TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
கர்ப்ப காலத்தில் மீன் உண்பது அறிவாளி குழந்தை பிறக்க உதவுமா?
மீன் என்பது புரதம் நிறைந்த ஒரு உணவு; புரதத்துடன் பல வைட்டமின்கள் மற்றும் பயனுள்ள அமிலங்கள் நிறைந்த ஒரு உணவு. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது சாதாரணம் தான். அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு தங்களுக்கு பிடித்த உணவுகளை, புளிப்பான உணவுகளை உண்ண அதிகம் இஷ்டம் இருக்கும்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிடலாமா கூடாதா என்பது பற்றி நாம் இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
கர்ப்ப கால உணவு முறை
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை அதிகம் உட்கொள்ள நினைப்பது போல, சில சமயங்களில் தங்களுக்கு பிடிக்காத உணவுகளையும் கூட தானாய் தேடி எடுத்து உண்பர். உதாரணமாக பாலை வெறுத்து ஒதுக்கும் பெண்கள் பாலை விரும்பி குடிக்க தொடங்குவர் அல்லது பால் மிகவும் பிடித்த பெண்கள் அதை வெறுத்து ஒதுக்குவர். இது போன்ற எந்த ஒரு மாற்றமும் நிகழலாம்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் கர்ப்ப காலத்தில் பெண்ணுக்குள் நடைபெறும் ஹார்மோன் மாற்றங்களால் நடைபெறுகின்றன.
மீன் உண்ணலாமா? கூடாதா?
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் மீன் உண்பதை குறித்த பல விதமான கட்டு கதைகள் நிலவுகின்றன. கர்ப்பிணிகள் மீன் உண்பது குறித்து ஏன் இத்தனை கதைகள் என்று யோசித்து பார்த்தால், கர்ப்பிணி உண்ணும் எந்த ஒரு உணவும் கருவில் வளரும் குழந்தையை பாதிக்க நேரிடலாம் என்பதால் தான். கருவை பாதிக்கும் எந்த ஒரு செயலையும் கர்ப்பிணிகள் தவிர்த்து விடுதல் வேண்டும்.
மீன் கர்ப்பிணிக்கு எதிரியா?
மீனில் எத்தனை நல்ல விஷயங்கள் உள்ளனவோ, அதே போல் சில வகை மீன் வகைகளில் உடலுக்கு பாதிக்க கூடிய விஷயங்களும் இடம் பெற்று இருக்கும். மீனில் இருக்கும் மெர்குரி போன்ற பொருட்கள் கர்ப்பிணி பெண்களின் உடலை பாதிக்க கூடியதாக இருக்கலாம். மீனில் இருக்கும் மெர்குரி போன்ற சில விஷயங்கள், மீனை கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு எதிரியாகவே மாற்றுகின்றன.
எதிரி அல்ல நண்பன்!
மீன் உணவு கர்ப்பிணி பெண்களுக்கு முற்றிலுமாக எதிரி அல்ல; ஒரு சில வகை மீன்களே கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது அல்ல. அந்த ஒரு சில மீன் வகைகளை தவிர மற்ற வகை மீன்கள் எல்லாமே கர்ப்பிணி பெண்ணின் உடலுக்கு மற்றும் அவர்களின் வயிற்றில் வளரும் கருவிற்கு பல வித நன்மைகளையே செய்கின்றன.
மேலும் படிக்க: கணவருக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவீரா?
புத்திசாலி குழந்தை!
கர்ப்பிணி பெண்கள் சரியான வகை மீன்களை தேர்ந்தெடுத்து, நன்கு உண்டு வந்தால் அது அவர்களின் வயிற்றில் வளரும் கருவிற்கு மிகவும் நல்லது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வு முடிவுகள், கர்ப்பிணி பெண்கள் தீங்கு தராத மீன் வகைகளை தேர்ந்து எடுத்து உண்பது அவர்களின் வயிற்றில் உருவாகும் கருவை புத்திசாலிகளாக உருவாக்கி, வளர வைக்கும் என்று கண்டு அறியப்பட்டு உள்ளது.
புத்திசாலி குழந்தைக்கு காரணம்!?
கர்ப்பிணி பெண்கள் தீங்கு தராத மீன் வகைகளை தேர்ந்து எடுத்து உண்டு வருவது, அவர்கள் புத்திசாலி குழந்தைகளை பெற உதவும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் மீனில் உள்ள புரதம், ஒமேகா 3 அமிலங்கள் மற்றும் பிற கொழுப்பு அமிலங்கள் தான். மீனில் போலிக் அமில வகையும் காணப்படுகின்றன. இந்த அனைத்து வகை சத்துக்களும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றன.
சரியான மூளை வளர்ச்சி!
குழந்தை உருவாகும் நிலையில் மூளை வளர்ச்சி சரியாக நடந்தால், குழந்தைகள் பிறந்த நேரம் முதல் வளர்ச்சி கால கட்டத்திலேயே அதிக புத்திசாலி தனத்தை வெளிப்படுத்துபவராக இருப்பர். குழந்தைகள் பிறந்த பின் அவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டும் திடமாக, கூர்மையாக இருக்க கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ளும் உணவும், அந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் மேற்கொள்ளும் பழக்க வழக்க முறைகளும் தான் அடிப்படையாக அமையும்.
மேலும் படிக்க: முகநூலில் அறிமுகமான முகமே அறியாத நண்பன் மூலம் கருத்தரித்த பெண்ணின் கதை!