For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தை பெற்ற பின்பு பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!!!

By Aruna Saravanan
|

குழந்தை வரம் வேண்டி தாய்மார்களும் தந்தைமார்களும் கோயில் கோயிலாக சுற்றுவது உண்டு. தன் வீட்டிலும் மழலை செல்வம் கிடைக்காதா என்று ஏங்கி பெற்றெடுக்கும் பிள்ளையை கவனக் குறையாக வளர்க்க கூடாது. வாய் விட்டு எதையும் கேட்க முடியாத குழந்தைக்கு அம்மா பார்த்து பார்த்து செய்ய வேண்டும். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பால் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருத்துவத் தன்மைக் கொண்ட தாய்ப்பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும். இந்த பாலின் தன்மை வெளி உணவுகளால் கெடாமல் பார்த்து கொள்வது தாயின் கடமையாகும்.

அலர்ஜி ஏற்படுத்தும் சில உணவுகளை தாய் உட்கொள்வதால், அது குழந்தையின் பாலில் கலந்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே அந்த உணவுகள் எது என்று ஆராய்ந்து அதை தவிர்க்க வேண்டும். இந்த கடமையை செய்தாலே ஆரோக்கியமான உடலையும், வலிமையையும் குழந்தைக்கு கொடுக்க முடியும். அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலர்ஜி தரும் உணவுகள்

அலர்ஜி தரும் உணவுகள்

பெற்றோர்களுக்கு இருக்கும் அலர்ஜி குழந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குழந்தைக்கு உணவில் அலர்ஜி அதாவது ஒவ்வாமை இருக்குமெனில் அலர்ஜி தரும் உணவுகளை தவிர்த்து விடுங்கள். இதில் பால் உணவு, சோயா, முட்டையின் வெள்ளை கரு, வேர்க்கடலை, கோதுமை போன்றவை அடங்கும்.

பூண்டு

பூண்டு

உணவில் பூண்டு சேர்த்து கொள்வதால் குழைந்தையின் பாலில் அதன் வாசம் வரக்கூடும். அதுவும் உணவு எடுத்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் இந்த வாசனையை பாலில் காண முடியும். சில குழந்தைகளுக்கு இந்த வாசனை ஒற்றுக் கொள்ளாமல் போகும் என்பதால் தவிர்த்து விடுங்கள்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

எச்சில் வழிதல், டயப்பரால் வரும் எரிச்சல் போன்றவை சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்வதால் வருகின்றது. சிட்ரஸ் பழங்களில் உள்ள முழுமையடையாத G1 இவ்வகை அலர்ஜியை ஏற்படுத்தும். ஆகவே ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை தவிர்த்து, பப்பாளி மற்றும் மாங்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பாலாடைக் கட்டி, தயிர், ஐஸ் க்ரீம் போன்றவையை உட்கொண்டால் சில நேரங்களில் அவை பாலுடன் கலந்து குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வாந்தி, தூக்கமின்மை, வரட்டு இருமல் போன்றவை வரலாம்.

மீன்

மீன்

மீன் உணவில் மெர்குரி இருப்பதால் அவை குழந்தைக்கு ஒவ்வாமை மற்றும் காஸ்டிரிக் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் பால் கொடுக்கும் தாய்மார்கள் அவற்றை தவிர்த்து விடுவது நல்லது. முக்கியமாக சுறா, ஸ்வார்ட் மீன், டைல் மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

காபி

காபி

காபி அருந்துவதால் குழந்தைக்கு சில நேரங்களில் சோர்வும், தூக்கமின்மையும் வர நேரிடும். ஆகவே காபி அருந்தி குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுத்த வேண்டாம். முக்கியமாக ஆரம்பக் காலத்தில் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

மதுபானம்

மதுபானம்

மது அருந்துவதால் குழந்தைக்கு அதிக தூக்கம், மயக்கம், தளர்வு, அதிக உடல் எடை போன்றவை நேரலாம். மேலும் மது தாய் பால் சுரப்பதிலும் பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆகவே குழந்தையை நல் முறையில் வளர்க்க மது அருந்துவது வேண்டாம்.

வேர்க்கடலை

வேர்க்கடலை

வேர்கடலை சில நேரங்களில் குழந்தைக்கு நல்லதல்ல. இதை தாய் உட்கொள்வதால் குழந்தை அருந்தும் பாலால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படும் என்பதால் வேர்கடலையை தவிர்ப்பது நல்லது.

கார உணவுகள்

கார உணவுகள்

உணவில் அதிக அளவில் மசாலா மற்றும் காரத்தைக் குறைத்து கொள்ள வேண்டும். அதிக மசாலா மற்றும் காரம் குழந்தைக்கு அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே காரம் அதிகம் உல்ள மிளகு, இஞ்சி, லெமன் சாறு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

சாக்லெட்

சாக்லெட்

காபியை போன்று சாக்லெட்டிலும் அலர்ஜி ஏற்படுத்தும் தன்மை உள்ளதால், அவற்றையும் தவிர்ப்பது நல்லது. குழந்தையின் உடல் சீரான ஆரோக்கியம் பெறும் வரை சாக்லெட்டை தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Avoid Post Pregnancy

Nursing moms need to follow the prescribed food diet for your little one’s health benefit. Here goes the food diet tips to be followed by nursing mom.
Story first published: Saturday, March 1, 2014, 17:25 [IST]
Desktop Bottom Promotion