கர்ப்பமாக இருப்பதை வெறுக்கிறேன் - கவர்ச்சி அழகி கிம் கர்தாஷியன் தாறுமாறு கருத்து!

Posted By:
Subscribe to Boldsky

கிம் கர்தாஷியன், அமெரிக்காவின் மாபெரும் பெண் தொழிலதிபர், நடிகை, மாடல், சமூக ஆர்வலர் ஆவார். தொலைக்காட்சி மூலம் மிகவும் பிரபலமானவர் கிம் கர்தாஷியன். இவரது பெற்றோர்கள் கர்தாஷியன் ஆர்மினிய, ஸ்காட்டிஷ் ஆவர். இவரது சகோதரிகளும் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மிகவும் பிரபலமானவர்கள்.

இவர் டேமன் தாமஸ் என்பவரை முதலில் திருமணம் செய்து 2004-ல் விவாகரத்து பெற்றார். பிறகு க்றிஸ் என்பவரை 2011-ல் திருமணம் செய்து 2013-ல் விவாகரத்து செய்தார். இப்போது பிரபல பாப் இசைப் பாடகர் வெஸ்ட் என்பவருடன் திருமண பந்தத்தில் ஈடுபட்டு வருகிறார். கிம் கர்தாஷியன் தற்போது நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறார்.

தனது கர்ப்பக் காலத்தைப் பற்றி தான், தனது சொந்த இணையத்தில் உணர்வுகளை தாறுமாறாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார் கிம் கர்தாஷியன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பமாக இருப்பதை வெறுக்கிறேன்

கர்ப்பமாக இருப்பதை வெறுக்கிறேன்

உலக கவர்ச்சி அழகியும், மாடலுமான கிம் கர்தாஷியன் இப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் தனது சொந்த இணையத்தில் தன் கர்ப்ப காலத்தை பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். இதில், தான் கர்ப்பமாக இருக்கும் இந்த காலக்கட்டம் தான் தனது வாழ்வில் மிகவும் கொடுமையான காலமாக கருதுவதாக கூறியுள்ளார்.

எப்படி சந்தோசமாக இருக்கிறார்கள்?

எப்படி சந்தோசமாக இருக்கிறார்கள்?

தனது தாய் மற்றும் சகோதரி கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்ததாய் கூறியிருந்தார்கள். அவர்கள் எப்படி சந்தோசமாக இருந்தார்கள் என்று தெரியவில்லை. இது மிகவும் கொடுமையானது, வலி மிகுந்தது என்று கூறியுள்ளார்.

காலை உடல்நிலை

காலை உடல்நிலை

தினமும் காலையில் எழும் போது உடல்நிலை சரியில்லாமல் தான் இருக்கிறது. மற்றும் ஊடகங்கள் கர்ப்பமாக இருப்பதை விமர்சிப்பதும், நோன்டுவதும் கூட சரியில்லை என்று கூறியுள்ளார்.

சரும அழகு குறித்த கருத்துகள்

சரும அழகு குறித்த கருத்துகள்

மற்றும் கர்ப்பமாக இருப்பதால் நான் என் சருமத்தையே உண்மையாக உணர முடியவில்லை. இதை கூற மிகவும் கடினமாக இருக்கிறது. நான் செக்ஸியாக உணர முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற உணர்வு

பாதுகாப்பற்ற உணர்வு

மேலும், தான் கர்ப்பக் காலத்தில் மிகவும் பாதுகாப்பற்றதாகவும், முரடாகவும் உணர்கிறேன் என்றும் கிம் கர்தாஷியன் தனது கர்ப்பக் காலத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

சவாலாக இருக்கிறது

சவாலாக இருக்கிறது

மீண்டும் நான் எனது பழைய அழகுடன் திரும்புவது சவாலாக இருக்கும். இந்த சவாலை நான் விரும்புகிறேன். மீண்டும் நான் பழையபடியே திரும்புவேன் என்றும் கிம் கர்தாஷியன் கூறியிருக்கிறார்.

குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

என்ன இருந்தாலும், நான் என் குழந்தையை எதிர்பார்த்து மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன். குழந்தை ஒரு விலைமதிப்பற்ற செல்வம். கர்ப்பக் காலத்தை வெறுத்தாலும் நான் என் குழந்தையை மிகவும் நேசிக்கிறேன் என்றும் தனது இணையத்தில் கிம் கர்தாஷியன் கருத்து தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kim Kardashian Admits How She Really Feels About Pregnancy

Kim Kardashian Admits How She Really Feels About Pregnancy? take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter