Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
நஞ்சுக்கொடி முந்து பிரசவம் பற்றி அறிய வேண்டிய தகவல்கள்!
நஞ்சுக்கொடி என்பது பிளாஸ்டோசிஸ்ட் என்பதால் உருவாக்கப்படுகிறது; நஞ்சுக்கொடி முந்து பிரசவம் பற்றி அறிய வேண்டிய தகவல்கள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
நஞ்சுக்கொடி என்பது பிளாஸ்டோசிஸ்ட் என்பதால் உருவாக்கப்படுகிறது; இந்த பிளாஸ்டோசிஸ்ட் என்னும் முட்டை தான் குழந்தையை உருவாக்கும். குழந்தையை உருவாக்கும் அதே முட்டையில் இருந்து தான் நஞ்சுக்கொடியும் உருவாகிறது; இதில் இருந்து தான் தொப்புள் கொடி தோன்றி தாயை குழந்தையுடன் இணைக்கிறது.

பலருக்கும் தொப்புள் கொடி எப்படி தாயோடு குழந்தையை இணைக்கிறது, நஞ்சுக்கொடி என்றால் என்ன, இந்த கொடிகள் எப்படி உருவாகும், இதை வெட்டினால் பெண்களின் குடல்கள் பாதிக்குமா என்று பல கேள்விகள் - சந்தேகங்கள் இருக்கும். நஞ்சுக்கொடி முந்து பிரசவம் பற்றி அறிய வேண்டிய தகவல்கள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

நஞ்சுக்கொடி - தொப்புள் கொடி
பெண்கள் கர்ப்பம் அடைந்தவுடன், அவர்களின் வயிற்றில் குழந்தை உருவாக தொடங்கும் நேரத்தில், குழந்தையுடன் சேர்ந்து அதே கருமுட்டையில் இருந்து, கருமுட்டையின் ஒரு பாகத்தில் இருந்து உருவாகும் விஷயம் தான் இந்த நஞ்சுக்கொடி. நஞ்சுக்கொடியில் இருந்து உருவாகி நீளும் தொப்புள் கொடி கருவறையில் உருவாகும் சிசுவுடன் இணைகிறது.
நஞ்சுக்கொடி தாயின் உடலில் இருந்து சத்துக்களை உறிஞ்சி அதை தொப்புள் கொடி வாயிலாக குழந்தையிடம் சேர்க்கிறது.

கொடிகளின் சரியான நிலை!
நஞ்சுக்கொடி எப்பொழுதும் கருவறையின் மேற்பாகத்தில் இருப்பது நல்லது. இந்த நஞ்சுக்கொடியை பற்றி சரியான புரிதல் மற்றும் இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன என்று கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்தம் கணவன்மார்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த நஞ்சுக்கொடியின் நிலை மாற்றம் அடைந்தால் கர்ப்பிணி பெண்களின் பிரசவத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம்.
கொடி சுற்றி இருத்தல் என்று கூறக்கேட்டிருப்போம்; அது போன்று பல வித பிரச்சனைகளை இந்த கொடிகளின் நிலை மாற்றம் ஏற்படுத்தும்.

நஞ்சுக்கொடியின் வேலை!
நஞ்சுக்கொடியின் மூலமாக தான் கருவறையில் வளரும் கருவிற்கு தேவையான உணவு, ஆக்சிஜன் போன்ற முக்கிய விஷயங்கள் அனுப்பப்படுகின்றன. குழந்தைகள் கருவறையில் எப்படி சுவாசிக்கும் என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும் அல்லவா - அந்த கேள்விக்கான விடை நஞ்சுக்கொடி என்பது தான். ஆம் நண்பர்களே நஞ்சுக்கொடி தான் கருவறையில் குழந்தைகள் உயிர்வாழ ஆக்சிஜன் அளிக்கிறது.

நஞ்சுக்கொடி வெட்டப்படுதல்
பிரசவ சமயத்தில் குழந்தைகள் பிறக்கும் பொழுது, அவர்கள் மூச்சு விட்டு உயிர் வாழ நஞ்சுக்கொடி திரவம் குழந்தையின் நுரையீரலில் சிறிதளவு இருக்கும்; அதன் உதவியால் குழந்தைகள் பிரசவ சமயத்தில் சுவாசித்து, கருவறையில் இருந்து வெளிவந்த பின், சாதாரண மனிதர்களை போல சுவாசிக்க தொடங்கி விடுவர்.
குழந்தைகள் பிறந்த பின் தொப்புள் கொடி வெட்டப்படும் அல்லவா, அப்பொழுது தான் நஞ்சுக்கொடியும் குழந்தையின் உடலின் இணைப்பில் இருந்து அகற்றப்படுகிறது.

நஞ்சுக்கொடி முந்து பிரசவம்
நஞ்சுக்கொடி முந்து பிரசவம் என்பது நஞ்சுக்கொடியின் நிலை மாறி, அது தாயின் பிறப்புறுப்பை முழுமையாக மறைத்தல் அல்லது பாதி அளவு மறைத்தல் என்பது தான். பொதுவாக நஞ்சுக்கொடி கருவறையின் மேற்புறத்தில் இருக்கும் என்று கூறி உள்ளோம்; அந்த நிலை மாற்றம் அடைந்து கீழாக வந்து விட்டால், அதனால் பிரசவத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

தாமரை பிரசவம் - லோட்டஸ் பர்த்
தாமரை பிரசவம் என்பது என்ன என்று பலருக்கும் தெரியாது; குழந்தைகளை பிரசவிக்கும் பொழுது தொப்புள் கொடி வெட்டப்படும் அல்லவா, இந்த தாமரை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கும் பொழுது அவர்களின் தொப்புள் கொடி வெட்டப்பட மாட்டாது. தொப்புள் கொடி வெட்டப்பட வில்லை எனில், குழந்தைகளின் வயிற்றில் இணைந்து இருக்கும் தொப்புள் கொடி மற்றும் நஞ்சுக்கொடி இரண்டும் அப்படியே குழந்தை பிறந்த பிறகும் கூட இணைந்து இருக்கும்.

விழிப்புணர்வு தேவை!
நம் பகுதிகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பது பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லை என்று தான் கூற வேண்டும்; ஏனெனில் கர்ப்பத்தில் குழந்தை வளரும் என்ற விஷயத்தை விட வேறு எதுவும் நமக்கு தெரிந்து இருப்பதில்லை.
குழந்தைகள் கருவில் வளரும் பொழுது அவர்களுக்கு நடக்கும் விஷயங்கள், அவர்களுடன் சேர்ந்து உருவாகி வளரும் விஷயங்கள் மற்றும் குழந்தைகள் வளர்ந்து வெளிப்படும் தருணமான பிரசவ சாமயத்தில் என்னென்ன பிரச்சனைகள் நேரிட வாய்ப்பு உள்ளது போன்ற தகவல்களை நாம் அறிந்து இருந்தால், பிரசவத்தை பற்றிய புரிதல் இருந்தால் பிரசவ சமயத்தில் தாயையும், சேயையும் எளிதில் காத்து விடலாம்.



Click it and Unblock the Notifications











