For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவது பாதுகாப்பானதா? இல்லையா?

சப்போட்டா என்பது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம்; இந்த பதிப்பில் கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா என்பது பற்றி படித்து அறியலாம்.

|

சப்போட்டா என்பது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம்; கர்ப்பிணி பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்தில் உண்ணும் உணவுகள், காய்கள், கனிகள் என எந்த ஒரு உணவாயினும் தனது உடலுக்கு ஒத்துக் கொள்ளுமா என்று யோசித்து ஆராய்ந்து பின் உட்கொள்ளல் வேண்டும்.

Is It Safe To Eat Sapota Chikoo During Pregnancy?

அவ்வாறு ஆராய்ந்து உட்கொள்வது தேவையற்ற உடல் பிரச்சனைகள் மற்றும் ஆரோக்கிய அசௌகரியங்கள் ஏற்படுவதை தடுக்க உதவும். இந்த பதிப்பில் கர்ப்ப காலத்தில் சப்போட்டா சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா என்பது பற்றி படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சப்போட்டா பழம்!

சப்போட்டா பழம்!

சப்போட்டா பழம் எளிதில் எங்கும் கிடைக்கக் கூடியது; இந்த பழத்தில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. சப்போட்டா பழம் அதிக நீர்ச்சத்தும் ஆற்றலும் நிறைந்த ஒன்று; கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக சோர்வும் பலவீனமும் அடையும் தருணத்தில் சப்போட்டா போன்ற சத்துக்கள் மற்றும் ஆற்றல் அளிக்கும் பழ வகைகளை உட்கொள்வது நல்லது.

கர்ப்ப காலம்

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களின் உடலுக்கு நன்மை அளிக்க கூடிய மற்றும் தங்களுக்குள் வளரும் கருவின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு நன்மை செய்யக்கூடிய பழங்களை, உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகள் சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்க பட்டதாக இருத்தல் அவசியம்; மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கப்படும் காய்கள் மற்றும் கனிகள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் மிகவும் நன்று.

பாதுகாப்பானது தானா?

பாதுகாப்பானது தானா?

கர்ப்பிணி பெண்களின் உடலுக்கும், கருவின் வளர்ச்சிக்கும் சப்போட்டா பழம் நல்லது தானா என்ற கேள்வி பல கர்ப்பிணி பெண்களின் மனதில் நிலவுகின்றன. கர்ப்பிணி பெண்கள் தாராளமாக சப்போட்டா பழத்தை உட்கொள்ளலாம்; ஆனால் அதிகமாக அல்ல, சில பல விஷயங்களை ஆராய்ந்த பின்னரே கர்ப்பிணி பெண்கள் எந்த ஒரு பழத்தையும் உட்கொள்ளல் வேண்டும். கர்ப்பிணி பெண்களின் உடலில் வளரும் கருவின் நிலையை யோசித்தே எந்த ஒரு முடிவையும் கர்ப்பிணி பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

எவ்வளவு சாப்பிடலாம்?

எவ்வளவு சாப்பிடலாம்?

கர்ப்பிணி பெண்கள் எந்த ஒரு உணவோ, பழமோ, காய்கறியோ சாப்பிட்டாலும் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் உண்ண வேண்டும். கிடைக்கிறது என்று அளவுக்கு அதிகமாக உண்பது தவறு; அப்படி உண்டால், அது கர்ப்பிணி பெண்களின் உடலுக்கு நலத்தை வழங்குவதற்கு பதிலாக தீமையை அளித்து விடும்.

கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு 100 முதல் 120 கிராம் என்ற அளவில் சப்போட்டா பழங்களை உட்கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான உணவுமுறையை மேற்கொள்வது ஏற்கனவே கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை பெரிது படுத்திவிட வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க: பிறந்த குழந்தைகளுக்கு பசி ஏற்பட்டிருப்பதை தாய்மார்கள் அறிந்து கொள்வது எப்படி?

எப்படிப்பட்ட பழம்?

எப்படிப்பட்ட பழம்?

முன்பே கூறி இருந்த மாதிரி கர்ப்பிணி பெண்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பழ வகைகளை தான் உட்கொள்ள வேண்டும். ஆகையால் இயற்கை முரையில் சாகுபடி செய்து தயாரிக்கப்பட்ட சப்போட்டா பழத்தினை கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழத்தினை உட்கொள்ளல் வேண்டும்.

தோல் சுருங்கி இருக்காத மற்றும் அழுகியிராத அல்லது அழுகும் நிலையில் இல்லாத பழங்களை தேர்ந்து எடுக்க வேண்டும்.

என்னென்ன நன்மைகள்?

என்னென்ன நன்மைகள்?

கர்ப்பிணிகள் இந்த சப்போட்டா பழத்தினை உட்கொண்டு வருவதால், உடனடி ஆற்றல் மற்றும் நீர்ச்சத்து போன்றவற்றை எளிதில் பெறலாம். இது விலை குறைந்த அதிக பலன்கள் தரக்கூடிய பழம் என்பதால் கர்ப்பிணி பெண்கள் எளிதாக இதை வாங்கி உட்கொள்ளலாம். சப்போட்டாவினை அடிக்கடி உண்டு வருவது செரிமான கோளாறுகளை தவிர்க்கவும், நோய்த் தொற்றுகளிடம் இருந்து கர்ப்பிணி பெண்ணின் உடலை பாதுகாக்கவும் பெரிதும் உதவும்.

இதர நன்மைகள்!

இதர நன்மைகள்!

கர்ப்பிணி பெண்கள் சப்போட்டா பழத்தினை சரியான அளவில் உண்டு வருதல் அவர்தம் உடலில் ஏற்படும் பலவீனம், சோர்வு, குமட்டல், மயக்கம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. கர்ப்பிணி பெண்களின் உடல் எலும்புகளை பலப்படுத்தி, இரத்த அழுத்தத்தை சீராக்கி, அவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள் தங்கள் உடலுக்கு தேவையான மற்றும் தங்களுக்குள் வளரும் கருவிற்கு தேவையான சத்துக்களை அளிக்கும் காய் - கனிகளை உட்கொள்ள வேண்டும். சரியான சத்துக்களை கொண்ட உணவுகளை உண்டு வருதல் ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுக்க உதவும் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.

மேலும் படிக்க: பச்சிளம் குழந்தைக்கு ஒரு நாளைக்கு தாய் எத்தனை முறை, எந்த அளவு பாலூட்ட வேண்டும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is It Safe To Eat Sapota Chikoo During Pregnancy?

Is It Safe To Eat Sapota Chikoo During Pregnancy?
Story first published: Monday, October 22, 2018, 17:03 [IST]
Desktop Bottom Promotion