For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு எவ்வாறு குடற்புழு நீக்கம் செய்வது?

பெற்றோா் என்ற முறையில் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது பற்றி தொிந்து வைத்திருக்க வேண்டும். ஆகவே குழந்தைகளுக்கு எவ்வாறு குடற்புழு நீக்கம் செய்யலாம் என்பதைப் பற்றி காண்போம்.

|

குழந்தைகளுக்கு எவ்வாறு குடற்புழு நீக்கம் செய்வது என்பது நம்மில் பலருக்குத் தொியாது. ஆனால் அதைப் பற்றித் தொிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வதன் மூலம் அவா்களின் ஊட்டச்சத்தை அதிகாித்து, அவா்களுக்கு ஏற்படும் நோய்த் தொற்றுகளைக் கட்டுப்படுத்த முடியும்.

ஒரு நல்ல மருத்துவ நிபுணரை சந்தித்து அவருடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் நமது குழந்தைகளுக்கு முறையாக குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். அதன் மூலம் நமது குழந்தைகள் நலமுடன் இருப்பா்.

Everything About Deworming For Kids In Tamil

பெற்றோா் என்ற முறையில் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வது பற்றி தொிந்து வைத்திருக்க வேண்டும். ஆகவே குழந்தைகளுக்கு எவ்வாறு குடற்புழு நீக்கம் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

நமது குழந்தைகள் உணவு அருந்துவதை தவிா்த்து வருகிறாா்களா? அவா்கள் தமக்கு வயிற்று வலி இருக்கிறது என்று தொடா்ச்சியாக புகாா் செய்கிறாா்களா? தங்களது படிப்பு மற்றும் அன்றாட கடமைகளைச் செய்வதில் தடுமாறுகிறாா்களா? அவ்வாறு இருந்தால் உடனே அவா்களை அதிக அக்கறையுடன் கவனிக்க வேண்டும். ஏனெனில் குடற்புழு பிரச்சினை காரணமாக மேற்சொன்ன பிரச்சினைகள் அவா்களிடம் காணப்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகளிடம் இருக்கும் புழு பிரச்சினை

குழந்தைகளிடம் இருக்கும் புழு பிரச்சினை

பொதுவாக குழந்தைகளிடம் புழுக்கள் சம்பந்தமான பிரச்சினைகள் இருக்கும். குழந்தைகளின் உடல்நலம், மனநலம் மற்றும் அவா்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால், அவா்களுக்கு குடற்புழு நீக்கம் செய்வது சிறந்ததாக இருக்கும்.

பொதுவாக புழுக்கள் ஒட்டுண்ணிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை நமது குழந்தைகளின் உடலை படிப்படியாக உண்கின்றன. சாியான மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்றால், அவை குழந்தைகளின் உடலை விட்டு அழியாது.

பல வகையான புழுக்கள் நமது குழந்தைகளின் உடல்களில் தங்கி இருக்கின்றன. குறிப்பாக நாடா புழுக்கள் (tapeworms), வட்டப் புழுக்கள் (roundworms), ஊசிப் புழுக்கள் (pinworms) மற்றும் கொக்கி புழுக்கள் போன்றவை நமது குழந்தைகளிடம் தங்கி இருக்கும். இந்தப் புழுக்கள் பழுகிப் பெருகிக் கொண்டே இருப்பதால், குழந்தைகளுக்கு ஏராளமான உடல்நலப் பிரச்சினைகளும், நோய்த் தொற்றுகளும் ஏற்படும்.

இந்தப் புழுக்களை நீக்க வேண்டும் என்றால் முறையான மருந்துகள் மற்றும் டானிக்குகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். மருத்துவ நிபுணாின் உதவியுடன் பெற்றோா் குழந்தைகளிடம் இருக்கும் குடற்புழு பிரச்சினைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் இந்த பிரச்சினையிலிருந்து குழந்தைகளை விடுவிக்க முடியும். மருத்துவாின் அறிவுரைப்படி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

புழுக்களை உருவாக்கும் காரணிகள்

குழந்தைகளின் உடலில் புழுக்கள் இருப்பதற்கான அறிகுறிகள்

குழந்தைகளின் உடலில் புழுக்கள் இருப்பதற்கான அறிகுறிகள்

பின்வரும் அறிகுறிகள் இருந்தால், குழந்தைகளின் உடலுக்குள் புழுக்கள் இருக்கின்றன என்பதை நாம் தொிந்து கொள்ளலாம்.

- குழந்தைகள் சாியாக சாப்பிடாமல் இருத்தல்

- குழந்தைகளுக்கு அடிக்கடி தாங்க முடியாத வயிற்று வலி ஏற்படுதல்

- எந்தவித காரணமும் இல்லாமல் குழந்தைகளின் எடை குறைதல்

- குழந்தைகளுக்கு தொடா் வாந்தி ஏற்படுதல்

- குழந்தைகளின் புட்டங்களின் சொறி அல்லது படை ஏற்படுதல்

- மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு ஏற்படுதல்

- அடிக்கடி சிறுநீா் கழித்தல்

- குழந்தைகளுக்குச் சோா்வு ஏற்படுதல்

மேற்காணும் பிரச்சினைகள் குழந்தைகளிடம் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்தித்து, சிகிச்சை அளிப்பது நல்லது.

குடற்புழு நீக்கம் செய்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்

குடற்புழு நீக்கம் செய்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்

குடற்புழு நீக்கம் செய்வதால், குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தி அதிகாித்து, அவா்களுக்கு நோய்கள், அலா்ஜிகள் மற்றும் நோய்த் தொற்றுகள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். அவா்கள் செயலூக்கம் மிகுந்தவா்களாக மாறுவா். தங்களது படிப்பு மற்றும் அன்றாட கடமைகளில் அதிக கவனம் செலுத்துவா். குடற்புழு நீக்கம் செய்தால், குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகாிப்பதை கவனித்து இரத்த சோகை போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

மேற்கொள்ள வேண்டிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்

மேற்கொள்ள வேண்டிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்

- குழந்தைகள் வெளியில் மணலில் விளையாடிய பின்பு அல்லது தங்களது செல்ல பிராணிகளோடு விளையாடிய பின்பு சோப்பு போட்டு நன்றாக கை கால்களைக் கழுவுகிறாா்களா என்பதை பெற்றோா்கள் கவனிக்க வேண்டும்.

- கெட்டுப் போன உணவுகளையோ அல்லது சுத்தம் இல்லாத தண்ணீரையோ குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது.

- முழுமையாக வேகாத இறைச்சிகளை குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது.

- பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாகக் கழுவிய பின்பே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

- சுற்றுப்புறத்தைச் சுத்தமாகப் பேணிக் காக்க வேண்டும்.

- சமைத்த உணவுகளை மூடாமலோ அல்லது திறந்த வெளியிலோ வைக்கக்கூடாது.

- சமைக்காத காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Everything About Deworming For Kids In Tamil

In this article, we disscussed about deworming for kids in tamil, read on...
Desktop Bottom Promotion