இனிமேல் உங்கள் குழந்தையை பிறப்பதற்கு முன்னரே நீங்கள் பார்க்க முடியும். இதன் மூலமாக...

Posted By:
Subscribe to Boldsky

விஞ்ஞான வளர்ச்சி என்பது மக்களுக்கு நல்லது, கெட்டது என இரு வகையிலும் பலனை அளித்து வருகிறது. ஆதி காலம் முதல் ஒரு பெண் கருத்தரித்தால் அவள் என்ன குழந்தையை ஈன்றேடுக்கிறார் என்பதை பத்து மாதம் பொறுத்திருந்து தான் பார்த்தனர்.

ஸ்கேனிங் என்ற தொழில்நுட்பம் வந்த பிறகு பிரசவ காலத்தின் போதே ஆணா, பெண்ணை கண்டறிந்து கூறினர். இதன் காரணமாக பெண் சிசுக் கொலைகள் தான் அதிகரித்தன.

இப்போது இதையும் தாண்டி, கருவில் சிசு வளரும் போதே அவரை நேரில் காண வழிவகுத்துள்ளது புதியதோர் தொழில்நுட்பம். இதன் மூலமாக ஒரு தாய் தன் குழந்தையை கண்டும் உள்ளார். அவரது அனுபவம் இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வி.ஆர்!

வி.ஆர்!

விர்சுவல் ரியாலிட்டி என்பதன் சுருக்கமே வி.ஆர்., இந்த தொழில்நுட்பத்தின் மூலமாக இல்லாத ஒன்றையும் காண்பிக்க முடியும், காண முடியாததையும் காண்பிக்க முடியும்.

ஆச்சரியம் அளிக்கும் அனுபவம்!

ஆச்சரியம் அளிக்கும் அனுபவம்!

4D அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து, பிறக்காத குழந்தயை வி.ஆர். தொழில் நுட்பத்தின் மூலம் காண்பது வாழ்நாள் பாக்கியம் என்றே கூறலாம். இது ஒரு ஐடியாவாக பிறந்து, அதை செயல்படுத்தியும் காட்டியுள்ளனர்.

தோழியிடம் உதவி!

தோழியிடம் உதவி!

பெரும்பாலும் 3D அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மூலம் படமாக மட்டுமே கருவில் வளரும் சிசுவை கண்ட சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. ஆனால், இந்த புதிய தொழில்நுட்பத்தில் காணொளியாகவே குழந்தையை காண முடியும். இதற்காக இந்த தொழில்நுட்பம் தெரிந்த தோழியிடம் உதவி நாடியுள்ளார் அந்த தாய்.

எப்படி என்றே தெரியாமல் ஆரம்பத்த கனவு...

எப்படி என்றே தெரியாமல் ஆரம்பத்த கனவு...

உலகிலேயே இதுதான் முதல் முறை இப்படி ஒரு சம்பவம் நடப்பது. ஆவா மெடிக்கல் செண்டரிடம் உதவி நாடினர். யோசனை நன்றாக இருக்கவே அவர்கள் இதை செயல்படுத்த முயற்சி செய்தனர். அவர்கள் இதற்காக 4అ அல்ட்ராசவுண்ட் சிச்டமை உருவாக்கினர். மேலும், எப்படி கோப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அந்த கர்ப்பிணிக்கு ஆலோசனை வழங்கினர்.

ஒரு வியாழனில்....

ஒரு வியாழனில்....

ஒரு வியாழன் தினத்தில் 4D அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் செய்ய அந்த பெண் சென்றுள்ளார். அப்போது அவர் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார். முதலில் 3D மாடலில் டிஸைன் செய்யப்பட்ட கருவில் வளரும் குழந்தையை வி.ஆர் கண்ணாடி மூலம் அந்த பெண்மணி கண்டார்.

Image Courtesy

வியப்பளித்த நிகழ்வு!

வியப்பளித்த நிகழ்வு!

மாடலிங் செய்த உரு என்றாலும், தனக்கு பிறக்க போகும் குழந்தையை முன்னரே பார்ப்பது என்பது ஓர் அரிய நிகழ்வு தானே. சிசு காற்றில் மிதப்பது போன்ற காட்சிகளை அவர் கண்டார். அதுவும், அவருக்கு மிகவும் அருகாமையில்.

Image Courtesy

இசை கோர்வை!

இசை கோர்வை!

கர்ப்பிணி பெண்ணுக்கு அந்த உணர்வு ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக இசை கோர்வை எல்லாம் செய்யப்பட்டிருந்தது. இதில் முக்கியமாக ஸ்கேனிங் 32 வாரத்திற்கு முன்னரே செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

எதிர்காலம்!

எதிர்காலம்!

எதிர்காலத்தில் கருத்தரித்த நாள் முதலே கூட தன் சிசுவுடன் பெற்றோர் வி.ஆர் முறையில் வாழும் நிகழ்வுகளும் நடக்கலாம். எதுவும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Now You Can See Your Baby Even Before Giving Birth

Now You Can See Your Baby Even Before Giving Birth
Story first published: Thursday, January 19, 2017, 15:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter