Latest Updates
-
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்! -
ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
International Yoga Day 2026: முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த 4 யோகாசனங்களை தினமும் செய்யுங்க.. -
சூரியன் மிதுன ராசி செல்வதால் உருவாகும் ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது! -
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா?
இந்த 5 ராசி ஆண்கள் ரொம்ப கண்டிப்பான அப்பாவாக இருப்பார்களாம்... இவங்க குழந்தைங்க ரொம்ப பாவம்...!
தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தந்தையின் பங்கு என்பது ஈடுசெய்ய முடியாதது. ஒரு குழந்தைக்கு, அவர் ஆதரவு மற்றும் உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார், மேலும் குடும்ப உலகில் அவர்களின் இடத்தை யாராலும் மாற்றமுடியாது.
சில அப்பாக்கள் ரொம்ப கூலாகவும், வேடிக்கையாகவும் இருக்கும்போது, மற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடுமையாகவும் சமரசம் செய்யாமலும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் குழந்தையின் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கையில் வாய்ப்புகள் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளனர் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

ஜோதிடத்தின் உதவியுடன், ஒரு நபரின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கையின் வெவ்வேறு சூழ்நிலைகளை அவர் கையாளும் விதம் பற்றி நீங்கள் நிறைய கண்டுபிடிக்க முடியும். தந்தைகள் என்று வரும்போது, அவர்கள் வெவ்வேறு குணாதிசயங்களால் வரையறுக்கப்படுகிறார்கள். எனவே தங்கள் குழந்தைகளிடம் மிகவும் கண்டிப்பான தந்தையாக இருப்பவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசி தந்தைகள் இயல்பிலேயே மிகவும் உறுதியான மற்றும் பிடிவாதமானவர்கள். அவர்கள் எதைச் சொன்னாலும் செய்தாலும் அதுவே இறுதி வார்த்தையாகும், மற்றவர்களுக்கு எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும், அது குடும்பத்தில் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று.
எனவே ஒரு தந்தையாக ரிஷப ராசி தந்தைகள் மிகவும் வற்புறுத்தக்கூடியவர்களாக இருக்க முடியும், மேலும் குழந்தைகளை சரியான பாதையில் வழிநடத்துவதற்காக அவர்கள் மீது நிறைய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
கன்னி
கன்னி ராசி தந்தைகளும் கண்டிப்புக்கு பெயர் போனவர்கள். அவர்களைப் போலவே அவர்களின் குழந்தையும் அனைத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். எனவே அவர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வளவு நேசித்தாலும், அதை வெளிப்படுத்தாவராகவும், கண்டிப்பானவராகவும் இருப்பார்கள்.
ஒவ்வொரு தவறுக்கும் அவர்கள் எவ்வாறு ரியாக்ட் செய்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களுடன் உரையாடுவது பெரும்பாலும் அவர்களின் குழந்தைகளுக்கு கடினமாக இருக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை அவர்களுக்கு எப்போதும் வாழ்க்கையில் ஆர்வமாக இருக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தங்கள் குழந்தைகள் ஏதாவது ஒரு விஷயத்தால் உந்தப்பட்டு, வாழ்க்கையில் சிறந்ததை அடைய ஆர்வமும் உற்சாகமும் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இருப்பினும், தங்கள் குழந்தைகளை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் முயற்சியில், அவர்கள் தங்கள் குழந்தையின் உணர்ச்சித் தேவைகள் மற்றும் அவர்களின் விருப்பங்களைப் பற்றி அதிகம் கவலைப்படாதவர்களாக இருக்கிறார்கள்.
மகரம்
மகர ராசி தந்தைகள் வாழ்க்கையில் பகுத்தறிவு மற்றும் நிஒழுக்கம் இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் கூட தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினம், மேலும் அவர்கள் எப்போதும் தங்கள் அறிவு மற்றும் லாஜிக்கான சிந்தனையால் பாதுகாக்கப்படுகிறார்கள்.
பெற்றோருக்குரிய அணுகுமுறையைப் பொறுத்தவரை அவர்கள் மிகவும் கண்டிப்பானவர்களாகவும் கடுமையாகவும் இருப்பதாகத் தோன்றலாம். இது அவர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் மீது பயத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கும்பம்
துலாம் ராசி தந்தைகள் அவர்களின் நேர்மை மற்றும் இராஜதந்திர உணர்வுக்காக அறியப்படுகிறார்கள். ஒரு தந்தையாக அவர்கள் இணக்கமான மற்றும் சீரான குடும்பத்தை பராமரிக்க முயற்சி செய்கிறார்கள். குடும்பத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிப்பதாக அவர்கள் நம்புவதால், விதிகளை அமல்படுத்தும் போது துலாம் ராசி தந்தைகள் மிகவும் உறுதியாக உள்ளனர்.
அதேசமயம் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் திறந்த தொடர்பை ஊக்குவிக்கிறார்கள் மற்றும் ஒத்துழைப்பு மற்றும் பச்சாதாப உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
