Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
உலக கோப்பையில் நடந்த உணர்ச்சி பூர்வமான முத்த பரிமாற்றம்... அடடா! கோலிக்கும் அனுஷ்காவுக்கும் இவ்வளவு காதலா!
Virat Kohli- Anushka Sharma: ஒரு ஆணின் வெற்றிற்கு காரணமாக ஒரு பெண் நிச்சயம் இருப்பாள் என்று கூறப்படுவதுண்டு. அதுவும் திருமணமான ஆணின் வெற்றிற்கு பக்கபலமாக இருப்பது நிச்சயம் அவரது மனைவியாகத்தான் இருக்கும். இன்று இந்தியாவே பெருமையாக பேசிக்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவின் உறவைப் பற்றியும் இங்கே காணலாம்.
13ஆவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா, வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்று, உலக கோப்பையின் இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. நேற்று நடந்த போட்டியில் அபாரமாக விளையாடிய கோலி 50வது சதம் அடித்து உலக சாதனை புரிந்தார்.

இதுவரை நடந்த 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி நேற்று முறியடித்து புது உலக சாதனையை படைத்தார். நேற்று மகிழ்ச்சி வெள்ளத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருந்தபோது, அரங்கமே மெய்சிலிர்க்கும் ஓர் அன்பு பரிமாற்றம் அங்கு நடந்தது.
விராட் கோலி தனது 50வது சதத்தை விளாசிய போது, அவரது மனைவியும் அவரும் மைதானத்திற்குள்ளேயே தங்களது அன்பை முத்தங்களாக பரிமாறிக் கொண்டனர். கோலியும் அனுஷ்காவும் எல்லையற்ற மகிழ்ச்சியில் பரிமாறிக்கொண்ட அன்பு முத்த காட்சி, புகைப்படமாகவும், வீடியோவாகவும் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோலியின் சாதனைக்கு பின்னால், அவரின் கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியோடு, அனுஷ்காவின் ஆதரவும் அரவணைப்பும் உள்ளது. இதையே கோலி தன்னுடைய அன்பு முத்தத்தின் மூலம், மைதானத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். விராட் கோலி பல்வேறு பேட்டிகளில் அவரின் அன்பான மனைவி அனுஷ்காவைப் பற்றி பேசியிருக்கிறார்.
ஒருவருக்கொருவர் எல்லா வகையிலும் ஆதரவாக இருப்பதாகவும், தன்னை எப்போதும் ஊக்கப்படுத்தும் மனைவியை பற்றி பல இடங்களில் பெருமையாக தெரிவித்திருந்தார் கோலி. அனுஷ்கா ஷர்மா தங்களுடைய வாழ்க்கையையும் தாய்மையையும் சமநிலையாக பராமரித்தற்கு பாராட்டுகள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கோலியும் அனுஷ்கா சர்மாவும் மிகவும் அன்பான காதல் தம்பதிகளாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் சமூக வலைத்தளங்களில் படங்களைப் பகிர்வது முதல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவரையொருவர் ஆதரிப்பது வரை, இவர்களின் உறவை பற்றி இந்த உலகமே தெரிந்துகொள்ளலாம்.
விராட் கோலியும் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் ஒரு ஷாம்பு பிராண்டின் விளம்பரத்தில் ஒன்றாக நடித்தனர். அதைத்தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2021ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் மகள் பிறந்தாள்.
கோலியின் 50ஆவது சதம் குறித்த உருக்கமான கருத்துக்களை அனுஷ்கா அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'கடவுள் சிறந்த ஸ்கிரிப்ட் ரைட்டர். உங்கள் அன்பால் என்னை ஆசீர்வதித்ததற்கு நன்றி. படிப்படியாக வலிமையாக வளர்ந்து நீங்கள் விரும்பும் உயரத்தை அடைவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்களது விளையாட்டில் எப்போதும் நேர்மையாக இருங்கள். கடவுளுக்கு முற்றிலும் நன்றியுள்ளவளாக இருங்கள். நீங்கள் உண்மையிலேயே ஒரு தெய்வ குழந்தை'' என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், அனுஷ்கா கிரிக்கெட் மைதானத்திற்கு வந்திருந்தார். அதனால், தான் கோலியின் கவனம் சிதறியதாகவும், அவரின் மோசமான ஆட்டத்தினால், உலகக் கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற்றப்பட்டதற்காகவும் அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஆனால், இன்று 8 ஆண்டுகளுக்கு பின்னர் அதே ரசிகர்கள் அனுஷ்கா - விராட் கோலியின் அன்பை பகிர்ந்து கொள்ளும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications

