பிரசவக் காலத்தில் கர்ப்பிணி பெண் சாப்பிட வேண்டிய பவர் ஃபுல் உணவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

பிரசவக் காலத்தில் பெண்கள் தங்கள் நலம் மட்டுமின்றி, தங்களது கருவறையில் வரும் குழந்தையின் நலன் கருதியும் நல்ல உணவினை தங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியது நல்லது. எனவே, கர்ப்பிணி பெண்கள் எந்தெந்த உணவு தங்களுக்கு எந்தெந்த நேரத்தில் வேண்டும் என அறிந்துக் கொண்டு அதற்கேற்ப உணவருந்த வேண்டியது அவசியம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு இளநீர் அளிக்கும் நன்மைகள்!!!

பிரசவக் காலத்தில் பெண்களுக்கு இரட்டிப்பு மடங்கு காசியம் சத்து தேவைப் படுகிறது. பால் பருகுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து கிடைக்கும். ஆனால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் தான் சிறந்தது. எனவே, நல்ல உணவாக இருப்பினும் அதை பிரசவக் காலத்திற்கு ஏற்ப எப்படி உட்கொள்ள வேண்டும் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.....

கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமப்பூ அளிக்கும் 6 முக்கிய நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பருப்பு மற்றும் பீன்ஸ்

பருப்பு மற்றும் பீன்ஸ்

பருப்பு, பயிறு வகை உணவுகள் மற்றும் பீன்ஸ், இவற்றில் இருக்கும் புரதம் கர்ப்பிணி பெண்களுக்கு தினம் தேவைப்படுகிறது. பீன்ஸ் மற்றும் பயிறு வகை உணவுகளில் இவை சிறந்த அளவில் இருக்கின்றன. இதில் இருக்கும் நார்ச்சத்து பிரசவக் காலத்தில் ஏற்படும் குடல் இயக்க குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது.

கொழுப்பு நீக்கப்பட்ட பால்

கொழுப்பு நீக்கப்பட்ட பால்

பிரசவ காலத்தில் கால்சியம் சத்து இரட்டிப்பு மடங்கு தேவைப்படும். இதற்கு பால் சிறந்த உணவு எனும் போதிலும் கூட, கொழுப்பு நீக்கப்பட்ட பால் தான் சிறந்ததாக இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து நிறைய இருக்கிறது. இது பிரசவக் காலத்தில் மயக்கம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மற்றும் குமட்டல் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.

கொழுப்பு குறைவான இறைச்சி

கொழுப்பு குறைவான இறைச்சி

இரும்பு சத்தும் உங்களுக்கு பிரசவக் காலத்தில் இரட்டிப்பு மடங்கு தேவைப்படுகிறது. எனவே, இரும்பு சத்து நிறைய உள்ள உணவுகளை நீங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. இறைச்சியை தேர்வு செய்யாலாம், ஆனால் கொழுப்பு குறைவான இறைச்சி தான் நல்லது.

சீஸ்

சீஸ்

சீஸில் இருக்கும் கால்சியம் மற்றும் உயர்ரக புரதச்சத்து பிரசவக் காலத்தில் கர்ப்பிணி பெண்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவாகும்.

முட்டை

முட்டை

முட்டை, புரதச்சத்து நிறைய உள்ள உணவாகும். மற்றும் இது உடலுக்கு தேவையான அமினோ அமிலத்தையும் வழங்குகிறது. வேக வைத்து சாப்பிட கஷ்டமாக இருந்தால் எண்ணெய் குறைவாக பயன்படுத்தி நறுக்கி காய்கறிகளை சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

ஓட்ஸ் மீல்ஸ்

ஓட்ஸ் மீல்ஸ்

பிரசவக் காலத்தில் உடலில் கொழுப்பை கட்டுக்குள் வைக்க ஓட்ஸ் மீல்ஸ் உதவுகிறது.

கீரை உணவுகள்

கீரை உணவுகள்

ஃபோலேட் , இரும்புச்சத்து நிறைய இருக்கும் உணவு கீரை. தினமும் சிறிதளவு கீரையை டயட்டில் சேர்த்துக் கொள்வது பிரசவக் காலத்தில் பெண்களுக்கு நல்ல உடல் வலுவை தரவல்லது.

ஆரஞ்சு

ஆரஞ்சு

வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழம் ஆரஞ்சு. ஏறத்தாழ 90% நீர் உள்ளடிக்கியுள்ள பழம் ஆரஞ்சு. இது உடலில் நீரின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pregnancy Power Foods

Everyone should know about these Pregnancy Power Foods, take a look.
Story first published: Thursday, September 24, 2015, 17:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter