Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், திருப்பதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஐஆர்சிடி சிறப்புப் பேக்கேஜ் வழங்குகிறது. இந்த பேக்கேஜ் மூலம் திருப்பதியில் இருந்து 5 கோவில்களுக்கு பக்தர்கள் செல்லலாம். இந்த டூர் பேக்கேஜ் பயணிகளுக்கு மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. அப்படியானால் அந்த டூர் பேக்கேஜ் என்ன? கட்டணம் எவ்வளவு? எங்கிருந்து அழைத்து செல்லுவார்கள்? என்பது பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க...
ஐஆர்சிடிசி சுற்றுலாத் துறை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 5 கோயில்கள் என்ற சிறப்பு சுற்றுலாத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜ் திருப்பதியில் இருந்து தினமும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாத் தொகுப்பின் மூலம் பக்தர்கள் 5 கோயில்களுக்குச் செல்லலாம் எனவும், அந்த கோவில்கள் என்னென்ன? எங்கிருந்து எங்கே? எந்த கோவிலுக்கு முதலில் செல்ல வேண்டும்? உணவு, தங்குமிடம் எப்படி? என்பது பற்றியும் இந்த பதிவில் அறிந்துக் கொள்ளலாம்.

பயணம் தொடங்கும் இடம் எது?
இந்தப் பயணம் திருப்பதியில் இருந்து தொடங்குகிறது. திருப்பதி சென்ற பிறகுதான் இந்த டூர் பேக்கேஜ் தொடங்கும் என்பதை சுற்றுலா பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும். பல்வேறு இடங்களில் இருந்து திருப்பதிக்கு வருபவர்களுக்கு இந்த பேக்கேஜ் வசதியாக உள்ளது. திருமலை அல்லது அதன் அருகில் உள்ள கோவில்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு இந்த தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும். திருப்பதிக்கு முதல்முறையாக வருகை தரும் இடங்கள் மற்றும் கோவில்கள் பற்றிய தகவல் இல்லாதவர்கள் இந்த பேக்கேஜ் வசதியைப் பயன்படுத்தலாம். எனவே இந்த தொகுப்பின் மூலம் எந்தெந்த கோவில்களை தரிசிக்கலாம் என்று பார்க்கலாம்.
கோவில்களின் பட்டியல்
1. கல்யாண வெங்கடேஸ்வரா கோவில், ஸ்ரீனிவாசமங்காபுரம்
2. சுயம்பு வர சித்தி விநாயக சுவாமி தேவஸ்தானம், காணிபாக்கம்
3. ஸ்ரீகாளஹஸ்தி கோயில்
4. திருச்சானூர் கோவில்
5. திருமலையில் ஸ்ரீவாரியின் சிறப்பு நுழைவு தரிசனம் அடங்கும்.
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்யும் கோவில் எது? அங்கிருந்து எங்கு முதலில் அழைத்து செல்வார்கள்? எந்த இடத்தில் தங்க வைப்பார்கள்? பற்றிய தகவலை இப்போது பார்ப்போம்.
எந்த கோவிலுக்கு எப்போது செல்ல வேண்டும்?
சுற்றுலாப் பயணிகளை ஐஆர்சிடிசி ஊழியர்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அழைத்துச் செல்கின்றனர். முதலில் ஸ்ரீனிவாச மங்காபுரம் மற்றும் கன்னிப்பாக்கம் கோவில்களுக்கு அழைத்து செல்லுகின்றனர். அதன் பின்னர் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்குச் சென்று இரவு திருப்பதியில் தங்க வைக்கப்படுவார்கள். இரண்டாம் நாள் காலை 9 மணிக்கு திருமலையில் ஏழுமலையானின் சிறப்பு பிரவேச தரிசனம் நடைபெறும். அதன் பின்னர் திருச்சானூரில் உள்ள பத்மாவதி கோயிலுக்கு அழைத்து செல்லுவார்கள்.. மாலையில் அங்கிருந்து திருப்பதி ரயில் நிலையம் அருகே சுற்றுலா பயணிகளை இறக்கி விடுவதுடன் சுற்றுலா நிறைவு பெறுகிறது.
டூர் பேக்கேஜ்-ன் விலை
இந்த டூர் பேக்கேஜ் பற்றிய கூடுதல் தகவல்களை இணையதளத்தில் இருந்து பெறலாம். 3 பேருக்கு 6,590 ரூபாய். இருவருக்கு 6,800 ரூபாய். ஒரு நபருக்கு 8,280 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.. டூர் பேக்கேஜில் ஏசி தங்குமிடம், ஏசி வாகனத்தில் சுற்றிப் பார்ப்பது, திருமலைக்கு சிறப்பு நுழைவு வருகை, காலை உணவு, பயணக் காப்பீடு ஆகியவை அடங்கும்...



Click it and Unblock the Notifications











