For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாய்வுத் தொல்லையை எப்படி சரிசெய்யலாம்?

  |

  கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு தாய்க்கும் மிகவும் சந்தோஷமான தருணம் மட்டுமல்ல சவாலான தருணமும் கூட. இந்த மாதிரியான சமயங்களில் ஒரு பெண்ணின் உடல்நிலை குழந்தையின் வளர்ச்சிக்கு ஏதுவாக மாறிக் கொண்டு வரும். நிறைய உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். அவற்றுள் ஒன்று தான் வாய்வு மற்றும் வயிறு வீக்க தொல்லைகள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  காரணம்

  காரணம்

  இந்த பிரச்சினை ஏற்பட முக்கிய காரணம் கர்ப்ப காலத்தில் அதிகமாகும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் தான் என்று அமெரிக்க கருவுறுதல் சங்கம் தெரிவிக்கிறது. இந்த ஹார்மோன் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த தசைகளையும் ரிலாக்ஸ் செய்வதால் குடல் தசைகளும் ரிலாக்ஸ் அடைந்து தன் வேலைகளை மெதுவாக செய்வதால் வயிற்றினுள் வாய்வு உண்டாகுதல், எரிச்சல், மந்தம் போன்றவை ஏற்படுகின்றன.

  கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் பருமன், வேலைகள் செய்யாமலிருத்தல், கர்ப்ப கால நீரிழிவு நோய், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்றவையும் காரணமாக அமைகின்றன. இதே மாதிரி மலச்சிக்கல், சீரணமின்மை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளையும் அவர்கள் கடந்து தான் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கவே செய்கிறார்கள்.

  எனவே இந்த அசெளகரியமான பிரச்சினையிலிருந்து மீள சில வீட்டு முறைகளைக் கையாளலாம். சரி வாங்க இப்பொழுது அதைப் பற்றி பார்க்கலாம்.

  வாயு உணவுகள்

  வாயு உணவுகள்

  கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு முறையை மேற்கொள்வது மிகவும் முக்கியம். இந்த மாதிரியான சமயங்களில் வாயுவை சேர்க்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. முட்டைகோஸ், பீன்ஸ், காலிபிளவர், பிரக்கோலி, அஸ்பாரகஸ், பிரஸ்ஸல்ஸ் முளைகள்,பாஸ்தா, பிரட், வெள்ளை சாதம், உருளைக்கிழங்கு, ஓட் பிரான், ராஸ்பெர்ரி, பேரிக்காய் போன்றவை வயிற்றில் வாயுவை உருவாக்கும்.

  அதே மாதிரி பால் பொருட்கள் அலற்சி ஏற்படுத்தினால் அதற்கு பதிலாக சோயா பால் அல்லது அரிசி பால் சேர்க்கவும்.

  எண்ணெய்யில் வதக்கிய உணவுகள் போன்றவை செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். சோடா, ப்ரூட் டி, செயற்கை பானங்கள் போன்ற கலோரி இல்லாத பொருட்களை தவிர்ப்பது நல்லது.

  நீர்ச்சத்து

  நீர்ச்சத்து

  போதுமான நீர்ச்சத்து உங்கள் குடலியகத்தை சரி செய்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. எனவே தினமும் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்கும் போது வாய்வு தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவை வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கும் நீர் அவசியம்.

  2012 ஆம் நடத்திய ஆராய்ச்சி படி ஒலியிகோஹைராம்னினோஸ்(அம்னியோடிக் திரவ குறைபாடு) ஏற்படாமல் இருக்க போதுமான நீர் மிகவும் அவசியம். நீங்கள் திராட்சை, க்ரான்பெர்ரி, அன்னாசி, ஆரஞ்சு ஜூஸ் கூட எடுத்துக் கொள்ளலாம். இது FODMAP சர்க்கரை சத்தை சீரணித்து குறைந்த வாய்வு தொல்லையை மட்டும் உருவாக்குகிறது. ஆனால் இது சில பேருக்கு சீரணிக்க கஷ்டமாக இருக்கும். சோடா போன்ற பானங்கள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

  நார்ச்சத்து

  நார்ச்சத்து

  தினமும் 25-30 கிராம் நார்ச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது குடலியகத்திற்கு போதுமான நீர்ச்சத்தை கொடுத்து மலம் வெளியேறுவதை எளிதாக்குகிறது. மேலும் வாய்வு தொல்லையை போக்குகிறது. கொடி முந்திரி, வாழைப்பழம், ஓட்ஸ், ஆளி விதைகள் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரை பேரில் நார்ச்சத்து மாத்திரைகள் கூட எடுத்துக் கொள்ளலாம்.

  சுறுசுறுப்பாக இருங்கள்

  சுறுசுறுப்பாக இருங்கள்

  கர்ப்ப காலத்தில் ஒய்வெடுப்பது முக்கியம் தான். ஆனால் படுக்கையிலயே நேரத்தை கழிப்பது உங்கள் சீரண மண்டலத்தை இன்னும் சோம்பேறியாக்கி பலவித உடல் உபாதைகளை உண்டாக்கும். எனவே லேசான உடற்பயிற்சி, நடைபயிற்சி உங்கள் உணவுகள் குடலில் வேகமாக செல்லுவதற்கும் சீரண சக்தியை அதிகரிக்கவும் உதவும். மேலும் இவை கர்ப்ப காலத்தில் எடையை கட்டுப்பாட்டில் வைக்கவும், கர்ப்ப கால நீரிழிவு நோய் ஏற்படாமல் காக்கவும் உதவுகிறது.

  யோகா பயிற்சி

  யோகா பயிற்சி

  கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளும் லேசான யோகா பயிற்சி உங்களுக்கு வாய்வு தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது. இந்த யோகா மார்பு திறப்பு மற்றும் முதுகுப்புற நெகிழ்விற்கு உதவுகிறது. மேலும் தண்டுவடம், வயிற்று உறுப்புகளுக்கு ஒரு நல்ல மசாஜ் கொடுக்கிறது.

  செய்யும் முறை

  முதலில் டேபிள் டாப் நிலையில் இருக்க வேண்டும்.

  உங்கள் கைகளை தோள்பட்டைக்கு கீழாக நேராக வைக்க வேண்டும்

  வயிறு மட்டும் பிட்ட பகுதியை மேல் தூக்கி தலை, மார்பு மற்றும் கழுத்தை மேல் நோக்கி நீட்ட வேண்டும். 5-10 முறை இதை செய்து விட்டு குழந்தை தவழும் அமைப்பில் இருந்து வெளியே வரவும்.

  குறிப்பு: இதில் பூனை போன்ற அமைப்பும் உள்ளது. ஆனால் கருவுற்ற பெண்கள் மாடு போன்ற நிலையை மட்டும் செய்யவும்.

  கோண நிலை , முக்கோண வடிவ நிலை, அமர்ந்து பக்கவாட்டில் நீட்டிப்பு, வின்டு ரிலீவிங் போஸ், குழந்தை நிலை. இவைகள் வாய்வு தொல்லையை போக்க உதவுகிறது.

  கவனத்தில் வைக்க வேண்டியவை :எந்தவொரு யோகா பயிற்சி செய்யும் முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

  பட்டர் மில்க்

  பட்டர் மில்க்

  பட்டர் மில்க் கர்ப்ப காலத்திற்கு சிறந்த உணவாகும். ஆனால் பால் அழற்சி இருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இதிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் உணவுகளை செரிக்க மற்றும் வாயுப் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது. எனவே பட்டர் மில்க் உடன் கொஞ்சம் ராக் சால்ட் சேர்த்து தினமும் இரண்டு அல்லது ஒரு முறை என குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  செமோமில் டீ

  செமோமில் டீ

  கெமோமில் டீ வாயுப் பிரச்சினையை போக்க உதவுகிறது. இவை வயிற்றில் சுரக்கும் வாய்வு அமிலம் பெப்சின் அளவை குறைக்கிறது. வாயுப் பிரச்சினைக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கிறது. இவை இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

  தயாரிக்கும் முறை

  ஒரு டீ கெமோமில் பேக்கை ஒரு கப் சூடான நீரில் மூழ்க வைக்கவும்

  தினமும் ஒரு முறையாவது இந்த டீயை எடுத்து கொள்வது நல்லது.

  வெந்தய நீர்

  வெந்தய நீர்

  வெந்தயத்தில் நார்ச்சத்து இருப்பதோடு குடலில் உள்ள நீரை ஊறிஞ்சி மலம் வெளியேறுவதை எளிதாக்குகிறது. இதனால் வாயுத் தொல்லையையும் போக்குகிறது.

  பயன்படுத்தும் முறை

  2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும்

  இரவிலேயே ஊற வைத்து விடுங்கள்

  காலையில் அதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்

  தளர்ந்த ஆடைகள்

  தளர்ந்த ஆடைகள்

  கர்ப்ப காலத்தில் இறுக்கமான ஆடைகள் அணிவது கூட வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். எனவே தளர்ந்த ஆடைகள் அணிவது நல்லது. தளர்ந்த ஆடைகள் வயிற்றுப் பகுதியில் எந்த வித அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் வாயுத் தொல்லை ஏற்படாமல் காக்கும்.

  கொஞ்சமாக சாப்பிடுதல்

  கொஞ்சமாக சாப்பிடுதல்

  கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளி விட்டு சாப்பிடும் போது வயிற்றில் வாயு உருவாகாமல் இருக்கும். எனவே உங்கள் உணவு வேளையை மூன்று வேளைக்கு பதிலாக 5-7 வேளையாக மாற்றி கொள்ளலாம். சாப்பிடும் போது அவசரப்படாமல் முழுங்காமல் நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதனாலும் வாயு உருவாகுவதை தடுக்க இயலும்.

  சாப்பிட்ட உடன் படுப்பதும் வாயுவை உருவாக்கும். அதே மாதிரி அமர்ந்து சாப்பிடுவது நல்லது.

  மலம் கழித்தல்

  மலம் கழித்தல்

  தினந்தோறும் மலம் கழித்தல் மூலம் மலச்சிக்கலை தடுக்கலாம்.

  மன அழுத்தம் மற்றும் டென்ஷன் போன்றவை வாயுவை உருவாக்கும். எனவே இதை தவிர்ப்பது நல்லது.

  வாயுவை உருவாக்கும் உணவுகளை பார்த்து தவிர்ப்பது நல்லது.

  தண்ணீர் அல்லது ஜூஸ் குடிக்கும் போது ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிப்பதற்கு பதிலாக அப்படியே குடிக்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Home Remedies For Gas during Pregnancy

  The beautiful experience of being pregnant is also associated with some embarrassing problems, one of which is gas and bloating. Many pregnant women complain about this problem. some simple and effective home remedies can help reduce gas during pregnancy. Healthy food, yoga, exercise, chamomile tea, water intake these are used.
  Story first published: Friday, May 11, 2018, 19:25 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more