குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தாம்பத்திய வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்!

Posted By:
Subscribe to Boldsky

குழந்தைப் பெற்ற பிறகு பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக ஹார்மோன் மாற்றங்கள். இவை, தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு தடங்கலாக இருக்கும். இந்த மாற்றம் ஒருசில மாதங்களில் சரியாகிவிடும். ஆனால், அதுவரை ஆண்கள் காத்திருக்க வேண்டும்.

இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் கணவன், மனைவி கவனத்திற்கு!

உடல் தொளதொளவென இருப்பதும், பிறப்புறுப்பு வலிமிகுந்து காணப்படுவது பெண்களிடம் காணப்படும் உடல்நிலை மாற்றங்கள் ஆகும். எனவே, குழந்தைபெற்ற பிறகு பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? உடலுறவில் ஈடுபடுவதை எத்தனை நாட்களுக்கு தள்ளி வைக்கலாம்? என்பது பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரச்சனை #1

பிரச்சனை #1

இரத்தப்போக்கு!

குழந்தை பெற்ற பிறகு ஆறேழு வாரத்திற்கு பெண்களுக்கு இரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படலாம். இதற்கு பிரசவத்தின் போது அவர்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்பட்ட கிழிசல் காரணமாக இருக்கின்றது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அவர்களுக்கு அரவணைப்பாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிரச்சனை #2

பிரச்சனை #2

பால் சுரத்தல்!

முதல் முறை குழந்தை பெற்ற பிறகு தான் பெண்களுக்கு மார்பகத்தில் பால் சுரக்க ஆரம்பிக்கும். சிலருக்கு அளவிற்கு அதிகமாக பால் சுரக்கும். சிலருக்கு குறைவாக பால் சுரக்கும். எனவே, இதனால் சிலர் அசௌகரியமாகவும், சிலர் சற்று கடினமாக / வலியுடன் காணப்படுவர்.

பிரச்சனை #3

பிரச்சனை #3

சி - செக்சன்!

அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அடிவயிற்றில் அந்த காயம் ஆறுவதற்கு ஆறு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.

எனவே, குழந்தை பிறக்கும் முன்னர் 9 மாதங்கள் எப்படி உங்கள் மனைவியை அரவணைப்புடன் பார்த்துக் கொண்டீர்களோ, அதே போல இந்த ஆறு மாதங்களும் நீங்கள் அவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பிரச்சனை #4

பிரச்சனை #4

உடல் அசௌகரியம்!

குழந்தை பிறந்த பிறகு பெண்களின் உடல்வாகு சற்று மாறும். முக்கியமாக வயிறு பகுதி சற்று தொளதொளவென்று இருக்கும்.

இந்த உடல்வாகு மாறும் வரை அல்லது சற்று பழைய நிலைக்கு ஃபிட் ஆகும் வரை பெண்கள் உடலுறவில் ஈடுபட தயங்குவார்கள்.

பிரச்சனை #5

பிரச்சனை #5

பெண்ணுறுப்பு!

சுகப்பிரசவம் ஆன பெண்களுக்கு பிறப்புறுப்பு சற்று விரிவடைந்திருக்கும். இது, பழைய நிலைக்கு திரும்ப நான்கைந்து மாதங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே, அதுவரை தாம்பத்தியத்தில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.

பிரச்சனை #6

பிரச்சனை #6

வலி!

குழந்தை பெற்ற பிறகு, பெண்களின் உடலில் சில ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதனால், தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அவர்கள் சற்று வலியுடன் உணர்வார்கள்.

இதை, கணவன்மார்கள் புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும். மாறாக அவர்களை வற்புறுத்துவது, உடல் ரீதியாக வலியை தாங்கிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு மன ரீதியான வலியும் சேரும்படி ஆகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Intercourse Problems Women Face After Pregnancy

Six Intercourse Problems Women Face After Pregnancy, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter