For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்ப்பால் அளிப்பதால், பெண்ணின் உடலில் எவ்வளவு எடை குறையும்?

தாய்ப்பால் அளிப்பது என்பது தாய்மார்களின் முக்கிய கடமை! தாய்ப்பால் அளிப்பதால், பெண்ணின் உடலில் எவ்வளவு எடை குறையும் என்று இந்த பதிப்பில் படிக்கலாம்.

|

குழந்தை பிறந்தவுடன், அவர்களுக்கு ஆறு மாத காலம் ஆகும் வரை கொடுக்கப்படும் முக்கிய உணவு தாய்ப்பால். தாய்ப்பால் என்பது ஒரு அற்புத விஷயம்; எந்த ஒரு பொருளையும் தயாரித்து விடலாம், எதிலும் கலப்படம் நிகழும் என்ற நிலையில் குழந்தைகளுக்காக அன்னையின் உடலில் சுரக்கப்படும் தாய்ப்பால் மட்டுமே எந்த ஒரு கலப்படமும் இல்லாத பரிசுத்தமான ஒரு விஷயம் என்று கூறலாம்.

how much calories can be burned in breastfeeding

குழந்தைகளை கடவுள் என்பர்; அந்த கடவுள்களுக்காக கடவுள் அனுப்பிய தூய்மையான பரிசு தான், இந்த தாய்ப்பால்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்ணின் உடல்..!

பெண்ணின் உடல்..!

பெண்ணின் உடல் சற்று விசித்திரமான அமைப்பை கொண்டது; அவர்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த மாற்றங்களால் தான் ஆணை விட பெண்கள் வயது முதிர்ந்தவர்களாக தெரிவது, பெண்களின் உடல் எடை அதிகமாகி விடுவது போன்ற விஷயங்கள் நடக்கின்றன. மேலும் பெண்களின் உடல் கர்ப்பம் மற்றும் பிரசவம் போன்ற கால கட்டங்களில் பயங்கரமான மாறுதல்களுக்கு உள்ளாகிறது.

காலகட்டத்திற்கு ஏற்ப!

காலகட்டத்திற்கு ஏற்ப!

இந்த மாற்றங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள் தனக்குள் வளரும் குழந்தைக்கும் சேர்த்து உண்பதால், அவர்தம் உடல் எடை அதிகரிக்கிறது; பிரசவத்தின் பொழுது நிகழும் மாற்றங்களால், சில பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கலாம்; சிலருக்கு அதிகரிக்காது இருக்கலாம்.

ஆனால், தாய்ப்பால் கொடுக்கும் கால கட்டம் பெண்களின் கூடிய எடையை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது; இந்த ஒரு கூற்றின் உண்மை நிலை என்ன என்று இப்பொழுது படித்து அறியலாம்.!

தாய்ப்பால் அளிப்பு எடையை குறைக்குமா?

தாய்ப்பால் அளிப்பு எடையை குறைக்குமா?

தாய்ப்பால் அளிப்பது பெண்களின் எடையை குறைக்க உதவுமா என்ற கேள்விக்கு ஆம் மற்றும் இல்லை என்ற இரு விடைகளுமே பொருந்தும். எப்படி என்று கேட்கிறீர்களா? குழந்தைக்கு பால் கொடுக்க, கொடுக்க வேண்டிய பால் உருவாக பெண்ணின் உடல் சக்தியில் 25 சதவிகிதம் பயன்படுத்த படுகிறது. மேலும் தாய்ப்பால் சுரப்பு நிகழ, பெண்கள் நல்ல சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்; அச்சமயம் பெண்களுக்கு வழக்கத்தை விட அதிகமான அளவு பசியும் எடுக்கும்.

சரியான பதில்!

சரியான பதில்!

எனவே, இந்த தாய்ப்பால் அளிக்கும் முறையில் பெண்களின் எடை கூடவும் செய்யலாம்; குறையவும் செய்யலாம். ஆனால், இந்த நடுநிலையான ஒரு பதிலை தாண்டிய உண்மையான பதில் என்ன என்றால், அது தாய்ப்பால் அளிப்பது கண்டிப்பாக பெண்களின் உடலின் எடையை குறைய செய்கிறது என்பது தான்! உடல் எடை குறைவது, சரியாக நேர நேரத்திற்கு தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே!

எப்படி குறையும்!

எப்படி குறையும்!

முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் அளிக்கும் பொழுது, குழந்தைகள் வேறு உணவு எதையும் உண்ண மாட்டார்கள்; ஆறு மாதத்திற்கு பிறகு தான் குழந்தைகளுக்கு திட உணவு வழங்கப்படும். அவ்வாறு வேறு உணவு இல்லாத, பால் மட்டும் தான் என்ற சூழலில், குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலால் ஒரு நாளைக்கு 300 முதல் 700 கலோரிகள் பெண்களின் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த அளவு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 8-12 முறை தாய்ப்பால் கொடுத்தால் மட்டுமே சரியாக குறையும்.

குறைந்த பட்ச அளவு!

குறைந்த பட்ச அளவு!

குறைந்தது 400 முதல் 600 கலோரிகளாவது பெண்ணின் உடலில் இருந்து குழந்தை பால் குடிப்பதால் குறைக்கப்பட்டு விடும்; இந்த அளவு கலோரிகள் குறைய குழந்தைகள் குறைந்த பட்சம் 20 முதல் 30 அவுன்ஸ் பாலினை கண்டிப்பாக குடித்து இருக்க வேண்டியது அவசியம்..! குழந்தைகள் ஒரு அவுன்ஸ் பால் குடிப்பதால், 20 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

முதன்முறை அளவு!

முதன்முறை அளவு!

பெண்களின் உடலில் இருக்கும் எடையில், பிரசவம் நிகழ்ந்து, முதன் முதலாக குழந்தை பால் குடித்ததும் 300 கலோரிகள் குறைக்கப்படும். ஏனெனில் குழந்தை அப்பொழுது தான் தாயின் வயிற்றில் இருந்து வெளி வந்து இருப்பதால், அதனால், அதிக அளவு பாலை குடிக்க முடியாது; பின்பு நாட்கள் செல்ல குழந்தைகள் குடிக்கும் பாலின் அளவு 300 முதல் 700 வரை என்ற அளவில் இருக்கும்.

சராசரி கலோரி அளவு!

சராசரி கலோரி அளவு!

பெண்களின் உடலுக்கு சரியாக நாள் ஒன்றுக்கு 1800 முதல் 2000 வரையிலான கலோரிகள் தேவைப்படும். இதுவே குழந்தை பிறந்து பால் கொடுக்கும் சமயங்களில், குழந்தைக்கு தேவையான பால் சுரப்பு நிகழ பெண்கள் கொஞ்சம் அதிகமான கலோரிகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது பெண்கள் நாள் ஒன்றுக்கு 2200 முதல் 3000 வரையிலான அளவு கலோரிகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்!

தாய்க்கு ஏற்படும் நன்மைகள்!

தாய்க்கு ஏற்படும் நன்மைகள்!

குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதால், தாய்மார்களின் உடல் எடை குறைக்கப்படுகிறது என்று மேற்கண்ட பத்திகளில் பார்த்தோம். இதைத்தவிர ஒரு வருடம் வரை அல்லது அதற்கும் மேலாக குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் அன்னைக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பெண்களில் சிலருக்கு குடல் சார்ந்த சர்க்கரை நோய் இருந்தால், தாய்ப்பால் அளிப்பது டைப் 2 சர்க்கரை நோய் நிலையை ஏற்படுத்தலாம்!

கணவன்மாரின் பங்கு!

கணவன்மாரின் பங்கு!

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பொழுது, வெளியேறும் பாலின் அளவு பெண்களின் உடல் எடையை குறைக்க செய்கிறது. அது போல், கர்ப்ப காலத்தில், பிரசவம் முடிந்த சில மாதங்களில் செய்ய முடியாத, கலவியை ஒரு குறிப்பிட்ட மாதங்களை கடந்த பின் கணவருடன் சேர்ந்து செய்தால், அச்சமயம் அந்த செயலால் கூட பெண்களின் எடை குறையும்.

கணவரும் பால் குடிக்கலாம்!

கணவரும் பால் குடிக்கலாம்!

மேலும் கலவி செயலில் கணவரும் மனைவியிடம் இருந்து கொஞ்சம் பாலை அவ்வப்போது குடித்து வந்தால், அது கணவரின் உடலுக்கும் நல்லது; மனைவிக்கும் உடல் எடை குறைய உதவும்; ஆனால், இந்த சமயத்தில் குழந்தையை நினைவில் வைத்து ஈடுபட வேண்டும்! ஏனெனில், பால் முழுதையும் கணவர் உறிஞ்சி எடுத்து விட்டால், பின் பிள்ளைக்கு ஒன்றும் இல்லாமல் போய்விடும்; ஆகையால், குழந்தைக்கு ஆறு மாதம் முடிந்த பின் இந்த செயல்பாட்டில் ஈடுபடுதல் நல்லது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Much Calories Can Be Burned In Breastfeeding?

How Much Calories Can Be Burned In Breastfeeding?
Story first published: Saturday, September 8, 2018, 16:04 [IST]
Desktop Bottom Promotion