For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா?

|

இன்றைய கால கட்டத்தில் இந்தியா தான் நீரிழிவு நோயின் தலைநகரமாக திகழ்கிறது என்கிறது மருத்துவ ஆய்வறிக்கை. இன்று வரை பெரியவர்களை தாக்கி வந்த நீரிழிவு நோய் தற்போது குழந்தைகளையும் விட வில்லை. குழந்தைகளும் இந்த நீரிழிவு நோயால் பாதிப்புக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டைப்-2 நீரிழிவு குழந்தைகளுக்கிடையே அதிகளவு காணப்படுகின்றன. இது உலகெங்கிலும் உள்ள சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீரிழிவு நோயால் சிறிய இரத்த நாளங்கள், இதயம், மூளை, சிறுநீரகங்கள், கண்கள், கால்கள் மற்றும் நரம்புகள் சேதமடைகின்றன.

உலகளவில் ஆண்டுதோறும் 15 வயதிற்குட்பட்ட 80,000 குழந்தைகள் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது . இந்தியாவில், இந்தியன் ஜே எண்டோக்ரினோல் மெட்டாப், 2015 இல் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, டைப் 1 நீரிழிவு நோய் (டி 1 டிஎம்) பாதிப்பு சுமார் 97,700 குழந்தைகளை பாதித்து உள்ளதாக தெரிவித்து உள்ளது. அதே போல் டைப் 2 நீரிழிவு நோயால் கண்டறியப்பட்ட குழந்தைகளின் விகிதம் 12% மற்றும் 26.7% என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோயின் அறிகுறிகள்:

குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோயின் அறிகுறிகள்:

* சோர்வு

* உடல் எடை குறைதல்

* தாகம் அதிகரித்தல்

* அடிக்கடி சிறுநீர் கழித்தல்

* அடி வயிற்றில் வலி

* கண்பார்வை மங்குதல்

* காயங்கள் ஆற நாளாகுதல்

* அதிகப்படியான உடல் எடை

* எரிச்சல்

* நடத்தையில் மாற்றம்

நீரிழிவு நோயை எப்படி கட்டுப்பாட்டில் வைக்கலாம்?

நீரிழிவு நோயை எப்படி கட்டுப்பாட்டில் வைக்கலாம்?

வாழ்க்கை முறை மாற்றங்கள்

* முதலில் நாம் சாப்பிடும் உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

* நொறுக்கு தீனிகள், ஜங்க் புட், எண்ணெய் பலகாரங்கள் மற்றும் சர்க்கரை கலந்த பானங்களை தவிருங்கள்.

* தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். நடைப்பயிற்சி, விளையாட்டு, நடனம் மற்றும் சைக்கிளிங் ஓட்டுங்கள்.

* உடல் எடையை சீராக வைத்திருங்கள்.

* உடல் பரிசோதனை தொடர்ந்து செய்யுங்கள்.

* சுற்றுலா, ஊர் பயணம் சென்று மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பயணத்திற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

பயணத்திற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

* பயணத்திற்கு முன் உங்களுக்கு தேவையான மருந்துகள், அவசர உதவிகள், உணவு எல்லாம் தயாராக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

* முழு பயணத்திற்கும் போதுமான இன்சுலின் மற்றும் டயாபெட்டீஸ் மருந்துகளை மறக்காமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* உங்கள் பாதங்களுக்கு பொருத்தமான காலணிகளை அணிந்து செல்லுங்கள்.

* உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவை உங்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து மருந்து எடுப்பதை குறைக்கும்.

* விமான பயண டிக்கெட்டுகள், பயணத்திற்கு தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

* ஆசிரியர்கள், பள்ளியில் உதவியாளர்கள் சர்க்கரை நோய் இருக்கின்ற குழந்தையின் தேவைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். தேவையென்றால் அவர்களின் சர்க்கரை அளவை தவறாமல் பரிசோதிப்பது, நேரத்துக்கு நேரம் உணவு எடுத்துக் கொள்ளுதல், இன்சுலின் எடுத்துக் கொள்ளுதல், மருந்துகள் போன்றவற்றை பரிந்துரைக்க வேண்டும்.

* மன ரீதியான உறுதுணையையும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் உடல், உணர்ச்சி மாற்றங்கள், கல்வி மற்றும் தொழில் பிரச்சினைகள், தனியுரிமை, நம்பிக்கை மற்றும் சுதந்திர பிரச்சினைகள் ஆகியவற்றை தீர்க்க உளவியல் ரீதியான சப்போர்ட் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகள்

தடுப்பு நடவடிக்கைகள்

சர்க்கரை நோய் விழிப்புணர்வு மற்றும் அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்து கொள்வது நல்லது. ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.

* குறிப்பாக குழந்தைகளை ஓடி ஆடி விளையாட விட வேண்டும்.

* மொபைல் போன், வீடியோ கேம், டீவி, கணினி ஆகியவற்றில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும்.

* ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கத்திற்கு மாற வேண்டும்.

* உடல் எடையை அடிக்கடி பராமரித்து சீராக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Learn All About The Symptoms Of Diabetes In Children In Tamil

Learn all about the symptoms of diabetes in children. Read on...