் சுமக்கும் ஒவ்வொரு நாளுமே பெண்களுக்கு ஒரு யுகம் என்றே சொல்லலாம்.

அவர்கள் சந்திக்கிற சின்ன சின்ன உடல் உபாதைகள் கூட பெரும் பயத்தை உண்டாக்கிடும். இப்படிச் செய்வதால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா? டெலிவரியின் போது ஏதேனும் சிக்கல்கள் உருவாகுமா என்றெல்லாம் தோன்றும் . தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தாலும், கர்பிணிகளுக்கு எழக்கூடிய சில சந்தேகங்களை வீட்டிலிருக்கும் பெரியவர்களே தீர்த்து வைத்து விடுவார்கள். தனிக்குடித்தனம் பெருகிவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில் கர்ப்பிணிகளின் சந்தேகங்களை தீர்க்க யார் இருக்கிறார்கள்.

அதுவும் டெலிவரிக்கு முந்தைய நாள் வரை வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக இந்த கட்டுரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்பகம் :

மார்பகம் :

கர்ப்பமானதும் சில சுரப்பிகள் உருவாகும், அவை உங்கள் மார்பகத்தின் முலைககம்பின் உள்ளே இருக்கிற குழாய்களை இணைத்து பால் சுரப்பதையும் குறிப்பிட்ட காலத்தில் பால் வெளியேறவும் வைக்கிறது.

இந்த செயல் ஹார்மோன்க்ளின் செயல்பாட்டினால் தான் நடக்கிறது. பொதுவாக குழந்தை பாலை உறிஞ்சும் போது உங்கள் மார்பகத்தில் ஓக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் தூண்டி குழந்தைக்கான பால் கிடைக்கும். இது சாதரணமான நிகழ்வு. இதில் சில கர்பிணிகள் சந்திக்கும் பிரச்சனை என்ன தெரியுமா?

பால் வெளியேறும் :

பால் வெளியேறும் :

கர்ப்பமான சில மாதங்களிலேயே அவர்களுக்கு பால் வெளியேறத் துவங்கும் . குழந்தை பிறந்த பிறகு தானே குழந்தை உறிஞ்சும் போது குறிப்பிட்ட ஹார்மோன் தூண்டப்பெற்று பால் வருகிறது. ஆனால் சிலருக்கு கர்ப்பமாக இருக்கும் போதே பால் வருகிறதே.... ஒரு வேளை இப்படி வருவதால் டெலிவரியின் போது சிக்கல் வந்திடுமோ... அல்லது குறைமாதத்தில் பிரசவம் நடக்குமோ என்ற பயம் எழும்.

எப்போது நடக்கும்? :

எப்போது நடக்கும்? :

கரு உருவான 12 முதல் 14 வாரங்கள் சிலருக்கு இப்படியான லீக்கிங் உருவாகும். இன்னும் சிலருக்கோ டெலிவரி வாரம் நெருங்கும் சமயத்தில் இப்படியான லீக்கிங் ஆகிடும்.

சில நாட்களில் தானாக நின்றுவிடும் என்றாலும் சிலருக்கு மட்டும் இது தொடரும். இது குறித்து பெரிதாக பயம் கொள்ளத் தேவையில்லை. இது ஹார்மோன் மாற்றத்தினால் மட்டுமே நடக்கிறது இதனால் டெலிவரிக்கும், குறை பிரசவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

கொலஸ்ட்ரம் :

கொலஸ்ட்ரம் :

குழந்தை பிறந்தவுடன் முதலில் கொலஸ்ட்ராம் எனப்படுகிற அடர்த்தியான பால் தான் வரும். இதில் வழக்கமான தாய்ப்பலை விட அதிகளவு ப்ரோட்டீனும், குறைந்த சர்க்கரை மற்றும் கொழுப்பு இருக்கிறது. இது குழந்தைக்கு எளிதாக ஜீரணமாகும். அதோடு இதில் ஆண்டிபாடீஸும் அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவிடும்.

அதனால் குழந்தை பிறந்ததும் முதலில் தாய்ப்பாலை கொடுக்க வேண்டும் என்பார்கள் .

டப்பாக்களில் பிடித்து வைக்கலாம் :

டப்பாக்களில் பிடித்து வைக்கலாம் :

சிலர் கர்ப்பமாக இருக்கும் போது இப்படி தாய்ப்பால் வெளியேறினால் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அந்த முதல் தாய்ப்பால் கிடைக்காது. இருப்பதிலேயே அது தான் சத்தானது என்று சொல்லப்படுகிறது என்கிறார்கள். இரண்டு நாட்களுக்கும் மேல் இப்படி உங்கள் மார்பிலிருந்து பால் லீக்காவது தொடர்ந்தால். சுத்தமான டப்பாவில் பிடித்து பத்திரப்படுத்தலாம்.

ப்ரஸ்ட் பேட் :

ப்ரஸ்ட் பேட் :

வெளியில் செல்லும் போது இப்படி பால் ஒழுகுவதால் சிரமங்கள் சந்திக்க நேரிடுபவர்கள் ப்ரஸ்ட் பேட் பயன்படுத்தலாம். இது டிஸ்போஸிபிள் அல்லது ரியூசபிள் இரண்டுமே கிடைக்கிறது. இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.

இது ஈரப்பதத்தை உறிந்து கொள்ளும். இதனை வெளியில் செல்லும் போது பயன்படுத்துங்கள். இரவு நேரங்களில் காட்டன் மெட்டர்னிட்டி ப்ரா என்றே சந்தையில் விற்கிறார்கள் அதனை வாங்கி பயன்படுத்தலாம்.

இது மிகவும் சாஃப்டாகவும், இலகுவாகவும் இருக்கும் என்பதால் உங்களுக்கு கம்ஃபர்டபிளாக இருக்கும்.

சிக்கலாகும் டெலிவரி :

சிக்கலாகும் டெலிவரி :

ஒரு வேளை மருத்துவரே உங்களுக்கு டெலிவரியின் போது இந்தந்த சிக்கல்கள் இருக்கின்றன என்றாலோ அல்லது உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடும் என்றாலோ குழந்தை பிறப்பதற்கு முன்பே அந்த கொலாஸ்ட்ரம் பாலை சேமித்து வைப்பது நல்லது.

குறைப்பிரசவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர் சொன்னாலும் பாலை சேமித்து வைப்பது நல்லது.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

கர்ப்ப காலத்தில் அதிகமாக பழங்கள் மற்றும் பழச்சாறு உண்பது, சர்க்கரை கலந்த பொருட்களை உண்பது போன்றவற்றாலும், சுரப்பிகளில் ஏற்படும் ஒரு சில மாற்றங்களாலும் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை 3வது மாதத்தில் செய்யப்படும் ரத்தப் பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம். 3வது மாதத்தில் சர்க்கரை நோய் இல்லை என்பது தெரிய வந்தால் மீண்டும் 7வது மாதத்தில் ரத்த பரிசோதனை செய்யப்படும்.

ஆனால் அதே சமயம் 3வது மாதத்தில் நீரிழிவு இருப்பது தெரிய வந்தாலும், பின்னர் கர்ப்பிணிகள் உணவுக் கட்டுப்பாட்டின் மூலமாக நீரிழிவை கட்டுக்குள் கொண்டு வரலாம். அடுத்தடுத்த மாதங்களில் நீரிழிவு இல்லாமலும் செய்யலாம்.

பல்வேறு பாதிப்புகள் :

பல்வேறு பாதிப்புகள் :

கர்ப்பமாக இருக்கும் போது சர்க்கரை நோய் பாதித்தாலும் அவை பிரசவத்திற்கு பின் குறைந்திடும். சர்க்கரை நோய் குறைந்தாலும் இன்னசில பாதிப்புகள் உண்டாகும்.

உயர் ரத்த அழுத்தம், சிறுநீரில் அதிக ப்ரோட்டீன் கலந்திருப்பது, பிரசவத்திற்கு பிறகு அதிக ரத்த போக்கு, எடை கூடுதல், கரு கலைதல், கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுதல், இதயம் தொடர்பான பிரச்சனை ஆகியவை ஏற்படக்கூடும்.

குழந்தைக்கான பாதிப்பு :

குழந்தைக்கான பாதிப்பு :

இதனால் தாய்மார்களுக்கு மட்டுமல்ல குழந்தைக்கும் பாதிப்புகள் உண்டாகும். குழந்தைக்கு பிறப்பிலேயே உண்டாகக்கூடிய சில வளர்சிக்குறைபாடுகள், குழந்தைக்கும் ஏற்படக்கூடிய ரத்தச் சர்க்கரை அளவில் மாற்றங்கள்,குழந்தையின் எடை அளவுக்கு அதிகமாக இருப்பது, மஞ்சள் காமாலை, சத்துக்குறைபாடு,குறை பிரசவம், சீரான இதயத்துடிப்பு இல்லாமல் இருப்பது போன்ற பல சிக்கல்களை உருவாக்கிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Your Breasts Leaking During Pregnancy

Is Your Breasts Leaking During Pregnancy
Story first published: Friday, January 12, 2018, 18:00 [IST]