For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகள் காபி குடிப்பது கருவுக்கு ஆபத்து–ஆய்வில் தகவல்

By Mayura Akilan
|

Avoid coffee during pregnancy
கர்ப்பிணிகள் தெருவோர கடைகளில் காபி பருகுவதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக அளவில் காஃபின் கரு குழந்தையை பாதிப்பதோடு கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதாம் எனவேதான் தெருவோர கடைகளில் காபி பருகுவதை தவிர்க்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இரண்டு கப் காபி

அதேபோல் கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிகமாக காபி அருந்தினால் பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்று இங்கிலாந்தில் உள்ள ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே வீட்டில் தயாரிக்கப்பட்ட காபியாகவே இருந்தாலும் நாளொன்றுக்கு 2 சிறிய கப் காபி பருகுவதில் தவறில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ், லெய்செஸ்டர் பல்கலைக் கழகங்கள் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டனர். சுமார் 2,500 கருவுற்ற பெண்களிடம் வினாத்தாள்கள் கொடுத்து பதிலளிக்குமாறு செய்தனர். இதில் அவர்கள் நாளொன்றுக்கு அருந்தும் காபியின் அளவு பற்றி விவரம் கோரப்பட்டது.

இதன்படி நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி அருந்தும் கருத்தரித்த பெண்கள், எடை குறைவான குழந்தைகளை பெற்றெடுப்பதாக தெரிவித்துள்ளதோடு, பின்னால் இந்த குழந்தைகள் வளரும்போது சிக்கல்கள் ஏற்படுவதாகவும், சில குழந்தைகள் விரைவில் இறந்து போவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவின் விபரங்கள் " இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியிடப்பட உள்ளது.

கருச்சிதைவு அபாயம்

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவும் கருவுற்ற பெண்கள் நாளொன்றுக்கு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காபி எடுத்துக் கொண்டால் ஏற்படும் பாதிப்பினை வெளியிட்டிருந்தது கருத்தரித்த முதல் 12 வாரங்களுக்கு பெண்கள் காஃபைனிலிருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் இந்த காலக்கட்டங்களில்தான் கருச்சிதைவு சாத்தியங்கள் அதிகம் என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

English summary

Avoid coffee during pregnancy | கர்ப்பிணிகள் காபி குடிச்சா கருவுக்கு ஆபத்து!

Pregnant mothers should avoid consuming coffee from high street cafes as they contain more caffeine than recommended levels, researchers say.
Story first published: Thursday, February 16, 2012, 12:06 [IST]
Desktop Bottom Promotion