டெல்லி மாணவி தற்கொலை, ரூ.500-ல் வந்த வினை!

Posted By:
Subscribe to Boldsky

தென் டெல்லி பகுதியை சேர்ந்த பூஜா எனும் 15 வயதுமிக்க இளம் பெண், தனது தோழியின் வீட்டில் நடக்கவிருந்த பார்ட்டிக்கு செல்ல அம்மா 500 ரூபாய் தராத காரணத்தால் தற்கொலை செய்துக் கொண்டதாக அறியப்படுகிறது.

டெல்லியின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் இடம் பாலம் (Palam). இங்கு தான் பூஜாவும், அவரது தாயும் வசித்து வருகிறார்கள். எப்போதும் போல வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது தன் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார் பூஜாவின் தாய்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தற்கொலை!

தற்கொலை!

சம்பவம் நடந்த அன்று மாலை நண்பரின் பார்ட்டிக்கு செல்ல ரூ.500 கேட்டுள்ளார் பூஜா. பள்ளி முடித்து 3 மணியளவில் வீடு திரும்பிய பூஜாவை, 4.15 மணியளவில் கடைசியாக பார்த்ததாக அக்கம்பக்கத்து வீட்டார் கூறுகின்றனர்.

பூஜாவின் அம்மா ஆறு மணியளவில் வீடு வந்தடைந்த போது தான் பூஜா தனது துப்பாட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டது அறியவந்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

பணம்!

பணம்!

இன்று பணம் என்ற ஒன்று தான் உலகை இயக்கி வருகிறது. இது கிடைக்காத பட்சத்தில் சிலர் மனம் உடைந்து போகிறார்கள், சிலர் தீய பாதையை தேர்வு செய்கிறார்கள்.

குழந்தைகளை வளர்க்கும் போதே பணத்தின் அருமை, அதன் மதிப்பு, கேளிக்கையை தாண்டி இருக்கும் வாழ்வியல் குறித்த பண்புகளை பெற்றோர் கற்பித்து வளர்க்கும் பட்சத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புகளை குறைக்க முடியும்.

வெட்டவெளிச்சம்!

வெட்டவெளிச்சம்!

முன்பு பணக்கார வாழ்க்கை என்பது, அவர்களது கேளிக்கை, வாடிக்கை, ஆடம்பர வாழ்க்கை பேச்சு வழக்கில் தான் வெளி உலகத்திற்கு தெரிந்து வந்தது. ஆனால், இன்று யார் எப்படி வாழ்கிறார்கள், எப்படி பணத்தை செலவு செய்கிறார்கள், பணம் இல்லாததால் நாம் இழப்பவை என்னென்ன என்று சமூக தளங்களில் நாம் கண்கூட பார்க்கிறோம்.

இது குழந்தைகள் மத்தியில் ஆசை அதிகரிக்க, தாங்களும் அது போன்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்க காரணியாக இருக்கிறது.

வாழ்வியல் பாடம்!

வாழ்வியல் பாடம்!

அறிவியல், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களோடு வாழ்வியல் குறித்த பாடங்கள் மிக அழுத்தமாக, ஆழமாக கற்ப்பிக்க வேண்டும். வாழ்வியல் மற்றும் வாழ்க்கையின் மதிப்பு, அதன் புரிதல் வெகுவாக இல்லாத சூழலில் தான் இன்றைய குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள். அதனால், பல சீரியஸான விஷயங்களை கூட பலர் கேளிக்கையாக எடுத்துக் கொள்கிறார்கள்.

பாட்டி, தாத்தா மிஸ்ஸிங்!

பாட்டி, தாத்தா மிஸ்ஸிங்!

வீட்டில் பாட்டி, தாத்தா இருந்த வரை இது போன்ற சம்பவங்கள் பெரிதாய் நடந்ததே இல்லை. நல்ல கருத்துக்கள், நல்ல உறவுகள் பகிரும் நபர்களாக அவர்கள் இருந்தனர். இன்று அப்பா, அம்மாவிற்கும் அதற்கான நேரமில்லை, பாட்டி, தாத்தாக்கள் வீட்டிலேயே இல்லை.

இது போன்ற தற்கொலை சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் இருக்க, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்வியலை நன்கு கற்பித்து வளர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Teen From Delhi Commits Suicide After Mother Fails To Give Her Rs 500 For Party

A Teen From Delhi Commits Suicide After Mother Fails To Give Her Rs 500 For Party
Subscribe Newsletter